தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (2)!

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (2)!

தாரமங்கலம் - வெளியே கிடக்கும் சிற்பங்கள் கொண்ட தூண்கள்.

தாரமங்கலம் – வெளியே கிடக்கும் சிற்பங்கள் கொண்ட தூண்கள்.

375 ஆண்டுகளாக வெளியே கிடக்கும் தூண்கள்: வெளியில் கோவிலின் வடமேற்குப் பகுதியில் அழகிய வேலைப்பாடு கொண்ட சிகப்பு நிறக்கற்களில் செதுக்கப்பட்ட 20 தூண்கள் கிடக்கின்றன. சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்துள்ளன; குப்பைக்கூளங்களும் உள்ளன. பூமிக்கு அடியிலும் அத்தகைய தூண்கள் சுமார் 500 புதையுண்டு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது[1]. சமீபத்தில் தூர் வாரும் போது, குளத்திலிருந்து சிலை, பூஜை மணி முதலியன கண்டெடுக்கப்பட்டுள்ளன[2]. அதாவது, அதேபோல தோண்டினால் அந்த 500 தூண்களும் மீட்டெடுக்கப் படலாம். இந்த 20 தூண்கள் கோவிலுக்கு முன்பாக இருந்தனவாம், சாலை விரிவாக்கத்தின் போது, அருகில் போட்டுள்ளார்கள், என்று சிலர் சொல்கிறார்கள். அருகில் சாக்கடையும் ஓடுகிறது. 13ம் நூற்றாண்டில் கட்டி முதலி ராஜா மும்முடி இக்கொவில் பணியை ஆரம்பித்து வைத்தது, 17ம் நூற்றாண்டில் வணங்காமுடி முதலி காலத்தில்  முடிவுற்றது. அவன் ஒரு ஆயிரம் கால் மண்டபம் கட்ட வேண்டும் என்ற ஆசையினால், இத்தூண்களை வடிக்க ஆணையிட்டான்[3]. ஆனால், 1667ம் ஆண்டு ஓமலூரில் நடந்த போரில் இவன் கொல்லப்பட்டதால், இப்பணி நின்று விட்டது[4]. 1975ல் கட்டலாம் என்று உள்ளூர் கலெக்டர் தூண்களை எடுக்கலாம் என்று முயன்றாராம். அதற்குள் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் வேலை நின்றுவிட்டதாம்[5].

1975 முதல் 2015 வரை தொடரும் நிலை: கடந்த 40 ஆண்டுகளாக மற்றெந்த கலெக்டருக்கும், தொழிறதிபர், பணக்காரர் எவருக்கும் அப்பணியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை போலும்! யார்-யாருக்கெல்லாம் மணிமண்டபம் கட்டுவேன் என்று போராடும் சிறுத்தைகள், புலிகள் முதலியவையும் நரிகள் போன்று பதுங்கி விட்டன போலும்! 1969-70களில் ஆட்சி செய்த அண்ணாதுரை முதலியார் கண்டுகொள்ளவில்லை என்றால், அவர் நாத்திகர் என்று சொல்லலாம், ஆனால், மற்ற ஆத்திக முதலியார்கள் ஏன் பாரம்பரியத்தை மறந்தார்கள் என்று தெரியவில்லை. 2003ல் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது மாநில விசுவாசத்தைக் காட்டிக் கொண்ட விஜய மல்லையா போல, இங்கு எவரும் இல்லை போலிருக்கிறது[6]. கோவிலைப் பார்க்க அறநிலைய அதிகாரிகள், முதலியோர் வருகிறார்கள், கோடிக்கணக்கில் மராமத்து வேலைக்கு பணத்தை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன[7]. சமபந்தி போஜனம் என்றெல்லாம் செலவழிப்பார்கள், ஆனால், இதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை[8]. ஒருநாளைக்கு யாராவது அள்ளிச் சென்றுவிட்டாலும், யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. பிறகு, வி.ஜி.பி போன்ற வியாபார இடங்களில் காண நேரிடலாம்.

கோவிலின் உட்புறத்தில் இருக்கும் சிற்பங்கள், விவரங்கள்: கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றதும், இடதுபக்கம், ஒரே சிவலிங்கத்தில் 1008 லிங்கங்கள் வரையப்பெற்ற “சகஸ்ரலிங்கம்” சன்னதி உள்ளது. உலகம் இப்படித்தான் இருந்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கோயில் சுவற்றில் பல நீர்வாழ் உயிரினங்கள், வனத்தில் வாழும் உயிரினங்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. “பசு” லிங்கத்தின் மீது பால் பொழியும் காட்சி, கண்ணப்ப நாயனார் லிங்கத்துக்கு கண் வைத்த காட்சி, ஒரு பெண் தன்னுடைய குழந்தையை மடியில் கட்டிகொண்டு பூப்பரிக்கும் காட்சி ஆகிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் பின்புறம் மதில்சுவரை ஓடியுள்ள இடத்தில் “பஞ்ச”லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்தின் வலப்பக்கம் அவினாசியப்பர் சன்னதி உள்ளது. உள்ளேயிருக்கும் அவினாசியப்பர் சதுரவடிவில் அமைந்துள்ளார். இறைவனின் முன்னே வீற்றிருக்கும் நந்தி மற்ற கோவில்களில் இருப்பது போல இல்லாமல் “அலங்காரநந்தி”யாக இருக்கிறது. சிறந்த அலங்கார வேலைபாடுகளுடன் உண்மையான நந்தியைபோலவே அமைந்துள்ளது. இச்சன்னிதியின் வெளிப்புற சுவர்களில் பல சிற்பங்கள், சிறிய வடிவில் இருந்தாலும், பல அரிய விவரங்களைக் கொண்டுள்ளன.

மாலிக்காபூர் 1311ல் வந்து கொள்ளையடித்தது[9]: 1311ம் ஆண்டு டெல்லியை ஆண்டு வந்த மாலிக்கபூர், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது, முதலில் தாக்குதலுக்கு உள்ளான இடம்தான் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம். அதன் பின்னர், சிதம்பரம், மதுரை, ஆழகர்கோயில் என்று படையெடுத்து சென்று அங்குள்ள கோவிலில் இருந்த பல செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு தாரமங்கலம் வழியாகத்தான் தன்னுடைய நாட்டுக்கு திரும்பிச்சென்றான், அப்போது, காடுகளில் மறைந்திருந்த கட்டிமுதலியின் வீரர்கள், மாலிக்கபூர் ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச்சென்ற பொன், பொருளை பிடுங்கிக்கொண்டு போய் ஆத்தூரில் உள்ள கோட்டையை கட்டினர் என்று சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றை இந்த ஆலயத்தில் உள்பிரகார சுவர்களில் உள்ள கல்லில் பதிவு செய்து வைத்துள்ளனர். வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவால், கேடையத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர் காட்சிகள், மதுரையில் மீனாட்சியம்மனுக்கு கரும்பை கொடுத்து மாலிக்கபூர் பரிகாசம் செய்த காட்சி, பின்னர் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் யானை, ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு திரும்பி செல்லும் காட்சி, திரும்பிச்செல்லும் மாலிக்கபூரை வழிமறித்து கட்டிமுதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி, பின்னர், மதுரையில் கொள்ளையடித்துக் கொண்டு யானை ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு வந்த பொருட்களையெல்லாம் கட்டிமுதலியின் வீரர்கள் பரித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஓன்று மாலிக்கபூரோடு செல்லுவது போன்ற ஒரு காட்சியும் மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு கற்சுவரில் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்று உண்மைகளும் இருக்கின்றன.

கட்டி முதலியின் வீரர்கள், மாலிக்கபூர் கொள்ளையடித்ததைப் பிடுங்கிக்கொண்டார்கள் என்பது உண்மையா?: மாலிகாபூர் படைகள் தோப்பூர், ஓமலூர், சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கண்ணனூர், வழியாக ஶ்ரீரங்கம் சென்றடைந்தது என்பதை எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் எடுத்துக் காட்டுகிறார்[10]. ஆக வழியெல்லாம் இவர்கள் கொள்லையடித்திருப்பார்கள். “மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு கற்சுவரில் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளது” என்று இன்று எழுதுகிறார்கள், சரி அவ்வாறு தமிழர்கள் ஏன் அவனை கொள்ளையடிக்க விட்டார்கள்? அக்காலத்தில் 1311ல் தமிழர்கள் என்ன அந்த அளவிற்கு கோழைகளாக இருந்துள்ளனர்? ஏன் அதைப் பற்றி இவ்வாறு வர்ணித்து எழுதுபர்கள் எழுதுவதில்லை? ஒருவேளை அக்காலத்திலேயே, இன்று போல மாலிக்காபூருடன் கூட்டு வைத்துக் கொண்டு, இந்துக் கோவில்களை ஒழித்துவிடலாம் என்ற முனைப்போடு, திராவிடர்கள் வேலை செய்தார்களா என்று தெரியவில்லை. வீரபாண்டியன் துண்டைக்காணோம், துணியைக் கோணோம் என்று தனது பெண்டாட்டி-பிள்ளைகளையெல்லாம் விட்டு ஓடியபோது, கட்டிமுதலியின் வீரர்கள் மட்டும், மாலிக்கபூர் ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச்சென்ற பொன், பொருளை பிடுங்கிக்கொள்ளும் அளவிற்கு எப்படி தைரியசாலிகளாக இருந்திருக்க முடியும்? இங்குதான் ஒருவேளை, வீரவல்லாளனின் பங்கு மறைக்கப்படுகிறது போலும். வீரவல்லாளன் மட்டும் தான் மாலிக்காபூரை கடைசி வரைக்கும் எதிர்த்துப் போராடியவன். இந்த கட்டி முதலியார்கள் வீரவல்லாளனின் பிரதிநிதிகளாக, இருந்திருக்கக்கூடும். ஹளபீடு, திருவண்ணாமலை மற்றும் சேலத்திற்கு அருகில் ஒரு இடம் என்று மூன்று தலைநகர்களைக் கொண்டு, முகமதிய படை உள்ளே வரக்கூடாது என்று அரும்பாடு பட்டவன். இக்கோவில் கோபுரவாசல் படிகட்டுகளின் இருபுறமும், ஹொசள சின்னங்கள் இருப்பது எடுத்துக் காட்டப்பட்டது.

நுண்வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள்[11]: கைலாசநாதரின் பிரகாரத்துக்குள், நுழையும் வாயிலின் முன்புறம் திண்ணைபோல அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், மேல் தளம் 13 கற்களை கொண்டு அமைத்துள்ளனர். அதில் குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு கற்தூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு வீரன் புலியை குத்தி கொள்ளும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதில், புலித்தலையில் ஏறியிருக்கும் வேல் மறுபக்கம் வெளியே வரும் காட்சியை அழகாக செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு தூணின் வலது புறம் ஒரு அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு அமைப்பிலும் இந்த குதிரையும் அதன் மீதுள்ள வீரரும் இருக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள குதிரையின் திறந்திருக்கும் வாயில் உள்ள பற்களுக்கு உள்ளே ஒரு கற்பந்தை (கல்லில் செய்யப்பட்ட பந்து) நம் விரலால் தள்ளி உருட்டி விளையாடும் வகையில் அமைத்துள்ளனர். இதே மண்டபத்தின் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்பு காது, மூக்கு, பிறகு தாடியில் நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் சிறிய துவாரங்களை அமைத்து கல்லில் சிலை செதுக்கியுள்ளனர். மண்டபத்தை சுற்றிலும் கண்ணகியின் கால் சிலம்பை போன்ற சிலம்புகளை கொண்டு அடுக்கப்பட்ட சங்கிலித்தொடர் அலங்கார வேலைப்பாடு செய்துள்ளார்கள், ஒவ்வொரு  சிலம்புக்கு இடையிலும் சிறிய துவாரங்கள் கொடுத்து சிலை வடித்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

27-01-2015

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/call-to-restore-374yearold-exquisitely-carved-pillars/article6166597.ece

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1034810

[3] S. P. Saravanan, Call to restore 374-year-old exquisite carved pillars, The Hindu, Salem edition, July.1, 2014.

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/for-374-years-there-are-no-takers-for-these-pillars/article6165341.ece

[5] In 1975, the 143rd Collector of the district, A.M. Swaminathan, tried to retrieve the pillars and construct the mandapam. But the declaration of Emergency, on June 26, 1975, halted the plan; thereafter, no efforts were made to preserve the pillars, along which debris and garbage are dumped. S.P. Saravana, For 374 years, there are no takers for these pillars, The Hindu, dated July.1, 2014.

[6] Beer baron Vijay Mallya, who bought the legendary sword at a private auction in London in September 2003 for Rs.1.57 crore. The sword, one of the most coveted war trophies to be auctioned in recent years was part of the personal arsenal of the Lion of Mysore and was taken by storm in 1799 after the fall of Srirangapatnam and would be displayed for public viewing for a week every year on the occasion of Tipu Sultan’s anniversary at his dargah at Srirangapatnam.

http://indiatoday.intoday.in/story/vijay-mallya-buys-tipu-sultans-legendary-sword/1/197209.html

[7] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=412927&cat=504

[8] http://origin1.dailythanthi.com/Independence%20Day%20Festive%20From%20temples

[9] ஆத்தூர் பெ.சிவசுப்ரமணியம், வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!, நக்கீரன் வார இதழ்.

[10] S. Krishnaswami Iyengar, South India and her Mohammedan invaders, AES, New Delhi, 1991, p.103.

[11] ஆத்தூர் பெ.சிவசுப்ரமணியம், வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!, நக்கீரன் வார இதழ்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அழிப்பு, உடைப்பு, ஒட்டகம், செல்வம், தாரமங்கலம், துருக்கர், மாலிகாபூர், முகமதியர், யானை and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (2)!

  1. Agathiyadaasan Ram சொல்கிறார்:

    முதலி என்ற பெயரில் அரசியலில் இருந்ததே 13ஆம் நூற்றாண்டில்தான் வருகிறது- அவர்கள் 14ஆம் நூற்றாண்டில் மாலிக்பூர் அவர்களை டெல்லியில் ,இருநது வரவைத்து இருக்க வேண்டும் என்றே உணர்த்துகிறது உங்கள் கேள்வி, சாரியான கேள்வி, நன்றி தமிழன் தமிழரசன் தம்பி,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s