பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (1)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (1)

பென்னலூர் கூகுள் வரைப்படம்

பென்னலூர் கூகுள் வரைப்படம்

பென்னலூருக்குச் சென்றது: எனது உழவாரப்பணி நண்பர்களுள் ஒருவர், “பென்னலூர் என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. அதனை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்”, என்று 07-02-2015 சனிக்கிழமை அன்று கூட்டிச் சென்றார். மாதம் ஒருமுறை அவர்கள் அக்கோவிலுக்குச் சென்று, சுத்தம் செய்து, லிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்து, புத்தாடை அணிவித்து, பூஜை செய்து, பிரசாதத்தை விநியோகித்து சென்னைக்குத் திரும்புவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஶ்ரீ குருமூர்த்தி சாஸ்திரிகள் அபிஷேகம், பூஜை எல்லாம் செய்வார். திருமதி உமா, க.நா. கோபி முதலியோர் பொருட்கள் உதவி, கோவில் சுத்தம் முதலியன செய்கிறார். அடையாரிலிருந்து வரும் ஒரு பெண்மணியும் அவ்வப்போது, கோவிலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தந்து செல்வதாக அங்கேயே உள்ள மகாலிங்கம் என்பவர் தெரிவித்தார். அவர் தான் தினமும் விளக்கையேற்றி வருகிறார். பிரதோசம், சிவராத்திரி நாட்களில் கூட்டம் வருவதாக மகாலிங்கம் சொல்கிறார். ஏதோ இந்த தடவை, அங்கு செல்லவேண்டும் என்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது என்று அவர்களுடன் புறப்பட்டேன்.

பென்னலூர்-கோவில் மரத்துடன் - அண்ணாமலையார் அறப்பணிக்குழு

பென்னலூர்-கோவில் மரத்துடன் – அண்ணாமலையார் அறப்பணிக்குழு

பென்னலூர் கோவிலின் இப்பொழுதைய நிலை: அவ்விடத்தை அடைந்ததும் இடிந்த நிலையில் காணப்பட்ட அக்கோவிலைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியாகவும், வருத்தம் ஏற்பட்டது.

 • விழும் நிலையில் இருக்கும் மொட்டை கோபுரம் வரவேற்கும் நிலை.
 • மதிற் சுவர் இல்லாது பெரிய இடத்தில் சிதலமடைந்துள்ள நிலையில் உள்ள கோவில் அமைப்பு
 • சுற்றிலும் சன்னிதிகள் சரிந்து விழுந்துள்ள நிலை,
 • கூரை இல்லாமல் மற்றும் சரிந்து விழுந்துள்ள நிலை.
 • கதவுகள் இல்லாத கருங்கற்களினால் செய்யப்பட்ட வாசக்காற்கள்
 • சன்னிதிகளில் விக்கிரங்கள் இல்லாமை
 • அம்மன் சன்னிதியில், அம்மன் விக்கிரகம் தலையில்லாமல் இருக்கும் காட்சி
 • தூண்கள் உடைந்தும், உடையாமலும் சிதறிக்கிடந்த அமைப்பு,
 • அங்கங்கு நடுவில் சிற்பங்களின் உடைந்த பகுதிகள்,
 • மூலவரைச் சுற்றியுள்ள சன்னிதிகளில் விக்கிரங்கள் இல்லாமை,
 • வெளிச்சுற்றில் திசைக்கு வைக்கப்பட்டிடருக்கும் சிற்பங்கள் பெயர்த்து அப்புறப்படுத்தப் பட்டுள்ள தோற்றம்
 • இவையெல்லாம் இல்லாமல், மரங்கள் வளர்ந்து, உள்ள கட்டிடத்தையும் பாதித்துள்ள நிலைமை
 • அருகில் உள்ள மாசுபட்ட நீருடன் காணப்படும் கிணறு
 • தொலைவில் உள்ள படிகட்டுகள் இல்லாத குளம்
 • எல்லாவற்றிற்கும் மேலாக யாருமே கண்டுகொள்ளாத நிலை

பென்னலூர்- வெளிப்புறம் - அண்ணாமலையார் அறப்பணிக்குழு.

பென்னலூர்- வெளிப்புறம் – அண்ணாமலையார் அறப்பணிக்குழு.

இவற்றையெல்லாம் கவனித்தபோது, அக்கோவில் நிச்சயமாக யாராலோ இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என்று தெரிந்தது. கருங்கற்களினால் கட்டப்பட்டிருப்பதனால், இடித்தவர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன், இரும்புக் கருவிகளுடன் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். விலையுயர்ந்த பொருட்கள் அப்பொழுதே கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். கடந்த 50-100 ஆண்டுகளில் சுற்றுச் சுவர்களில் இருந்த சிற்பச்சிலைகள் / விக்கிரங்கள் திருடப்பட்டிருக்க வேண்டும் என்பது அக்கோவில் அமைப்பேக் காட்டிக் கொடுக்கிறது. பிறகு மரங்கள் வளர்ந்து, சுவர்களை  விரிவடையச் செய்து, கூரைகள் பெயர்ந்து விழுந்திருக்கலாம். இன்று கூட எப்பொழுது விழுமோ என்ற நிலையில் தான் அவை உள்ளன. உள்ளே மற்றும் வெளியே ஒவ்வொரு கற்தொகுதி, பகுதி முதலிவற்றிற்கு வரிசை-வரிசையாக, அடுக்கிற்கு எண்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் போது, ஒருவேளை அப்பகுதிகள் சீரமைத்து கட்டப்பட்டது போல தோன்றுகிறது. கல்வெட்டுகள் இடம் மாறியிருப்பதும், தொடர்ச்சியாக இல்லாமலும், நடு-நடுவே மற்ற வெறும் கற்கள் இருப்பதும் அதைச் சுட்டிக் காட்டுகிறது.

பென்னலூர்- அம்மன் சன்னிதி மரத்துடன் - அண்ணாமலையார் அறப்பணிக்குழு

பென்னலூர்- அம்மன் சன்னிதி மரத்துடன் – அண்ணாமலையார் அறப்பணிக்குழு

தமிழகத்தில் 14-18 நூற்றாண்டுகளில் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டது, இடிக்கப்பட்டது முதலியன: கஜினி-கோரிகளுக்குப் பிறகு லோடிகள் தில்லியில் தங்கி “அரசாள” ஆரம்பித்தனர். இப்ராஹிம் லோடியின் தளபதி மாலிகாபூர், 1311ம் ஆண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது பல கோவில்கள் அவனது இலக்கில் சிக்கின, கொள்ளையடிக்கப் பட்டன; இடிக்கப்பட்டன[1]. அவன் அத்தகைய இடங்களில் தனது பிரதிநிதியை வைத்துவிட்டு சென்றான். அவன் மூலம் பிறந்தவர்கள், மதம் மாற்றப்பட்டவர்கள் அங்கங்கு மசூதிகளைக் கட்டிக் கொண்டு அவற்றைச் சுற்றி வாழ்ந்து தங்களது எண்ணிக்கையைப் பெருக்கி வந்தார்கள். கொள்ளையடிப்பது, குரூரமாகக் கொலை செய்வது, மனைவி-மக்களை கடத்திக் கொண்டு செல்வது, கப்பம் கட்ட மிரட்டுவது என்பது அவர்களது தீவிரவாத செயல்களாக இருந்தன[2]. ஹைதர் அலி (1721-1782), திப்பு சுல்தான் (1750-1799) கர்நாடகப் போர்களில் அதே வழியைப் பின்பற்றினார்கள். இவர்கள் “வந்தார்கள்-சென்றார்கள்” என்றிருக்கலாம், ஆனால், அவர்களது பிரதிநிதிகள், வீரர்கள் பிறகு தொடர்ந்து அவர்களது அக்கிரம வேலைகளை செய்தனர். இவர்களின் வழி வந்தவர்கள் தாம் ஆற்காடு நவாப்புகள்.

பென்னலூர்- வெளிப்புறம் செடி - அண்ணாமலையார் அறப்பணிக்குழு.

பென்னலூர்- வெளிப்புறம் செடி – அண்ணாமலையார் அறப்பணிக்குழு.

தமிழகத்தில் 17-19 நூற்றாண்டுகளில் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டது, இடிக்கப்பட்டது முதலியன: ஆற்காடு நவாப் காலத்தில் (1609-1801) ஆற்காடு முதல் சென்னை வரை நவாப் சென்று வரும்போது, பல கோவில்கள் இடிக்கப்பட்டன. அதாவது, முதலில் செல்கின்ற வழியில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாருவது, அவற்றில் இருக்கும் உயர்ந்த பொருட்களை பலாத்காரமாக எடுத்துக் கொள்வது அல்லது கொள்லையடிப்பது, பிறகு செல்லும் போது, முடிந்த அளவில், அக்கோவிலை இடித்துத் தள்ளிவிட்டு செல்வது என்பது ஆற்காடு நவாபுக்களுக்கு பிடித்தமான காரியமாக இருந்தது.  இதை “ஆற்காடு நவாப் உலா” என்று எழுதிவைக்கப்பட்டுள்ள அரேபிய மற்றும் உருது நூல்களிலமிவ்விவரங்கள் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளன.  எஸ். மொஹம்மது ஹுஸைன் நயினார் என்பவரால் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஐந்து தொகுதிகளாக சென்னை பல்கலைக்கழகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

 1. 1749ம் ஆண்டு ஆம்பூர் போர் வரை, அதாவது அன்வரூத்தீன் கான் இறக்கும் வரை முதல் புத்தகத்தில் விவரங்கள் உள்ளன[3].
 2. மொஹம்மது அலி கான் வாலாஜா -1 வரையிலான விவரங்கள் இரண்டாம் புத்தகத்தில் உள்ளன[4].
 3. உமததூல்-உமரா நவாப் வாலாஜா – 2 வரையிலான விவரங்கள் மூன்றாம் புத்தகத்தில் உள்ளன[5].
 4. நவாப் ஆஸிம் ஜா வரையிலான விவரங்கள் நான்காம் புத்தகத்தில் உள்ளன[6].
 5. குலாம் அப்துல் காதிர் நாசர் வரையிலான விவரங்கள் ஐந்தாம் புத்தகத்தில் உள்ளன[7].

பென்னலூர்- வளர்ந்துள்ள மரத்துடன் - அண்ணாமலையார் அறப்பணிக்குழு

பென்னலூர்- வளர்ந்துள்ள மரத்துடன் – அண்ணாமலையார் அறப்பணிக்குழு

சென்னை முதல் ஆற்காடு வரைஆற்காடு முதல் சென்னை வரைநவாப் விஜயங்கள், உலாக்களில் நடத்தப் பட்ட அக்கிரமங்கள்: தேதி-நேரங்களுடன் அவர்கள் செப்பாக்கத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது, சென்ற வழிகளில் அவர்கள் கடந்து சென்ற கிராமங்கள், இடங்கள், மலைகளின் பெயர்கள், காபிர்களின் கோவில்களைப் பார்த்தது, அங்கு தங்கியது, கொள்ளையடித்தது, இடித்தது, சமாதி கட்டியது, மசூதி கட்டியது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. காபிர்கள் உள்ள இடங்களை “குப்ராபூர்” (Kuffrapur; Kufr = dirt, filth, not to be touched, thus kafirs = unclean people, unbelievers, non-mohammedans) என்றே அழைக்கலாம் என்று கிண்டலாக எழுதப்பட்டுள்ளது, அதாவது, குரானின் படி, அந்த இடங்களை அழிக்கலாம் என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் முகமதியர் கோவில்களுக்குள் சென்று கலாட்டா செய்து வந்ததால், முகமதியர், இந்து கோவில்களுக்குள் செல்லக் கூட்டாது என்று ஆங்கிலேயர் ஆணையிட்டிருந்தனர். அந்த ஆணையை முகமதியர் கடுமையாக எதிர்த்தார்கள் என்றுள்ளது. அதே நேரத்தில், இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் இந்துக்கள்-முகமதியர்கள் இவர்களை ஆவலோடு வரவேற்று, பாதங்களை முத்தமிட்டனர், என்று குறிப்பிட்டுவிட்டு, கிராமங்களில் அதிக அளவில் கோவில்கள் இருப்பது கண்டு மனம் நொந்தது என்றும் எழுதியுள்ளார்கள். அவையெல்லாம் மறைய வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக் கொண்டனர்; கோவில்களில் தங்குவது, மாமிசம் சாப்பிடுவது, அசுத்தம் செய்வது, எச்சங்களை அப்படியே போட்டுவிட்டு போவது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது, சிலரை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போவது, குழந்தைகளை-சிறுவர்-சிறுமிகளைக் கடத்திக் கொண்டு போவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டனர். இதனால், புனித இடங்கள் களங்கப்பட்டன, என்று இந்துக்கள் அவ்விடங்களிலிருந்து விலகியிருக்கும் போது, இடித்துத் தள்ளி தர்காக்களை-மசூதிகளைக் கட்டிவிட்டு சென்றனர்.

பென்னலூர்- வளர்ந்துள்ள மரவேருடன் - அண்ணாமலையார் அறப்பணிக்குழு

பென்னலூர்- வளர்ந்துள்ள மரவேருடன் – அண்ணாமலையார் அறப்பணிக்குழு

© வேதபிரகாஷ்

10-02-2015

[1] S. Krishnaswami Iyengar, South India and her Mohammedan invaders, AES, New Delhi, 1991.

[2] வீரபாண்டியன், வீரவல்லாளன் போன்ற் ஓர்களே அத்தகைய குரூரக் கொடுமைகளுக்கு உள்ளாக நேர்ந்ததை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டார்கள் போலும்.

[3] S. Muhammad Husayn Nainar, Sources of the History of the Nawabs of the Carnatic, (from the early days to the battle of Ambur 1749 AD), Vol.I, University of Madras, 1934.

[4] S. Muhammad Husayn Nainar, Sources of the History of the Nawabs of the Carnatic, (Anwarud-Din Khan to Ali khan Bahadur Walajah – I), Vol.II, University of Madras, 1939.

[5] S. Muhammad Husayn Nainar, Sources of the History of the Nawabs of the Carnatic, (from Walajah – I  to Walajah – II 1801 AD), Vol.III, University of Madras, 1940.

[6] S. Muhammad Husayn Nainar, Sources of the History of the Nawabs of the Carnatic, (from Walajah – II to Nawab Azim Jah Bahadur), Vol.IV, University of Madras, 1945.

[7] S. Muhammad Husayn Nainar, Sources of the History of the Nawabs of the Carnatic, (Bahar-i-Azam Jahi of Ghulam Abdul Qadir Nazir, Walajah – IV), Vol.V, University of Madras, 1950.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கல்வெட்டு, செப்பேடு, பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, பெருநல்லூர், ஶ்ரீபெரும்புதூர் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s