பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (3)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (3)

Pennalur Siva Temple - Inscriptions found on the walls

Pennalur Siva Temple – Inscriptions found on the walls

கல்வெட்டு விவரங்கள்[1]: இக்கோயிலில் கல்வெட்டுகள் முன்மண்டப நுழைவுவாயிலின் இருபக்கச் சுவரிலும், அடித்தளப் பகுதியிலும், முன்மண்டபக் கிழக்குச் சுவரிலும் காணப்படுகிறது.

 • பென்னலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் சோழர் காலத்தில் “பெருநல்லூர்” என அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது.
 • மேலும் இவ்வூர் “ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்துச் செங்காட்டு நாட்டு உலகளந்தசோழ சதுர்வேதி மங்கலம்” எனக் குறிக்கப்படுகிறது.
 • தொண்டை மண்டலத்தில் இருந்த 27 கோட்டங்களில் “செங்காட்டுக் கோட்டம்” ஒன்றாகும்.
 • அது இன்றைய ஸ்ரீபெரும்புதூர் பகுதியாகும். செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு பெரும்புதூரான என்ற குறிப்பு சிவபுரம் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.
 • மேலும் சோமங்கலம் கோயில் கல்வெட்டிலும் செங்காட்டுக் கோட்டம் பற்றிக் குறிப்பு வருகிறது.
 • ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள செரப்பனஞ்சேரி கோயிலிலும் இக்கோட்டம் பற்றிய குறிப்பு வருகிறது. ‘செங்காடு’ என்ற ஊர் ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • தொண்டைநாட்டில் இருந்த 182 நாட்டுப்பிரிவுகளில் ஒன்றாகச் ‘செங்காட்டு நாடு’ம் விளங்கியிருப்பதை அறியமுடிகிறது.
 • இக்கோயிலில் காணும் கல்வெட்டில் “திருமன்னி விளங்கும்…. செங்கோல் நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராஜகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர்க்கு” என்ற மெய்கீர்த்தி காணப்படுவதால் முதலாம் குலோத்துங்கசோழன் (கி.பி. 1070-1120) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.
 • இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் “அகத்தீசுவரமுடைய மகாதேவர்” எனக் குறிக்கப்படுகிறார்.
 • பிற்காலத்தில் நடைபெற்ற திருப்பணியில் சில கல்வெட்டுகள் இடம் மாறியுள்ளன. திருக்கோயிலின் சுவரில் உள்ள கற்களில் திருப்பணி செய்வதற்காக வரிசை எண்கள் இடப்பட்டுக் காணப்படுகின்றன.

கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மழைபெய்யும்பொழுது இறைவன்மீது மழைநீர் விழுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி நடைபெற்று வழிபாடுகள் மேற்கொள்ள ஊர்மக்கள் விரும்புகின்றனர்.

Pennalur Siva Temple - Nandi, Palipidam, stone vessel

Pennalur Siva Temple – Nandi, Palipidam, stone vessel

ஶ்ரீதரன் கொடுத்துள்ள பின்குறிப்பு: தனது கட்டுரைக்கு உதவிய நூல்களை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

(1) சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினரால் 14-12-2014 அன்று திருக்கோயிலின்மீது வளர்ந்திருந்த மரங்கள், செடி, கொடிகளை அகற்றித் தூய்மை செய்தனர். இந்த உழவாரப் பணியில் ஊர்மக்களும் ஆர்வமாகப் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலுக்குத் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

(2) இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்டுவிட்டது.

(3) தொண்டைமண்டலம் – கோட்டமும், நாடும் – புலவர் செ. இராசு, செங்கற்பட்டு மாவட்டக் கருத்தரங்கு – பக்கம் 9.

(4) காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு – இரா. சிவானந்தம் – தொல்லியல்துறை வெளியீடு – 2008, தொண்டை மண்டல நாட்டுப் பிரிவுகள், பக்கம் 226-227.

சதாசிவராயர் செப்பீட்டில் பென்னலூர்

சதாசிவராயர் செப்பீட்டில் பென்னலூர்

செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பென்னலூர், பென்னலூரு, பென்னலேரு முதலியன:  சதாசிவராயரின் செப்பேடுகளில் (சக வருடம் 1478 / 1556 CE) தொண்டை மண்டலத்தின் பகுதிகள், ஊர்கள், கிராமங்கள் பெயர்களுடன், அவற்றின் இருப்பிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பொழுது, இவை இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் பென்னலூர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. கொலப்பாக(ம்), அல்லிக்குடி மலை மற்றும் பென்னலேரு ஏரிக்கு கிழக்காகவும், சந்திரமௌலி ஏரிக்கு தெற்கிலும், அமன்பாக(ம்) சாலைக்கு மேற்கிலும் (இச்சாலை பென்னலூரு கிராமத்திற்குச் செல்கிறது), சேலாகாடுக்கு வடக்கிலும் உள்ளது. பென்னலூர், பென்னலேரு, பென்னலூரு என்று இவ்வூர் பலவாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் பிரபலாம இருந்த இந்த ஊர் 16ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது தெரிகிறது. ஏரிகள் சூழ்ந்த இடத்தில் இருந்ததினால் செழிப்பான ஊர் என்பது தெரிகிறது. அதனால், செல்வசிறப்பு கொண்டதும் தெரிகிறது. இத்தகைய க்சாரணங்களினால் தான், ஆற்காடு நவாப்புகளின் கண்களில் இவ்வூர் பட்டிருக்கிறது, தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. பிறகு இக்கோவிலை மக்கம் வழக்கம் போல மிலேச்சர்களினால் பாதிக்கப் பட்டதால், வழிபாடு இல்லாமல் விட்டுவிட்டனர் என்று தெரிகிறது. அதன் அலங்கோலம் தான் பின்பும் தொடர்ந்துள்ளது.

Pennalur Siva Temple - stone vessel with inscription

Pennalur Siva Temple – stone vessel with inscription

தினமலரில் வந்துள்ள விவரங்கள்: பென்னலூரில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிவன் கோவில் சிதிலமடைந்துள்ளதால், சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது[3]. ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள, பென்னலூர் கிராமத்தில், 1,700 பேர் வசிக்கின்றனர். இங்கு, நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், தற்போது கோவில் சுற்றுச் சுவர், கருவறை மண்டபம், வளாகத்தில் உள்ள நந்தி, அம்மன் சன்னிதிகள், நுழைவு வாயில் ஆகியவை சிதிலமடைந்து உள்ளன.

Pennalur Siva Temple - stone sculpture parts

Pennalur Siva Temple – stone sculpture parts

இதே நிலை நீடித்தால், பழமையான இக்கோவில் முற்றிலும் சிதைந்து விடும் நிலை உள்ளது. எனவே, வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை புனரமைத்து, வழிபாடு செய்ய, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்[4]. தினமலர்’ செய்தி எதிரொலியாக, சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில், 18-08-2013 அன்று அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதையடுத்து, காஞ்சி புரம் மாவட்ட அறநிலைய துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் வட்ட ஆய்வாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட அறநிலைய துறை அதிகாரிகள், 04-08-2013 அன்று காலை 10:00 மணிக்கு, கோவிலில் ஆய்வு செய்தனர்[5]. இதுகுறித்து, மோகனசுந்தரம் கூறியதாவது: “பென்னலுாரில் உள்ள, சிவன் கோவில் மிகவும் பழமையானது. மன்னர்களுக்கு இடையே நடந்த போரில் கோவில் சிதிலம் அடைந்து இருக்கலாம்[6]. கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, தொல்லியல் துறையினர் மூலம் ஆய்வு செய்தால், கோவில் கட்டப்பட்ட விவரம் தெரிய வரும்[7]. மேலும், இந்த கோவிலை, 14வது நிதிக்குழு மூலம், சீரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும். நன்கொடையாளர்கள் யாரேனும், புதுப்பிக்க விரும்பினால், அவர்களுக்கு, அறநிலைய துறை சார்பில், உதவிகள் செய்யப்படும்”, என்று, அவர் தெரிவித்தார்[8].

Pennalur Siva Temple - stone structure parts strewn around

Pennalur Siva Temple – stone structure parts strewn around

2011க்கு முன்னர் சிற்பங்கள் காணாமல் போனது: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பென்னலுாரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில் வினாயகர், தக்ஷிணா மூர்த்தி போன்ற கற்சிலைகள் திருடு போனது குறித்தும், கோவில் பராமரிப்பின்றி இருப்பது குறித்தும், ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது, ஆனால், இவை 2011ல் ஒருவர் குறிப்பிடும் போதே “சில ஆண்டுகளுக்கு முன்னர் காணவில்லை”, என்று குறிப்பிடுகிறார்[9].  முகமதிய மற்றும்கிருத்துவ ஆட்சியாளர்கள் முன்னர் கோவில்களை நாசமாக்கினர், கொள்லையடித்தனர் என்றால், இக்காலத்திலும் அத்தகையோர் “இந்துக்கள்” வடிவத்தில் உள்ளனர் என்றாகிறது. கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சி, நாத்திக-திராவிட சித்தாந்தத்தை மக்களின் நெஞ்சங்களில் விதைத்து, நாயன்மார்கள் சொன்னதையே மறந்து, திருமூலரின் எச்சரிக்கைகளுக்கும் பயப்படாது, இத்தகைய கொள்ளைகளில் ஈடுப்பட்டுள்ளனர். சுற்றியுள்ள உள்ளூர் மக்களே கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள் அல்லது உடந்தையாக இருக்கிறார்கள் என்பது, அதைவிடக் கொடுமையான விசயாமக உள்ளது.

Pennalur Siva Temple - stone structure parts strewn around.another view

Pennalur Siva Temple – stone structure parts strewn around.another view

பாரம்பரிய கட்டிடங்கள் மீதான விழிப்புணர்ச்சி குறைவாகவும், பாரபட்சமாகவும் உள்ள நிலை: இக்கோவிலின் வளாகம் பெரிதாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் கோவிலின் கிணறு அருகிலும், குளம் தொலைவிலும் பாழடைந்துள்ள நிலையில் முறையே தென்மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் காணப்படுகின்றன. குளம் மற்றும் கிணற்றுப்பகுதிகளின் நடுவில், டன்-டன்னாக கரி வைத்துக் கொண்டு பிரிக்கப்படுவது தெரிகிறது. இன்னும் சில நாட்களில் அந்த வியாபாரம் செய்பவர், தன்னுடைய இடம் என்று அபகரித்துக் கொள்ளலாம். அருகில் ஏற்கெனவே, “பிளாட்” போட்டு நிலம் விற்கப்பட்டு வருகிறது. “ரியல் எஸ்டேட்” வியாபாரம் அஅப்பகுதியில் மோகமாக நடந்து வருகிறது. அதனால், கோவில் நிலங்கள் மறைந்து விடலாம். இப்போதைக்கு கோவிலுக்கு சொந்தமான்ச் நிலங்களின் விவரங்கள் தெரியவில்லை. எனவே, உள்ள கோவிலை புதுப்பித்து, காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், அதுவும் மறைந்து விடும். இன்று சட்டக் கல்லூரி கட்டிடம் காக்கப் படவேண்டும் என்று மாணவ-மாணவியர் போராட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்து வருகின்றனர்[10]. சாமிக்கு மொட்டைப் போடுவது போல, மொட்டையடித்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அதன் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்கின்றனர். ஆனால், சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள இத்தகைய நூற்றுக் கணக்கணாக்கான, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கோவில்களைப் பற்றி இவர்கள் கவலைப் படுவது கிடையாது.

Pennalur Siva Temple - a carved niche among the strewn stone parts

Pennalur Siva Temple – a carved niche among the strewn stone parts

ஆர். முத்தையா[11] என்பவர், பல ஆண்டுகளாக, ஐரோப்பியர்கள் கட்டிய கட்டிடங்கள் எல்லாம், சேதமடைகின்றன, சிதிலமடைகின்றன, “சரசனிக் கலை வடிவத்தில்” (Saracenic art form) கட்டப்பட்டவை போய்விடுகின்றன, பாரம்பரிய கட்டிடங்கள் காணாமல் மறைந்து விடுகின்றன என்று புலம்பி வருகிறார். ஆனால், அவருக்கும் இந்த கோவில்களைப் பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. முழுக்க-முழுக்க அந்நிய கட்டிடங்களுக்காகப் பரிந்து வக்காலத்து வாங்கி எழுதிவரும் தன்மையிலிருந்தே, இவர் அவர்களுக்கு சாதகமாக எழுதி வருகிறார் என்று தெரிகிறது. இருப்பினும், “தி ஹிந்து” அவரை ஆஸ்தான “காலனிய” எழுத்தாளராக வைத்துக் கொண்டுள்ளது. இவையெல்லாம் விழிப்புணர்ச்சியைக் குறைக்கும் முறையில் சிலர் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர் என்று மெப்பிக்கப் படுகிறது. இந்நிலையில் பக்தர்களாக இருப்பவர் கோவிலுக்காக பணி செய்து வருவதுதான் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது எனலாம்.

Pennalur Siva Temple - damaged sculpture of a diety-only feet portions found

Pennalur Siva Temple – damaged sculpture of a diety-only feet portions found

© வேதபிரகாஷ்

10-02-2015

[1] In Epigraphia Indica, Vol-IV, Pennalur is mentioned along with Sriperumbudur and adjacent villages like Irungattukkottai etc.

கி. ஶ்ரீதரன், பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோவில், http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1325

[2] E. Hultzsche (Ed.), Epigraphia India and Record of the Archaeological Survey of India, Vol.IV, 1896-97, Calcutta, see British Museum plates of Sadasivaraya by F. Kielhorn, pp.1-21.

[3] தினமலர், பென்னலூர் சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?, 19-08-2013.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=784153

[5] தினமலர், பென்னலூர் சிவன் கோவிலில் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு, 05-08-2014.

[6] இவ்வாறு இவர் கூறியிருக்கிறார், ஆனால், உண்மையினை எடுத்துக் கூற அவருக்குத் தெரியவில்லையா, மனமில்லையா அல்லது செக்யூலரிஸ சித்தாந்தந்தம் அவ்வாறு செய்ய வைத்ததா என்று நோக்கத்தக்கது.

[7] ஏற்கெனவே கல்வெட்டுகள் படிக்கப் பட்டு, “எபிகிராபிகா இன்டிகா” போன்றவற்றில் உள்ளபோது, தெரியாதது போல இப்படி கூறுவதும் நோக்கத்தக்கது.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1038078

[9] The temple’s outer walls which once boasted of beautiful idols of Lord Vinayaga, Dakshinamurthy and others were stolen by somebody few years ago. http://venkysdiary.blogspot.in/2011_12_01_archive.html

[10] These youngsters, evidently misled and instigated by some forces, have been disturbing the public for the last one week with their so-called agitation against the shifting of their college.

[11] R. Muthaiah writes every Monday in his “Madras Miscellany” only on the European buildings, tombs, churches etc., but he never bothers about Indian art and architecture.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அத்துமீறல், அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, ஆற்காடு, இறைப்பணி, உழவாரப்பணி, செப்பேடு, சோழர், சோழர் காலம், திருக்குளம், திருக்கோவில், தேசிய நெடுஞ்சாலை, பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, மாலிகாபூர், முகமதியர் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (3)

 1. SP சொல்கிறார்:

  இறையன்புடையீர் வணக்கம்,
  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது.
  1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.
  தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
  பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
  ஆலயத்தின் அமைப்பு.:
  இறைவன்:சொக்கநாதர்
  இறைவி: மீனாட்சி அம்மன்
  பிறசன்னதிகள்: தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர்
  தலமரம்: வில்வம்
  கன்னிமூலை கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளில் உற்சவர் இல்லை.
  கோவிலின் மேற்குப்பகுதி சுவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தால் இடிந்துவிட்டது.
  திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வரவேற்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s