திருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (2)

திருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை  அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (2)

19. Tirukkadaiyur temple- inner prakara on RHS

19. Tirukkadaiyur temple- inner prakara on RHS

கர்பகிருஹத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியே வந்தால், சுற்றி வர வழி.

மயானமும், காசி தீர்த்தமும் (கங்கை நீர்)[1]: திருக்கடவூர் மயானம்திருமயானம்) / திருமெய்ஞ்ஞானம் என்ற இன்னொரு சிவன் கோவில் திருக்கடவூருக்கு நேர்கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில்வரை பேருந்து, கார் செல்லும். மயிலாடுதுறை – வேப்பஞ்சேரி நகரப்பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. கோயிலைச் சுற்றிச் சில வீடுகளே உள்ளன. சிவபெருமான் பிரமனை நீறாக்கி, மீண்டும் உயிர்ப்பித்து, அவருக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலம். பிரமன் வழிபட்ட தலம் என்று கருதப்படுகிறது. பழைமையான கோவில். போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. கோயிலுள் உள்ள மூர்த்திகளும் மிகப் பழைமையானவை. ஒரு சில பழுதடைந்தும் உள்ளன[2]. இக்கோவிலின் இறைவன் – பிரமபுரீசுவரர் மற்றும் இறைவி – மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி ஆவர். பழைய நூலில் ‘அமலக்குய மின்னம்மை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தீர்த்தம் – காசி தீர்த்தம் என்றும் மூவர் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது. இத்தீர்த்தத்திலிருந்துதான் நாள் தோறும் திருக்கடவூர்ப் பெருமானுக்குத் திருமஞ்சனத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. ராஜகோபுரமில்லாமல் முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டும் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. “கடவூர் தீர்த்தக்கிணறு” எனப்படும் “காசி தீர்த்தம்” கோயிலுக்குப் பக்கத்தில் – தென்புறத்தில், சற்றுத் தொலைவில் வயல்களின் மத்தியில் நாற்புறச் சுவர்கள் சூழ நடுவில் கிணறு வடிவில் உள்ளது. இங்கிருந்து கடவூருக்குத் தண்ணீர் வண்டியில் கொண்டு போகப்படுகிறது. மார்க்கண்டேயருக்காக, பங்குனிமாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் ‘அசுவினி தீர்த்தம்’ எனவும் வழங்கப்படுகின்றது. இந்த ஐதீகப்படி, பங்குனி அசுவினி நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

20. Tirukkadaiyur temple- LHS

20. Tirukkadaiyur temple- LHS

60 முதல் 100 வரை கொண்டாட்டங்கள்[3]: உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள். 50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். இச்சடங்குகளைக் கொண்டாட பலர் தயாராக உள்ளனர். பெரிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கவர்னர், முதலமைச்சர் என்று பலர் வருவதால், புரோகித வேலையும் அமோகமாக நடக்கிறது. சிலர் இணைத்தளம் வைத்துக் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள்[4]. புரோகிதர்களை அமைத்துக் கொள்ளவும் இணைதளம் உள்ளது[5].  சிலர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்கின்றனர்[6]. இவையெல்லாம் அதிகமாகி வருவதால், தங்க ஓட்டல்கள் முதலியன கட்டப்பட்டு வருகின்றன.

21. Tirukkadaiyur temple- backside

21. Tirukkadaiyur temple- backside-

கோவிலின் பின்பக்கத்திற்கு செல்கிறோம். அங்கிருந்து பார்க்கும் தோற்றம்.

வயதானவர்களை, பெரியவர்களை மரியாதை செய்ய, மதிக்க கொண்டாடும் விழாக்கள்: இக்காலத்தில் பெரியவர்களை, வயதானவர்களை மதிக்கும் நிலை போய் விட்டது. மரியாதை செய்வது என்பது மறந்தே போய்விட்டது. சினிமா-ஊடக வசனங்களினால், அவர்கள் நிலை கேலிக்குரியதாகி விட்டது. பெற்றோர்களை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ள போது, தாத்தா-பாட்டி போன்றோரை யார் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 1960களில் வரை குடும்பங்களில் கொள்ளு தாத்தா-பாட்டி முதலியவர்களும் இருந்தார்கள், தங்களது கொள்ளு பேரன்-பேத்திகளை  கொஞ்சி மகிழ்ந்தார்கள்ளிப்பொழுது யாரையும் மதிப்பதில்லை, நினைப்பதில்லை. அந்நிலையில் 60 முதல் 100 வயது வரையிலுள்ளவர்கள் இவ்விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதனை விட, அவ்வாறான வயதானவர்களை, பெரியவர்களை மரியாதை செய்ய, மதிக்க கொண்டாடும் விழாக்கள் இவை என்று அறிந்து கொள்ளலாம்.

22. Tirukkadaiyur temple- backside- lingotbavar

22. Tirukkadaiyur temple- backside- lingotbavar – லிங்கோத்பவர் பின்புறத்தில்

  • 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.
  • 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.
  • 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.
  • 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.
  • 90 வயது நிறைவானால் கனகாபிஷேகம் (90 வயது நிறைவு),
  • 100 வயது நிரைந்தால் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி),
22. Tirukkadaiyur temple- backside- Yama punished by Shiva

22. Tirukkadaiyur temple- backside- Yama punished by Shiva –

பின்பக்கத்தில் மார்க்கண்டேயனை யமனிடமிருந்த காப்பாற்றிய சிலையை பக்தர்கள் வியப்பாகப் பார்க்கிறார்கள்.

பெற்றோர் அல்லது மாமனார்மாமியார் நிலை: இக்காலத்தில் கூட்டுக் குடும்பம் (Joint family) உடைந்து, கணவன் – மனைவி தான் குடும்பம் (Nuclear family) என்றளவில் வந்து முடிந்துள்ளது. அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாலும், குழந்தை காப்பகம், சிறுவர்-சிறுமியர் காப்பகம் என்று வைத்து விட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வேலைக்குச் சென்று விடுகின்றனர். இங்கு கூட, பணக்காரர்களாக இருப்பவர்கள், குடும்பத்தோடு வந்து, இரண்டு-மூன்று நாட்கள் வந்திருந்து, சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு தத்தம் இடங்களுக்குப் பறந்து சென்று விடுகின்றனர். இவையெல்லாம் எப்படி பந்த-பாசங்களை வைத்திருக்கும், வளர்க்கும் என்று தெரியவில்லை. அப்பெரியவர்கள் இறந்தால் கூட, இப்படித்தான் கடமைக்காகக் கூட்டமாக வந்து விட்டு மறைந்து விடுகின்றனர். பணக்காரப் பிள்ளைகள், மாப்பிள்ளைகள் (மனைவிமார் வற்புறுத்தல் பேரில்) இவ்வாறு கொண்டாடி விட்டு, பிறகு பெற்றோர் அல்லது மாமனார்- மாமியார் இவர்களை ஒன்று மறுபடியும் தனியாக விட்டு-விட்டுச் செல்கின்றனர்; முதியோர் இல்லங்களில் விட்டு-விட்டுச் செல்கின்றனர்; அல்லது தம்முடன் பேரன் – பேத்திகளை கவனித்துக் கொள்ள (ஆயா வேலை என்றும் சொல்வர்) அயல்நாடுகளுக்கே அழைத்துச் சென்று விடுகின்றனர். ஆனால், அவர்களுக்கோ இந்தியாவில் இருக்க வேண்டும், இறக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டுதான் உள்ளது.

உள்ளே சுற்றி வெளி பிரகாரம் உள்ளது. அதில் பல விக்கிரங்கள் வைக்கப் பட்டுள்ளன.

22. Tirukkadaiyur temple- backside many murtis kept- protecting deity.2

22. Tirukkadaiyur temple- backside many murtis kept- protecting deity.2

உள்ளே சுற்றி வெளி பிரகாரம் உள்ளது. அதில் பல விக்கிரங்கள் வைக்கப் பட்டுள்ளன.

23. Tirukkadaiyur temple- backside many murtis kept in veliprakaram

23. Tirukkadaiyur temple- backside many murtis kept in veliprakaram

ஒரு கையில் சூலம், மறு கையில் கதை போன்ற ஆயுதத்துடன் காட்சியளிக்கும் தெய்வம்.

24. Tirukkadaiyur temple- protecting deity- RHS

24. Tirukkadaiyur temple- protecting deity- RHS

உள்ளே சுற்றி வெளி பிரகாரம் உள்ளது. அதில் பல விக்கிரங்கள் வைக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து செல்கிறோம்.

25. Tirukkadaiyur temple- backside many murtis kept- protecting deity

25. Tirukkadaiyur temple- backside many murtis kept- protecting deity

மூலையில் லிங்கம், நால்வர் முதலிய விக்கிரங்கள் உள்ளன.

26. Tirukkadaiyur temple- Idols-murthis kept on RHS

26. Tirukkadaiyur temple- Idols-murthis kept on RHS

நால்வர்.

27. Tirukkadaiyur temple- Idols-murthis kept on RHS.3

27. Tirukkadaiyur temple- Idols-murthis kept on RHS.3

தொடர்ந்து மற்ற விக்கிரங்கள்.

28. Tirukkadaiyur temple- Idols-murtis of Nalvar kept in veliprakaram RHS.

28. Tirukkadaiyur temple- Idols-murtis of Nalvar kept in veliprakaram RHS.

தொடர்ந்து மற்ற விக்கிரங்கள்.  ரிஷிகள், முனிகள்………….

29. Tirukkadaiyur temple- Idols-murtis kept in veliprakaram RHS

29. Tirukkadaiyur temple- Idols-murtis kept in veliprakaram RHS

இவர்களைத் தொடர்ந்து சப்த மாதர் விக்கிரங்கள்.

30 Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas  in veliprakaram RHS.

30 Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas in veliprakaram RHS.

சப்தமாதர் விக்கிரங்கள்.

31. Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas  in veliprakaram RHS.1

31. Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas in veliprakaram RHS.1

சப்தமாதர் விக்கிரங்கள் தாண்டி மற்ற விக்கிரங்கள்.- வினாயகர், வராஹி……..

31. Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas  in veliprakaram RHS.2

31. Tirukkadaiyur temple- Idols-murtis of Sapta mathas in veliprakaram RHS.2

63 நாயன்மார்களின் விக்கிரங்கள்.

32. Tirukkadaiyur temple- 63 nayanmar - RHS

32. Tirukkadaiyur temple- 63 nayanmar – RHS

63 நாயன்மார்களின் விக்கிரங்கள்.

33. Tirukkadaiyur temple- 63 nayanmar - RHS corner.2

33. Tirukkadaiyur temple- 63 nayanmar – RHS corner.2

63 நாயன்மார்களின் விக்கிரங்கள் தாண்டி மூலையை அடைந்து விட்டோம்.

34. Tirukkadaiyur temple- 63 nayanmar - RHS corner

34. Tirukkadaiyur temple- 63 nayanmar – RHS corner

இவற்றையெல்லாம் தாண்டி வந்தால், சுவற்றில் தஞ்சாவூர் அரசன் சித்திரம் சுவற்றில் உள்ளது.

35. Tirukkadaiyur temple- Tanjore Maharaja paining

35. Tirukkadaiyur temple- Tanjore Maharaja paining

இவற்றையெல்லாம் தாண்டி வெளியே வந்தால், அபிராமி சன்னிதி உள்ளது.

36. Tirukkadaiyur temple- Abhirami entrance

36. Tirukkadaiyur temple- Abhirami entrance

உள்ளே சென்று அபிராமியை தரிசிக்கலாம்.இது நான் எடுத்த படம் அல்ல.

Tirukadaiyur Abirami_Ma

Tirukadaiyur Abirami_Ma

வெளியே வந்தால், நந்தி, பலிபீடம், கொடிக்கம்பம் தோற்றம்,……….

39. Tirukkadaiyur temple- going out -view

39. Tirukkadaiyur temple- going out -view

1957ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றி விவரங்களை கூறும் கல்வெட்டு.

37. Tirukkadaiyur temple- 1957 Kumbabhisekam - inscription

37. Tirukkadaiyur temple- 1957 Kumbabhisekam – inscription

1957ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றி விவரங்களை கூறும் இன்னொரு கல்வெட்டு.

38. Tirukkadaiyur temple- 1957 Kumbabhisekam - inscription.2

38. Tirukkadaiyur temple- 1957 Kumbabhisekam – inscription.2

பெரிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கவர்னர், முதலமைச்சர் என்று பலர் வருவதால், புரோகித வேலையும் அமோகமாக நடக்கிறது.

கணேச குருக்கள் வி.ஐ.பிக்களுடன் - இணைத்தள விளம்பரம்

கணேச குருக்கள் வி.ஐ.பிக்களுடன் – இணைத்தள விளம்பரம்

சிலர் இணைத்தளம் வைத்துக் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள் . புரோகிதர்களை அமைத்துக் கொள்ளவும் இணைதளம் உள்ளது .

திருக்கடையூரில் டி.எம்.எஸ் யாகம் செய்த போது படம்

திருக்கடையூரில் டி.எம்.எஸ் யாகம் செய்த போது படம்

திருக்கடையூரில் டி.எம்.எஸ் யாகம் செய்த போது படம்…….

திருக்கடையூர் கோயிலில் அஸ்திவாரம் தோண்டிய போது ஏராளமான செப்புத் தகடுகள், பழங்கால காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

திருக்கடையூர் கோயிலில் அஸ்திவாரம் தோண்டிய போது ஏராளமான செப்புத் தகடுகள், பழங்கால காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

திருக்கடையூர் கோயிலில் அஸ்திவாரம் தோண்டிய போது ஏராளமான செப்புத் தகடுகள், பழங்கால காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

© வேதபிரகாஷ்

05-05-2015

[1] http://www.kamakoti.org/tamil/tirumurai153.htm

அக்காலத்தில் இச்சிலைகளை பழுது படுத்தியவர்கள் யார் என்று யோசிக்க வேண்டியுள்ளது. முதமதியர்கள் இல்லாத நிலையில், ஒரு  வேளை பிற்காலத்தில் யாராவது செய்திருக்கக் கூடுமா இல்லை, அவர்களுக்கு முன்பாக ஜைன-பௌத்தர்கள் செய்திருக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

[3] http://temple.dinamalar.com/New.php?id=639

[4] http://www.ganesagurukkal.com/

[5] http://www.priestservices.com/our-services/shastiapthapoorthi-at-thirukkadaiyur

[6] https://www.facebook.com/search/results.php?q=Manikanda+Gurukkal+Thirukkadaiyur&init=public

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உக்ரரத சாந்தி, கங்கை, கனகாபிஷேகம், கல்வெட்டு, கிழக்கு, குளம், குளம் அமைப்பு, சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சதாபிசேகம், சஷ்டியப்த பூர்த்தி, சிவன், சிவன் கோவில், சிவாச்சாரி, சுந்தரர், சேவை, சோழர், திருக்கடவூர், திருக்கடையூர், தெற்கு, நந்தி, பலிபீடம், பாதாள கங்கை, பீமரத சாந்தி, பூர்ணாபிஷேகம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s