கஞ்சமலை சித்தேஸ்வர் திருக்கோவில்: சித்தர்கள் கதைகள், கனிமங்கள் விவரங்கள், நவீன பிரச்சினைகள் (3)

கஞ்சமலை சித்தேஸ்வர் திருக்கோவில்: சித்தர்கள் கதைகள், கனிமங்கள் விவரங்கள், நவீன பிரச்சினைகள் (3)

கஞ்சமலை அமைப்பு - கூகுள் படம் - கனிம தாதுக்கள் நிறைந்த மலைப்பகுதியாக உள்ளது

கஞ்சமலை அமைப்பு – கூகுள் படம் – கனிம தாதுக்கள் நிறைந்த மலைப்பகுதியாக உள்ளது

சித்தர் கோவில் இருப்பிடம், அமைப்பு, காலம், முக்கியத்துவம் முதலியன முன்னர் விளக்கப்பட்டது[1]. இம்மலையைப் பற்றிய சித்தர்களூடைய அமானுஷ்யமாக (Hagiography), மாயாஜாலக் கதைகள் (Fairy tales), விட்டலாச்சார்யா-ஹேரிபாட்டர் (myths) போன்ற கதைகள் முதலியன இரண்டாம் பகுதியில் விளக்கப்பட்டன[2]. இனி, இவற்றுடன் அரசியலும் சேர்ந்திருப்பது தெரிவதால், ஆத்திக-நாத்திக, ஆன்மீக-ஆத்மா-இல்லாத, வந்தேறி-குந்தேறி, மதவாத-தீவிரவாத, சுற்றுப்புற-மாசுக்கட்டுபாடு, போன்ற விவகாரங்கள் பற்றி அலசப்படுகின்றன.

கஞ்சமலை அமைப்பு - கூகுள் படம் - கனிம தாதுக்கள் நிறைந்தது-சுற்றியுள்ள ஊர்கள்

கஞ்சமலை அமைப்பு – கூகுள் படம் – கனிம தாதுக்கள் நிறைந்தது-சுற்றியுள்ள ஊர்கள்

சேலை உருக்காலை விரிவாக்க திட்டம், அரசியல் முதலியனவற்றில் கஞ்சமலை சிக்கியது: ஆங்கிலேயர் காலத்திலேயே கஞ்சமலை மற்றும் ஜவ்வாது பகுதிகளில் உள்ள கனிமவளம் அறியப்பட்டுள்ளது. கெஜட்டியரில் பதிவு செய்யும் போது, இவ்வுண்மை நெடுங்காலமாக அறியப்பட்ட விசயம் தான் என்றும், அப்பகுதிகளில் இரும்பு உருக்குதல், பொருட்கள் உற்பத்தி செய்தல் போன்ற வேலைகள் நடந்து வந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து புரோட்டோ நோவோ இரும்பு கம்பனிக்கு [Porto Novo Iron Company] அவர்கள் உருக்க கனிமத்தை எடுத்துச் சென்றனர்[3].

Porto_Novo_Iron_Works-விகிபீடியா போட்டோ

Porto_Novo_Iron_Works-விகிபீடியா போட்டோ

கனிமவளம் இருப்பது 1964லேயே உறுதி செய்யப்பட்டது[4]. பிறகு 1981ல் தான் சேலம் உருக்காலை தொழிற்சாலை ஆரம்பிக்கப் பட்டது[5]. செப்டம்பர் 2008ல் சேலம் உருக்காலை தொழிற்சாலை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத் திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், கஞ்சமலைப் பகுதிகளில் உள்ள இரும்புகனிமங்கள் இதற்கு அளிக்கப்பட்டால், உற்பத்தி பெருகும் என்று சுட்டிக் காட்டினார்[6]. மேலும் இப்பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலம் [SEZ] என்று அறிவிக்கப்பட்டும் என்றார். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும் வேலை கிடைக்கும், முன்னேற்றம் ஏற்படும் என்று எடுத்துக் காட்டினார்[7]. டிட்கோ இந்த திட்டத்தை அறிவித்தது மற்றும் விவரங்கள் அதன் இணைதளத்தில் உள்ளன[8].

PM inagurated expansion project 2008

PM inagurated expansion project 2008

அக்டோபர் 2008ல் பிரதமர் மன்மோஹன் சிங் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், வழக்கம் போல இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[9]. “கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்” என்ற பெயரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது[10], இது பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே குரல் கொடு’, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளோடு செயல்படுவது வியப்பாக உள்ளது[11]. ஆகஸ்ட் 2008 போராட்டத்தில் [Democratic Youth Federation of India (DYFI)] பங்கு கொண்டுள்ளது[12]. 2008லேயே இவை பிஜேபி-எதிர்ப்பு போர்வையில் திரண்டு போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

DYFI condemn iron ore mining in Kanjamalai by a private steel major.

DYFI condemn iron ore mining in Kanjamalai by a private steel major.

காவிரி மாசுபடுவதை தடுக்க சேலத்தில் கையெழுத்து இயக்கம்[13]: சேலம் மாவட்டத்தில், நச்சுப்பொருள் கலந்த கழிவுநீரை சுத்திகரிக்காமல், காவிரி ஆற்றில் விடப்படுவதால் மாசுபடுகிறது. இதை தடுத்த நிறுத்த கோரி, மக்களிடையே கையெழுத்து இயக்கத்தை சுற்றுச்சூழல் குற்றங்களை கண்காணிக்கும் குழு நடத்தியது. சுற்றுச்சூழல் குற்றங்களை கண்காணிக்கும் குழுவை சேர்ந்த பியுஸ்சேத்தியா[14], சேலமே குரல் கொடு லட்சுமி, மேட்டூர் பாதுகாப்பு இயக்கம் மணி, கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம் ராஜா ஆகியோர் இணைந்து, பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

Mission aborted Salems Piyush Sethia

Mission aborted Salems Piyush Sethia

சேலமே குரல்கொடு அமைப்பின் லட்சுமி, பியுஸ்சேத்தியா ஆகியோர் கூறியதாவது[15], “கஞ்சமலை குன்றில், 6,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேக்னஸைட் வெட்டி எடுக்க, முறைகேடாக உரிமம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைத்துத்துறை அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கனிம மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மற்றும் சட்ட மீறல்களை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள அரசுத்துறைகளின் செயல்பாடுகளையும் விசாரிக்க, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், பொதுமக்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும், நச்சுப்பொருள் கலந்த கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதால் மாசு ஏற்படுகிறது. இதை தடுத்த நிறுத்தாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை, நோட்டீஸில் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து, அவர்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம். இந்த கையெழுத்துக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பியுஸ்சேத்தியாவின் இணைதளத்தில் [http://sanhati.com/articles/1065/] விவரங்கள் உள்ளன. அவருக்கு இதில் என்ன அக்கரை என்றும் தெரியவில்லை. ஏனெனில், கம்யூனிஸம் பேசும், அம்மாநிலமே முதலாளிகளை வரவேற்றுள்ளது, தொழிற்சாலைகள் தொடக்கப் பட்டு விட்டது. அங்கு இத்ததுவங்கள் எல்லாம் எடுபட்டனவா என்று தெரியவில்லை.

Salem Steel plant

Salem Steel plant

அரசியலாக்கப் பட்ட சேலை உருக்காலை விரிவாக்க திட்டம்: தினமணியில் 09-02-2009 அன்று வெளிவந்துள்ள செய்தியில் பல விவரங்கள் காணப்படுகின்றன. இதை கே.எஸ். ராதாகிருஷ்ணன் என்பவர் தனது இணைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்[16]. இதில் மத்திய அரசு-மாநில அரசு பிரச்சினைகள், தனியாருக்கு தாரை வார்க்கிறது என்ற புகார், பொதுத்துறை நிறுவனம் பலிக்கடா ஆக்கப்படுகிறது முதலிய விவரங்கள் அலசப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் வளர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிய இவர், முன்னேற்ற திட்டங்கள் ஏன் எதிர்க்கப்படவேண்டும், தமிழகத்தின் திராவிட கட்சிகளே முட்டுக்கட்டைகள் போட வேண்டும், வெவ்வேறு முகமூடிகளில் திராவிட[17], கம்யூனிஸத் தீவிரவாத குழுக்கள்[18], ஏன் இதில் சேர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை[19]. தனியார்மயமாக்கம் என்ற முறை அமூலில் வந்த பிறகு அதை எதிர்க்கும் மர்மமும் புரியவில்லை[20]. ஏனெனில் திராவிட அரசியல்வாதிகள், சித்தாந்திகள், பெரிய பணமுதலைகள் ஏற்கெனெவே இவ்விவகாரங்களில் டென்டர், ஒப்பந்தம், போன்றவற்றில் கோடிகளைக் கொட்டி, கோடிகளை எடுக்க இறங்கியுள்ளனர். சுற்றுப்புற இடங்களில் “ரியல் எஸ்டேட்” வியாபாரத்திலும் அமோகமாக இறங்கி விட்டனர். சித்தர் கோவில் சாலையில் செல்லும்போதே இதனை கண்டு கொள்ளலாம். 2008ல் இச்சாலை சரியில்லை என்ற செய்தி வந்தது வேடிக்கையே[21]. உண்மையிலேயே அக்கரையாக இச்செய்தி வெளியிடப் பட்டதா அல்லது வியாபாரத்தைப் பெருக்க, உதவியாக இருக்கும் என்ற நோக்கில் வெளிவந்ததா என்று தெரியவில்லை. இதில் ஆதாயம் பெறப்போவது இவர்கள் தாம்.

A file picture of a protest outside District Forest Officers premises. Pic- Piyush Sethia.

A file picture of a protest outside District Forest Officers premises. Pic- Piyush Sethia.

கடவுளை எதிர்த்து, சித்தர்களை ஆதரிக்கும் கூட்டங்கள் இப்பிரச்சினையில் ஈடுபட்டுள்ளது: இப்பொழுது அச்சாலை வழியாக செல்லும் போது, இடது பக்கத்தில் “பதினெண் சித்தர்கள் மடம்” என்று ஒன்று முளைத்துள்ளது. இதனால் யாருக்கு ஆதாயம் என்று ஆராய வேண்டியுள்ளது. “ரியல் எஸ்டேட்” போன்று “ஆன்மீக சுற்றுலா” என்ற போக்கில் இவற்றையும் வைத்துக் கொண்டு, ஒருவேளை, வியாபாரத்தைப் பெருக்குவார்கள் போலும்!

Kanjamalai Temple Salem

Kanjamalai Temple Salem

இருப்பினும் “வந்தேறிகள் / ஆரியர்கள்” என்றெல்லாம் பேசிக் கொண்டும், மதவாத கட்சிகள்-எதிர்ப்பு என்ற போர்வைகளில் கலாட்டா செய்து, மிரட்டி பணம் பறிக்கும் கூட்டங்களைப் பற்றியும் இவர்களே அறிந்துள்ளனர். பிறகு, எப்படி ஒன்றுமே தெரியாதது போல நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்திய இரும்பு கட்டுப்பாடு அதிகாரகம் ஏற்கெனவே தீர்மானம் செய்து ஜின்டால் போன்ற தனியாருக்கு தொழிற்சாலை ஆரம்பிக்க அனுமதி கொடுத்து விட்டது. அவர்களும் வேலை ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, தொழிற்சாலை முதலாளிகளும் கவனமாகவே இருக்கின்றனர்[22]. சுற்றுப்புற மற்றும் விவசாயிகளின் போராட்டங்களினால், தங்களது திட்டத்தைத் தள்ளிவைத்துள்ளனர் என்று 2008லேயே செய்து வந்துள்ளது[23].

© வேதபிரகாஷ்

18-02-2015

[1] https://sivatemple.wordpress.com/2015/02/17/siddheswar-temple-kanchamalai-salem-and-its-significance/

[2] https://sivatemple.wordpress.com/2015/02/17/kanchamalai-siddheswarar-koil-shrouded-with-hagiographical-legends-myths-and-stories-to-be-demythologized/

[3] http://www.lse.ac.uk/economicHistory/seminars/Epstein%20Memorial%20Conference/PAPER-Parthasarathi.pdf

[4] W. Francis and others, Gazetteer of South India, Mittal Publications, New Delhi, Volumes 1, p.6

[5] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/allow-salem-steel-plant-to-access-iron-ore-deposits-in-kanjamalai/article1393230.ece

[6] Union Steel Minister Ram Vilas Paswan participating at the foundation stone laying ceremony for the Salem Steel Plant’s (SSP) modernisation and expansion project recently, said “the mines at the hills are at the core of the current expansion plan of Salem Steel”.  The supply of iron ore from Kanjamalai is a key to the growth of the SSP, industry sources here point out. The Tamil Nadu Iron Ore Mining Company (TIMCO), a joint venture between Jindal Vijayanagar Steels and the Tamil Nadu Industrial Development Corporation (TIDCO), which is already in the race for the iron ore at the hill, has planned to invest about Rs. 400 crore to take up mining in Kanjamalai, where an area of over 635 acres has been earmarked with a potential for about 75 million tonnes of iron ore. TIMCO will supply the iron ore to JSW Steel’s Salem facility.

[7] http://www.thehindu.com/todays-paper/sail-eyeing-iron-ore-mines-in-kanjamalai-hill/article1347066.ece

[8]Kanjamalai in Salem and Kavuthimalai and Vediappanmalai in Thiruvannamalai Districts of Tamil Nadu have low grade iron ore deposits . Mine able reservwes at Kanjamalai is estimated @ 75 million tonnes and at Kavuthimalai and Vediappanmalai @ 35 million tonnes. Tamil Nadu Iron Ore Mining Corporation Ltd. (TIMCO) a joint venture company of TIDCO and Jindal Vijayanagar Steel Limited is implementing the iron ore project at Kanjamalai , Salem District and at Kavuthimalai, Vediappanmalai at Thiruvannamalai Districts at a project cost of Rs.400 crores. TIMCO is taking necessary steps to get the following approvals/clearances from State and Central Government for mining activities:

 1. Mining lease under Mineral Concession Rule 1960 from Department of Mining, Government of India
 2. NOC under Air & Water Act/from Ministry of Environment and Forests, Government of India.
 3. Clearance from Ministry of Forest under Section (2) of Forest (Conservation) Act 1980 for carrying out mining activity in the reserved forests.

 http://www.tidco.com/iron.html

[9] http://sanhati.com/articles/1065/

[10] http://indiatogether.org/timcomine-environment

[11] http://thiagu1973.blogspot.in/2008/10/blog-post_09.html

[12] Villagers living at the foothills of Kanjamalai, led by a group of activists from the `Saven Kanjamalai Campaign,’ laid siege to the District Collectorate for nearly three hours here on Wednesday August 27.2008 urging the district administration to provide them detailed information concerning mining in the hill. The villagers said that they would not permit any mining in Kanjamalai and the Government should immediately withdraw its permission on mining. Meanwhile cadres from Democratic Youth Federation of India (DYFI) took out a protest rally in the city condemning the Government’s move to allow iron ore mining in Kanjamalai by a private steel major.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mining-should-not-be-allowed-in-kanjamalai-say-villagers/article1324772.ece

[13] தினமலர், காவிரி மாசுபடுவதை தடுக்க சேலத்தில் கையெழுத்து இயக்கம், ஏப்ரல்.7, 2012.

[14]  Salem-based environmental activist Piyush Sethia, who was accused of sedition for disrupting a Republic Day ceremony in Salem in 2010 by attempting to distribute a controversial anti-mining leaflet.

http://www.outlookindia.com/printarticle.aspx?281402

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=443412&Print=1

[16]http://ksradhakrishnan.co.in/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[17] http://www.thehindubusinessline.com/2001/11/01/stories/140161c5.htm

[18] http://tamil.oneindia.com/news/2000/08/26/steel.html

[19] தினமணி, 09-02-2009.

[20] Monday, May 29, 2000- The Save Salem Steel Committee, comprising at least eight trade unions, has voiced its apprehension over the “stealthy move to privatise the Salem Steel Plant.” However, the Steel Authority of India Limited (SAIL), had gone ahead with the floating of global tenders and also entered into a Memorandum of Understanding with the Central Government, with a specific timeframe to sell off the plant by March 2001. The SAIL was also going ahead with short-listing of bids submitted by the SMS Demaq of Germany, the Avesta Sheffield of the U.K., and three Indian companies – Jindal Strips Ltd., Tata Iron and Steel Co and Shah Alloys.

 http://www.thehindu.com/2000/05/29/stories/04292237.htm

[21]  The Siddhar Kovil main road, which connects Edapadi and Ilampillai towns with the Salem city, presents a picture of utter neglect.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/siddhar-kovil-main-road-in-a-hopeless-state/article1239769.ece

[22] http://www.newindianexpress.com/states/tamil_nadu/article19545.ece?service=print

[23]  Express News Service, Jindal drops iron ore mining plan, Published Date: Dec 26, 2008 1:57 AM; Last Updated: May 14, 2012 5:26 PM; Confronted with severe resistance from environmental activists and farmers, Jindal Steel has put-off their plans.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in 'சேலமே குரல் கொடு', குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க்கம், சுற்றுப்புற-மாசுக்கட்டுபாடு, தமிழக இளைஞர் இயக்கம், தமிழ் தேசிய இயக்கம், புரோட்டோ நோவோ, பெரியார் திராவிடர் கழகம், மனித உரிமை அமைப்பு, ராம்விலாஸ் பாஸ்வான் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கஞ்சமலை சித்தேஸ்வர் திருக்கோவில்: சித்தர்கள் கதைகள், கனிமங்கள் விவரங்கள், நவீன பிரச்சினைகள் (3)

 1. Prof. Dr. A. Dayalan சொல்கிறார்:

  Sir, Your service is remarkable,Amazing.I am remainded of The Nayanmar Thirunavukarasar.These limited words are not that much sufficient to appreciate your service.
  Regards
  Prof.Dr.A.Dayalan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s