காசி பயணம் – வாரணாசி கோவில்கள், காட்டுகள், ஆரத்தி தரிசனம்!

காசி பயணம் – வாரணாசி கோவில்கள், காட்டுகள், ஆரத்தி தரிசனம்!

வாரணாசி - சனாதன் கௌடியா மடம், சோனார்புரா

வாரணாசி – சனாதன் கௌடியா மடம், சோனார்புரா

28-08-2014 (வியாழக் கிழமை):  பிரயாகைக்குப் பிறகு, காசியில் எங்களது பயணம் தொடர்ந்தது. வருண் மற்றும் அஸி என்ற இரு நதிகள் கலக்கும் இடத்தில், இந்நகர் இருப்பதினால் “வாரணாசி” என்றும் அழைக்கப்படுகிறது. வாரணாசியில் சோனார்பூர் என்ற இடத்தில் உள்ள ஶ்ரீ சனாதன் கௌடியா மடத்தில் தங்கினோம். காலையில் குளியல் முதலியவற்றை முடித்துக் கொண்டு தசஸ்வமேத காட்டிற்குப் புறப்பட்டோம். காசி விஸ்வநாதர் அல்லது விஸ்வேஸ்வரர், உலகத்தை ஆளும் ஈஸ்வரர் என்ற பொருளில் உள்ள சிவனது கோவில் [काशी विश्वनाथ मंदिर]  உத்திரபிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் இருந்ததற்கான 3500 ஆண்டுகளுக்கும் மேலான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. உலகத்திலேயே மிகவும் தொன்மையான நகரம் என்றும் வழங்கப்படுகிறது[1]. இங்குள்ள லிங்கம் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும்[2]. இந்துக்கள் எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. கங்கைக் கரையில் உள்ள “காட்” படிகட்டுகள் அமைந்த நதிக்கரைகளில் உள்ள இடங்களுக்கு வந்து, கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. காசிக்குச் சென்ற பிறகு ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும் என்ற பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது. எல்லா மகான்களும் இங்கு காலங்காலமாக வந்து சென்றுள்ளனர். கல்விக்கும் சிறந்த நகரமாக இருந்து வந்துள்ளது. பண்டிதர்கள் எப்பொழுதும் இங்கு வந்து வாதத்தில் ஈடுபடுவர், அறிவைப் பெருக்கிக் கொள்வர். பொதுவாக ஏதாவது சந்தேகம் வந்தால், காசியில் உள்ள பண்டிதர்களிடம் கேட்டறிவது என்ற வழக்கமும் இருந்தது. அதனால், காசிக்குப் போகிறேன் என்றால், சந்நியாசத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்றாகாது[3].

வாரணாசி - ஶ்ரீ சனாதன் கௌடியா மடம், சோனார்புரா.

வாரணாசி – ஶ்ரீ சனாதன் கௌடியா மடம், சோனார்புரா.

இதோ ஒவ்வொருவராகப் புறப்பட்டு விட்டாகியது!

வாரணாசி - சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரி

வாரணாசி – சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரி

வாரணாசி – சனாதன் கௌடியா மடம் ஒரு இலவச ஆஸ்பத்திரியை நடத்தி வருகின்றது.

வாரணாசி - சனாதன் கௌதியா மட்

வாரணாசி – சனாதன் கௌதியா மட்

இதில் உள்ளூர் மக்கள் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெருமளவில் வந்து பலனடைகிறார்கள்.

வாரணாசி - சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரிக்கு வரும் முஸ்லிம்கள்

வாரணாசி – சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரிக்கு வரும் முஸ்லிம்கள்

வாரணாசி – சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரிக்கு வரும் முஸ்லிம்கள்

வாரணாசி - சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரிக்கு முஸ்லிம்கள் வருவது

வாரணாசி – சனாதன் கௌடியா மடம் இலவச ஆஸ்பத்திரிக்கு முஸ்லிம்கள் வருவது

காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் உள்ள சம்பந்தம்: 2009ல் காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லதுகாசி நகரத்தின் மறுபக்கம்
நிஜம் நிகழ்ச்சியில் சன் செய்திகள் 06-11-2009 அன்று இரவு 10 முதல் 10.30 வரை என்று சன்–டிவியினர் அபத்தமான முறையில் காசியைப் பற்றி அவதூறாக நிகழ்சியை ஒலி-ஒளிபரப்பியது[4]. “அக்காலத்தில் கஷ்டப்பட்டுதான் காசிக்குச் செல்வார்கள். மாட்டு வண்டியில் செல்வார்கள். அப்படி செல்பவர்கள் திரும்பி வரலாம் அல்லது இல்லை. ஆகையால், காசிக்குச் சென்றவர்கள், பிரயாகைக்குச் சென்று மண்ணை எடுத்துவந்து, ராமேஸ்வரத்தில் சிரார்த்தத்தை முடித்தால்தான் முழுமை ஏற்படும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியதனால் அவர்கள் திரும்பி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அப்பொழுது தங்களது குடும்பத்தினரைப் பர்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததால், மறுபடியும் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தனர்”, என்றெல்லாம் ஒருவர் மூலம் விளக்கத்தைப் பெற்று சேர்த்துள்ளனர்! பாவம், ஆயிரக் கணக்கான் ஏன் லட்சக் கணக்கான சாமியார்கள், யோகிகள் முதலியோர் காசி சென்று குடும்பம் இல்லாமலேயே ஏன் திரும்பி வந்தனர் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை போலும்! பாரத ஒருமைப்பாட்டினை மக்கள் காலம்-காலமாக நினைவில் வைத்துக் கொள்ள்வேண்டும் என்று தான் இத்தகைய தீர்த்தயாத்திரை முறைகளை வைத்தனர். முகலாயர் காலத்தில் ஜெசியா வரி மூலமும் மற்ற அடக்குமுறைகள் மூலம் இத்தகைய தீர்த்தயாத்திரைகளைத் தடுக்க முயன்றனர். ஆனால், மக்களால் மேற்கொள்ளப்படும் அவற்றை யாராலும் நிறுத்த முடியாமல் உள்ளது.

gyanvapi-mosque-in colour

gyanvapi-mosque-in colour

சோம்நாத் போலவே காசி விஸ்வநாதர் கோவில் முகமதியர்களால் பலமுறை இடிக்கப்பட்டது, இந்துக்கள் மறுபடிமறுபடி கட்டியது: மெக்காவில் அல்-லஹ் என்கின்ற கோவிலை முகமது அழித்து விட்டதால், இவை கிழக்கு திசையில் இந்தியாவில் தான் அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்கின்ற அல்லாவின் மகள்களின் கோவில்கள் இருப்பதாக முகமதியர்கள் நம்பினர். சோம்நாத் தான் அல்-லத் என்று கருத்தி அதனை பலமுறைத் தாக்கி அழித்தனர். அதுபோலவே, அடுத்தது இக்கோவில் அவர்களது இலக்கானது. இக்கோவில் 1194 CEல் முதன் முதலில் குத்ப்-உத்-தின்–ஐபக், குத்புத்தீன் ஐபக் என்பனால்  அழிக்கப்பட்டது. பிறகு ஒரு குஜராத்தி வணிகரால் இக்கோவில் மறுபடியும் இல்டாமிஷ் காலத்தில் [Shamsuddin Iltumish (1211-1266 CE)] கட்டப்பட்டது. ஆனால், மறுபடியும் ஹுஸைன் ஷா சர்கி என்பவனால் [Hussain Shah Sharqi (1447-1458) 15ம் நூற்றாண்டிலும், சிக்கந்தர் லோடியால் [Sikandar Lodhi (1489-1517)] 16ம் நூற்றாண்டிலும் இடிக்கப்பட்டது. ராஜா மான் சிங் என்பரால் அக்பர் காலத்தில் மறுபடியும் கட்டப்பட்டது. ஆனால், இவர் முகமதியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டதால், அக்கோவில் ஒதுக்கப்பட்டது, பிறகு முகமதியரால் இடிக்கப்பட்டது. பிறகு ராஜா தோடர் மால் என்பவர் 1585ல் அக்கோவில் இருந்த அதே இடத்தில் கட்டினார். இக்கோவிலைத் தான் பாபரால் 1669CEல் ஆண்டு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டது.  இன்றும் அம்மசூதியின் சுவர்கள், தளம், அஸ்திவாரம் முதலியவை கோவில் பகுதிகள் என்று தாராளமாக பார்க்கலாம்.

Gyanvapi mosque with temple structures visible- old photo

Gyanvapi mosque with temple structures visible- old photo

இது ஞானவாபி மசூதியின் இன்னொருப் பக்கத் தோற்றம்.

Vishveshvar Temple, Varanasi, James prinsep-gyanvapi

Vishveshvar Temple, Varanasi, James prinsep-gyanvapi

1880ல் ஜேம்ஸ் பிரின்செப் என்பரின் வரைந்த ஓவியத்தில் காணப்படும் விஸ்வேஸ்வர் கோவில்!

Kasi temple old photo

Kasi temple old photo

ராணி அஹல்யாபாய் இப்பொழுதைய கோவிலை கட்டியது (1780 CE): ஹோல்கர் இந்தூரைச் சேர்ந்த அஹல்யாபாய் ஹோல்கர் என்ற ராணி இப்பொழுதுள்ள கோவிலை 1780CEல் கட்டுவித்தார். மஹாராஜா ரஞ்சித் சிங் இக்கோவிலுக்கு தங்கத்தை அளித்தார். 1833-1840 ஆண்டுகளில் ஞான வாபி, காட்டுகளின் படிகட்டுகள், மற்ற கோவில்கள் சீரமைத்துக் கட்டப்பட்டன. இக்கோவில் வளாகத்தில் காலபைரவர், தண்டபாணி, அவிமுக்தேஸ்வரர், விஷ்ணு, வினாயகர், சனீஸ்வரர், விரிபாக்ஷா, விருபாக்ஷா கௌரி என்று சிறுசிறு கோவில்கள் / சன்னிதிகள் உள்ளன. கோவில் சுற்றிலும் இடம் இருந்தது, ஞான வாபி[5], ஞானத்தின் கிணறு என்று கோவிலின் வடக்குப்புறத்தில் மசூதிக்கும் கோவிலுக்கும் இடையில் உள்ளது. அதாவது முந்தைய கோவிலின் தென்மேற்குப் பகுதியில் இருந்தது, இப்பொழுது வடக்கில் உள்ளது. முகமதியர்கள் இக்கோவிலைத் தாக்கியபோது, ஜோதிர் லிங்கத்துடன் இந்த கிணறில் குதித்து விட்டதாக நம்பப்படுகிறது. அதாவது, சாதாரண மக்கள் கூட, விக்கிரகத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருந்தார்கள் என்று இது எடுத்துக் காட்டுகிறது. இன்றோ நாத்திகம் பேசி மக்களை திசைத்திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Manikarnika Ghat varanasi

Manikarnika Ghat varanasi

மணிகர்னிகா காட்டின் தோற்றம் – பழையப் புகைப்படம்.

Kashi Viswanath Linga, present one

Kashi Viswanath Linga, present one

இப்பொழுதுள்ள லிங்கம் – யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்யலாம், பாலபிஷேகம் முதலியவை செய்யலாம்!

Madhoray ghat, James prinsep-dharhara-minar

Madhoray ghat, James prinsep-dharhara-minar

மாதவ்ரே காட் என்ற இடத்தில் இந்துகட்டிடங்களை ஒட்டி கட்டப்பட்டுள்ள மினாரெட்டுகள் – ஜேம்ஸ் பிரின்செப்பின் ஓவியம், 1880.

Areal view of Gyana vapi mosque and Viswanatha temple, Kasi

Areal view of Gyana vapi mosque and Viswanatha temple, Kasi

இது ஞானவாபி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் அமைப்பைக் காட்டுகிறது.

Benares_well-Gyanawapi

Benares_well-Gyanawapi

ஞானவாபி என்ற கிணறின் தோற்றம் – பழைய புகைப்படம்.

gyanvapi-mantap now in mosque 1880 picture

gyanvapi-mantap now in mosque 1880 picture

மண்டபம், இப்பொழுது மசூதியில் உள்ளது.

Gyanvapi Nandi facing mosque

Gyanvapi Nandi facing mosque

மண்டபத்தை ஒட்டிய மசூதி, மசூதியைப் பார்த்து இருக்கும் நந்தி.

Gyanvapi Nandi facing mosque - yet another view.

Gyanvapi Nandi facing mosque – yet another view.

இப்பொழுதிருக்கும் கோவிலுக்கு எதிராக பார்க்கும் நந்தி!

Gyanvapi Nandi facing mosque - another view

Gyanvapi Nandi facing mosque – another view

1780 CE ல் கட்டிய கோவில் கட்டிட அமைப்பு, சுற்றுப்புறம் மாறிவருவது: கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் இப்பொழுது கடைகளால் ஆக்கிரமிக்கப் பட்டு, சிறிய சந்துகள் மூலம் தான் இக்கோவிலை அடைய முடிகிறது. 1980கள் வரை கோவில் சுவர்களின் மீது கட்டப்பட்ட அந்த மசூதி அனைவருக்கும் தெரிந்தபடி இருந்து வந்தது.  ராஜிவ் காந்தி 1991ல் ஒரு சட்டத்தை எடுத்து வந்ததால்[6], இம்மசூதிக்கு சிறப்பு பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. 1992க்குப் பிறகு, மசூதி சுற்றி இரும்பு பைப்புகள், வேலிகள் போட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது[7]. அதேபோல, கோவிலும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு, கடினமான சோதனைக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.  1990களில் கோவிலின் பின்புறம் இருந்த நந்தி முதலியவற்றைப் பார்க்க முடிந்தது. நந்தி மசூதியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அதாவது, லிங்கம் இருந்த திசையை நோக்கி பார்த்தபடி இருந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் இப்பொழுது, சுவர் எழுப்பி அதனை தனியாக இருக்கும் படி செய்து விட்டார்கள். அதனைப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, எந்த வாசலில் இருந்து உள்ளே பக்தர்கள் வந்தார்களோ, அதே வழியில் திரும்பச் செல்லவேண்டும்.

பாதுகாப்பு பெயரில் பக்தர்களுக்கு தொல்லை, தொந்தரவு முதலியன: சோதனை என்ற பெயரில் இப்பொழுது பக்தர்கள் பலவிதங்களில் தொந்தரவு படுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப் படுகிறார்கள். பெண்கள் தலையில் ஹேர்பின், பூ எல்லாம் கூட வைத்துக் கொண்டு வரக்கூடாது என்று எடுக்கச் சொல்கின்றனர். ஆண்கள் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் (பெல்ட், பர்ஸ் போன்றவை), செல்போன் மற்ற மின்னணூ சாதனங்கள், முதலியவற்றுடன் நுழையமுடியாது. தினமும் சுமார் 5,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேச நாட்களில் ஒரு லட்சத்தையும் தாண்டி விடுகிறது.  இங்கு ஆரத்தி என்பது பிரசித்தியானது.

  1. மங்கள ஆரத்தி காலை 00 – 4.00 மணி அளவில்
  2. போக் ஆரத்தி மதியம் – 15 to 12.20 .
  3. சந்தியா ஆரத்தி மாலை – 00 to 8.15 .
  4. ஷிருங்கார் ஆரத்தி – இரவு :- 9.00 to 10.15.
  5. சயன ஆரத்தி – இரவு -30-11.00

உண்மையில் ஆரத்தி என்பது விக்கிரத்திற்கு தூப-தீபங்கள் காட்டும் போது, எல்லா மக்களும் சேர்ந்து பஜனை பாடும் நிகழ்சியாகும். வடவிந்தியாவில் பக்தர்கள் நிறைபேர், ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொள்வார்கள்.

தசஸ்வமேத காட் ( दशाश्वमेध घाट): பிரம்மா இந்த இடத்தை உண்டாக்கிய பிறகு சிவனை இங்கு அழைத்தார் மற்றும் பிரம்மா இங்கு பத்து அசுவமேத யாகங்களை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. 1737ல் ஜெய்பூரைச் சேர்ந்த மஹாராஜா ஜெய்சிங் இங்கு ஒரு வானியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் சோதனை கூடம் (Jantar Mantar, an observatory) நிறுவினார்[8]. இது காசியில் மிகவும் பிரசித்தியான காட் ஆகும், ஏனெனில், மாலையில் இங்கு நடக்கும் “அக்னி பூஜை” எனப்படுகின்ற ஆரத்தியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இதில் அந்நிய நாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இளம் பூஜாரிகள் மாலையிலிருந்தே ஏற்பாடுகள் செய்கிறார்கள்.  டிசம்பர் 7, 2010 அன்று இந்தியன் முஜாஹித்தீன் தீவிரவாதிகள் ஆரத்தியின் போது குண்டுவைத்து வெடித்ததில் இரு பேர் கொல்லப்பட்டனர், 37 பேர் – 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட – காயமடைந்தனர்[9]. இது முகமதியர் இடைக்காலத்தில் இங்கு எப்படி தாக்குதல் நடத்தி வந்தனரோ அதுபோல உள்ளது. முன்பு, குதிரைகளில் கத்தி முதலிய ஆயுதங்களுடன் வந்து தாக்கினர் என்றால், இக்காலத்தில், கோழைகள் போல மறைந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். இருப்பினும், ஆரத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.

வேதபிரகாஷ்

© 21-06-2015

[1]  அகழ்வாய்வு நிபுணர்கள் பொதுவாக நெடுஅகழ்வுமுறை (Vertical excavation) மற்றும் கிடக்கு-அகழ்வுமுறை (Horizontal excavation) என்று இருவிதங்களில் பூமியைத் தோண்டி, கடைத்த ஆதாரங்கள் ஆதாரங்கள் கொண்டு சரித்திரம் எழுத உதவுகிறார்கள். ஆனால், காசி போன்ற நகரங்களில் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து கொண்டே வருவதாலும், அத்தகைய வாழ்விடங்கள் நெருக்கமாக இருப்பதாலும், இங்கு கிடக்கு-அகழ்வுமுறை மேஏர்கொள்ள முடியாது. ஆனால், அதற்காக ஆதாரங்கள் இல்லை என்று சொல்லமுடியாது.

[2] உண்மையான லிங்கம், இக்கோவில் முகமதியர்களால் 1194 CEல் தாக்கப்பட்டபோது,  குத்புதீன் ஐபக்கினால் உடைக்கப்பட்டது.

[3]  திருமணங்களில் காசி யாத்திரை குறித்து, சிலர் கிண்டலடித்து எழுதியிருந்தார்கள். உண்மையில், திருமணம் ஆனாலும் காசிக்குச் சென்று அறிவைப் பெறலாம் மற்றும் காசியில் காசியில் சிவராத்திரி மற்றும் ரங்பரி ஏகாதசி அன்று சிவன் – பார்வதி திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உள்ளது.

[4]https://dravidianatheism.wordpress.com/2009/11/07/%E2%80%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D/

[5]  http://www.harappa.com/hawkshaw/37.html

[6] The mosque receives protection under the Places of Worship (Special Provisions) Act, 1991

[7] In the 1990s, the Vishwa Hindu Parishad (VHP) campaigned to reclaim the sites of the mosques constructed after demolition of Hindu temples. After the demolition of the Babri mosque in December 1992, about a thousand policemen were deployed to prevent a similar incident at the Gyanvapi mosque site.

[8] The palace of Jai Singh overlooking Man Mandir Ghat on the Ganges River. The observatory is on the skyline at the right of the photograph behind the wall. The observatory at Varanasi is spectacularly located overlooking the bathing ghats on the Ganges; it is next to the Dasaswamedh Ghat, one of the more popular and important ghats in Varanasi. The observatory sits high above the water next to the palace that Jai Singh built there. The instruments are small, compared to those at Jaipur and Delhi, and few in number, but there is a very nice equatorial sundial in working order. http://users.hartwick.edu/hartleyc/jantar.htm

[9] On 7 December 2010 a low-intensity blast rocked the southern end of the aarti at the Sitla Ghat. This killed 2 people and injured 37 including 6 foreign tourists, and the Indian Mujahideen claimed responsibility for it. http://indiatoday.intoday.in/story/varanasi-blast-triggers-a-blame-game/1/122574.html

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அக்பர், அஸி, அஹல்யா பாய், ஆரத்தி, ஔரங்கசீப், கங்கை, காசி, குத்புதீன், ஜோதிலிங்கம், ஞான வாபி, ஞானவாபி, தசஸ்வமேத, படிகட்டுகள், மசூதி, யமுனை, ராமேஸ்வரம், வருண், வாரணாசி, விஸ்வநாதர், ஹோல்கர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s