பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (2)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (2)

ஐரோப்பிய கிருத்துவர்களின் பாரபட்ச நிலை

ஐரோப்பிய கிருத்துவர்களின் பாரபட்ச நிலை

ஆங்கிலேயர்பிரெஞ்சுகாரர்கள் முகமதியர்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை சூரையாடியது: முகலாயர் வலுவிழந்தவுடன், ஆங்கிலேயர் அவர்களை வரி வசூல் செய்ய பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு உதவியாக அவர்களது தலைவர்களை பிணையாக வைத்துக் கொண்டனர். கொத்தவால், ஜாகீர்தார், நவாப் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். உதாரணத்திற்கு சந்தா சாஹிப் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து கொண்டு பல கோவில்களைக் கொள்ளையடித்துள்ளான், இடிக்கவும் செய்துள்ளான். கொள்ளையடித்ததில் பங்கு பிரித்துக் கொண்டதை அவர்களே எழுதி வைத்துள்ளனர். ஐரோப்பியர்களின் ஆட்சிகாலத்திலும் இம்முறை பின்பற்றப் பட்டது என்பதை ஆனந்த ரங்கம் பிள்ளை போன்றோரின் டைரி குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்[1]. ஒரு இடத்தில், எப்படி அவர்கள் ஒரு கோவிலை படிப்படியாக அழிக்கிறார்கள், ஆனால், மசூதியை விட்டு வைத்தார்கள் என்பதை பதிவு செய்துள்ளார். வில்லியனூர் கோவில் கோட்டையாக மாற்ற மேற்கொண்ட முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்[2]. ஒரு சிவன் கோவில் அசிங்கப்படுத்தப் பட்டதும் விவரிக்கப் படுகிறது[3]. வேதபுரீஸ்வரர் கோவிலில் பாதிரிகள் பால் சர்ச்சிலிருந்து பீ-மனித கழிவு முதலியவற்றை ஊற்றியதையும் குறிப்பிட்டுள்ளார்[4]. இப்படி புண்ணிய ஸ்தலத்தை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தால், அங்கு வருவதை இந்துக்கள் நிறுத்தி விடுவர், பிறகு அதனை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்பது முகமதியர்-கிருத்துவர்களது திட்டமாக இருந்தது. இறந்தவர்களை கோவில் வளாகத்தில் புதைத்து ஆக்கிரமித்துக் கொள்ளும் வழக்கமும் இருந்தது. சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டும் போது, பல கோவில்களை இடுத்துதான் ஆங்கிலேயர், அக்கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள்[5]. ஆகவே இம்முறைகள் கோவில் இடிப்புகளில் பயன்படுத்தப் பட்டூள்ளதை அறிந்து கொள்ளலாம்.

Pennalur Siva Temple - entrance

Pennalur Siva Temple – entrance

நவாப்புக்களின் உலா பாதைகள் பென்னலூரின் வழியாக சென்றுள்ளன: கூகுள் வரைப்படத்தைப் பார்த்தால் பென்னலூர் இருப்பிடம் நமக்கு விளங்கும். பென்னலூர் இன்று சென்னை ஶ்ரீபெரும்புதூர் – ஆற்காடு சாலை-பூந்தமல்லி நெடுஞ்ச்சலை-பெங்களூரு நெடுஞ்சாலை- வழியில் உள்ளது. போரூர்-குன்றத்தூர்-சிறுகளத்தூர் வழியாகவும் வரலாம். பல்லாவரம்-தாம்பரம்-படப்பை-மணிமங்கலம்  வழியாகவும் வரலாம். சிங்கப்பெருமாள் கோவில்-ஒரகடம்-வடக்கால்-வல்லம்- வழியாகவும் வரலாம். வாலாஜாபாத்-வரனவாசி-சேத்துப்பட்டு- ஒரகடம்-வடக்கால்-வல்லம்- வழியாகவும் வரலாம். இவ்வழிகள் சிறிது மாறியிருந்தாலும், ஆற்காட்டு நவாப்புகள் தங்களது பரிவாரங்களுடன் சென்று வந்த பாதைகள் தாம் இவை. பென்னலூர் என்பதே ஒருவேளை பெரிய நகரமாக இருந்திருக்கலாம். ஏனெனில், இன்று, பென்னலூர் ஏரி மெட்ராஸ்-பெங்களூரு நெடுஞ்சாலையில், பென்னலூர் சிவன் கோவிலைத் தாண்டி வலது புறத்தில் உள்ளது. கோவிலோ, முன்னமே இடது புறாத்தில் இருப்பதை காணலாம். இச்சாலைகளில் அவர்கள் சென்று வந்ததற்கான அடையாளங்களை கோவில் இடிப்புகள், மசூதிகள், தர்க்காக்கள், ஊர் பெயர்கள் மாற்றம் முதலியவற்றின் மூலம் கண்டு கொள்ளலாம். இவையெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட “நவாப்புகளின் உலா” புத்தகங்களில் விவரிக்கப் பட்டுள்ளன.

Pennalur Siva Temple - entrance-Door frame right hanging out

Pennalur Siva Temple – entrance-Door frame right hanging out

ஶ்ரீதர் பற்றி நண்பர் சொன்னது: நான் அங்கு செல்லும் போது, எனக்கு கோவிலைப் பற்றி எதுவுமே தெரியாது. புகைப்படங்கள் எடுத்து, அருகில் உள்ள சிலருடன் விவரங்களைக் கேட்டு, சென்னைக்குத் திரும்பிய  பிறகு, கீழ் கண்ட விவரங்களை இணைதளத்திலிருந்து சேகரித்துக் கொண்டேன். “ஶ்ரீதரன்” என்பவர் வருவதாக இருந்தது, அவர் கோவிலைப் பற்றிய விவரங்களை எல்லாம் எனக்கு சொல்வார் என்றார், எனது நண்பர். அவர் வரவில்லை, ஆனால், கி. ஶ்ரீதரன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையை, புகைப்படகங்ளுடன் இணைதளத்தில் காண நேர்ந்தது[6]. ஒருவேளை அந்த “ஶ்ரீதர்” இந்த “ஶ்ரீதர்” ஆக இருக்கலாம். கீழ் காணும் பத்திகளில் இருப்பவை அவரது கட்டுரையிலிருந்து அப்படியே “நன்றியுடன்” போடப்பட்டுள்ள விவரங்கள் ஆகும்.

Pennalur Siva Temple - entrance-Door frame right hanging out-view from inside

Pennalur Siva Temple – entrance-Door frame right hanging out-view from inside

பென்னலூர் சிவன் கோவில் இருப்பிடம்: சென்னை – காஞ்சிபுரம் சாலையில் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குச் சற்று முன்னதாக மின்சார அலுவலகம் (E.B. Substation) அமைந்துள்ள சாலையில் கிழக்கே 1 கி.மீ தொலைவில் பென்னலூர் என்ற ஊர் அமைந்துள்ளது[7]. ஊரின் துவக்கத்தில் அமைந்துள்ள ஏரியின் அருகே அகத்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். சுற்றுச்சுவர் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது. மேலும் திருச்சுற்றில் உள்ள பரிவார ஆலயங்களான சுப்ரமணியர் சன்னிதி, அம்மன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை முழுமையும் கற்கள் கீழே விழுந்து முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. சன்னிதிகளில் தெய்வ மூர்த்தங்களான சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. இக்கோயிலின் தெற்குப்பக்கத்தில் அமைந்துள்ள நுழைவுவாயில் 15-16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நுழைவு வாயிலின் கற்களும் கீழே விழுந்து, அதன்மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்தளத்தின்மீது வேப்பமரம், ஒதியமரம், ஆலமரம் போன்றவை (30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மரங்களாக உள்ளன) வளர்ந்து கோயில் கருவறை, சுவர் ஆகியவை மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மரங்களின் வேர்கள் கற்களுக்கு இடையில் ஊடுருவியிருப்பதால் சுவரில் உள்ள கற்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றி முட்செடிகள் வளர்ந்துள்ளன.

Pennalur Siva Temple - entrance side crumbling down

Pennalur Siva Temple – entrance side crumbling down

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில். நுழைவுவாயிலில் பலிபீடம், நந்தியெம்பெருமான் ஆகியவை வழிபாட்டில் உள்ளன. பலிபீடத்திற்கு முன்பாக சதுரவடிவிலான ஒரே கல்லால் ஆன கற்தொட்டி உள்ளது. இதன் விளிம்பில் “ஸ்வஸ்திஸ்ரீ திருவெண்காட்டு நங்கை” என்ற 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்து அமைதியுடன் கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது. இக்கல்தொட்டியை “திருவெண்காட்டு நங்கை” என்ற பெண் செய்தளித்திருக்க வேண்டும். நந்திக்குப் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிடேக வழிபாடுகளை ஊர்மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நந்திக்கு எதிரே கருவறை முன்மண்டபச் சுவரில் இறைவனைத் தரிசிக்க வசதியாகச் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது.

Pennalur Siva Temple - Agatteeswarar Lingam

Pennalur Siva Temple – Agatteeswarar Lingam

கருவறை அமைப்பு விவரங்கள்[8]: கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். ஊர்மக்கள் அவ்வப்பொழுது வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கருவறையை அடுத்து முன்மண்டபம் உள்ளது. முன்மண்டபத்துத் தூண்கள் உருளைவடிவில் (விருத்தக்கால்), தூணின் கலசப்பகுதிக்குக் கீழே தொங்குமாலை போன்ற அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகின்றன. இறைவனை வழிபட முன்மண்டபத்தின் தெற்குப்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின்வழி மேலேறிச் செல்ல வேண்டும். கருவறைக்கு மேலே விமான அமைப்பு இல்லை. செங்கல்-சுதையால் ஆன விமானம் இருந்திருக்க வேண்டும். செவ்வக வடிவில் கருவறை அமைந்துள்ளது. சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. இவற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றில்கூடத் தெய்வத் திருமேனிகள் இல்லை. கருவறை பாதபந்த அதிட்டான அமைப்புடன் விளங்குகிறது.

Pennalur Siva Temple - view from SE

Pennalur Siva Temple – view from SE

உள்ள சிற்பங்களின் விவரங்கள்: தேவகோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மகரதோரணத்தின் நடுவே அழகிய சிற்பங்களுடன் காணப்படுகின்றன. தெற்கிலிருந்து சுற்றி வரும்பொழுது மகரதோரணத்தின் நடுவில்

தெற்கு: (1) அகத்தியர் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. அகத்தியருக்குப் பின் ஒரு அடியவர் காணப்படுகிறார்.

(2) கபோத அமைப்புடன் கஜலட்சுமி வடிவம் (இப்பகுதி பிற்காலத் திருப்பணியின்போது இங்கு அமைக்கப்பட்டதாக விளங்குகிறது)

மேற்கு: (3) பிரகலாதன் தொழ அமர்ந்த நிலையில் காட்சிதரும் நரசிம்மர்

வடக்கு: (4) பிரம்மா இறைவனை வழிபடும் காட்சி

(5) ஆலிலைக் கண்ணன் ஆகிய சிற்ப வடிவங்கள் அழகு செய்கின்றன.

மகரதோரணத்திற்கு மேலே கருவறையின் கபோதப் பகுதிக்குக் கீழே பூதகணங்கள் பல்வேறு நிலையில் நடனம் ஆடிக்கொண்டும், பலவிதமான இசைக்கருவிகளை வாசிக்கும் நிலையிலும் சிற்பங்களைக் காணலாம். பூதவரிசைக்கு இடையே உத்தரப் பகுதியில் கீழ்க்கண்ட புடைப்புச் சிற்பங்கள் (Relief Sculptures) காணப்படுகின்றன.

(1) கொண்டை அலங்கரிக்கப்பட்ட தலையுடன் அமர்ந்திருக்கும் ஒரு ஆடவர் இறைவனை வழிபடும் காட்சி.

(2), (3) கண்ணப்ப நாயனார் வரலாற்றைக் கூறும் இரு சிற்பங்கள். கண்ணப்பன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. அடுத்து தன் கண்ணை அம்பால் எடுக்கும் காட்சி.

(4), (5) சண்டேசுவர நாயனார் கதை. முதலில் விசாரதருமரான சண்டேசுவரர் பாற்குடம் கொண்டு இறைவனுக்கு அபிடேகம் செய்யும் காட்சி, அடுத்துப் பால்குடத்தைக் காலால் உதைத்த தனது தந்தையான எச்சதத்தனை மழுவினால் வெட்டும் காட்சி.

(6) லிங்கத்தின்மீது பசு பால் சொரியும் காட்சி

(7), (8) கருவறை நுழைவுவாயிலின் மேலே அமைந்துள்ள பகுதியில் யானை மற்றும் குரங்கு (அனுமன்) சிவலிங்கத்தை வழிபடும் காட்சி.

© வேதபிரகாஷ்

10-02-2015

[1] Temple destroyed, mosque spared – Ananda Rangam Pillai diary; pp.298-313; http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/vol05/05_298.pdf

[2] http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/vol08/08_088.pdf

[3] http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/vol01/01_332.pdf

[4] http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/vol03/03_220.pdf

[5] C. S. Srinivasachari, History of Old Msadras,

[6] கி. ஶ்ரீதரன், பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோவில், http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1325

[7] This temple is now located behind the Electricty Board sub-station on the NH. The temple is in ruins but the saving grace is the temple is under worship for the last few years thanks to the local efforts. The temple dates back to 11th Century AD and the main temple is still very much intact. The outer prakara and the walls have given away and the stones are lying scattered all around. The original name of this place, as we could find from our inscription reading is “Keralanthaka Cholan Peru Nallur”. Perunallur has morphed itself into Pennalur over the course of time. The temple’s outer walls which once boasted of beautiful idols of Lord Vinayaga, Dakshinamurthy and others were stolen by somebody few years ago. http://venkysdiary.blogspot.in/2011_12_01_archive.html

[8] கி. ஶ்ரீதரன், பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோவில், http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1325

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீசுவரர், அகஸ்தீஸ்வரர், ஆற்காடு, சதாசிவராயர், நவாப், பென்னலூரு, பென்னலூர், பென்னலேரி, பெருநல்லூர் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s