அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் (Courtesy GOOGLE MAP)

ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் கோவிலின் இருப்பிடம்: இம்மாத உழவாரப்பணி, இன்று 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை, கொரட்டூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெற்றது[1]. காலை 9 மணி அளவில் முதலில் திருமறை ஊர்வலம் நடைப்பெற்றது. பிறகு காலை உணவு அருந்திய பின்னர் உழவாரப்பணி ஆரம்பித்தது. அதற்கு முன்னரே, சில தொண்டர்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர். இக்கோவில் பாடி அருள்மிகு படவட்டம்மன் திருக்கோவிலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவிலும், கொரட்டூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. காலை 7 மணி அளவிலேயே, உழவாரப்பணி தொண்டர்கள் வந்து குழும ஆரம்பித்தனர். பிறகு வந்தவர்கள், பேருந்து வேலை நிறுத்தம் காரணமாக அவதிப்பட நேர்ந்தது[2]. இதனால், ரயில், ஷேர் ஆட்டோ, ஆட்டோ என்று வண்டிகளைப் பிடித்து வந்து சேர்ந்தனர். இதுதான் சமயம் என்று ஆட்டோ-ஷேர் ஆட்டோகாரர்கள் அவர்கள் இஷ்டப்படி வசூல் செய்ய ஆரம்பித்தார்கள். வேறுவழியில்லாமல், அவ்வாறே கொடுத்து வர நேர்ந்தது[3].

1. frontside of the temple

1. frontside of the temple

சிவன், பெருமாள் கோவில்கள் இருக்கும் அமைப்பு: ஆதிகேசவப்பெருமாள் கோவில், அம்மன் கோவில், வினாயகர் கோவில் மற்றும் ஜம்புகேஸ்வரர் கோவில், இவ்விடத்தில் உள்ளன.  அம்மன் கோவில், வினாயகர் கோவில் சிறியதாக குளத்திற்கு தெற்குப் பக்கத்தில் உள்ளன. பெரியதாக உள்ள குளம், ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் ஜம்புகேஸ்வரர் கோவில்களுக்கு இடையே இருக்கிறது. தெருக்கள் இவற்றைப் பிரிக்கின்றன, மேலும் அவை அத்தகைய பிரிப்பிற்கு பொறுந்தாத வகையில் உள்ளதாகத் தெரிகிறது. குளக்கரையின் நான்கு பக்கங்களிலும் நடைபாதை போடப்பட்டுள்ளது. அதில், அங்குள்ள மக்கள் தினசரி நடப்பதற்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இவை இருக்கும் அமைப்பு, ஒருவேளை இவையெல்லாம் ஒரே வளகத்தில், சுற்றிலும் மத்ற்சுவற்களோடு இருந்திருக்கலாம் போன்று தோன்றுகிறது. அதாவது இடைக்காலத்தில், சைவ-வைணவ இணக்கத்திற்காக ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்களையும் கட்டுவது வழக்கமாக இருந்தது. பிறகு நாளடைவில், கோவில் நிலங்கள் மற்ற செயல்களுக்காக, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டதால், அவை இப்பொழுது ஏதோ தனித்தனியாக இருப்பது போன்று காணப்படுகின்றன.

2. Temple south-west corner view from outside

2. Temple south-west corner view from outside

கோவிலில் உள்ள விக்கிரங்கள், அமைப்பு முதலியன: திருஞான சம்பந்த சுவாமிகளின் பாதக்குறடுகள் இங்கே தென்பட்டமையால், இவ்விடத்திற்கு கொரட்டூர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறாக இருந்தால், இக்கோவிலின் காலம், 7-8 நூற்றாண்டுகளுக்கு செல்லும். கர்ப்பகிருகத்தின் வெளிப்பக்கம் நீள்வட்டத்தில் அமைந்துள்ளதும் அதனை எடுத்துக் காட்டுகிறது. ஆனால், அதன் மீது பலதடவை வெள்ளை அடித்துள்ளதால் சிற்பங்கள் மற்ற விவரங்கள் சரிவரத் தெரியாத நிலையில் இருக்கிறது. லிங்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அகிலாண்டேஸ்வரி அம்பாளின் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. முதல் பீடத்தில் விநாயகரும், இரண்டாம் மேடையில் வள்ளி-தெய்வயானை சமேத சுப்பிரமணிய விக்கிரங்கள் உள்ளன. நால்வர்களின் சிலைகள் தென்கிழக்கு மூலையில் இருக்கின்றன. கோவிலின் வெளிப்புறப் பிரகாரத்தில் காகஜபுண்டர் தியான மண்டபம் இருக்கின்றது. அதாவது காகஜபுண்டர் என்ற சித்தர் இங்கு வந்து வாழ்ந்தத்தாகக் கூறப்படுகிறது. சிலர் அவருடைய ஜீவசமாதியும் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை. இக்கோவிலே 100-150 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது[4] என்று சொல்லப்படுவதால், இத்தகைய நம்பிக்கைகள் பிறகு உருவாகியிருக்க வேண்டும்.

3. temple north-west view from outside

3. temple north-west view from outside

காகஜபுண்டரின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள்: காகஜபுண்டர் தமிழகத்தில் பல இடங்களில் இருப்பதாக கதைகள் கூறுகின்றன. அதற்கேற்ற வகையில், பற்பல இடங்களில் அவரது ஜீவசமாதிகள் இருப்பதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது[5].

 1. சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர் அருள்கின்றார்.
 2. திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டர் அருள்புரிகின்றார்.
 3. நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.
 4. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.
 5. இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் இலந்தை மரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதி உள்ளது.
 6. கொல்லிமலையில் காகபுஜண்டர் குகை உள்ளது.
 7. சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.
4. view from westernside from outside

4. view from western-side from outside

5. view from outside north-east corner

5. view from outside north-east corner

ஶ்ரீ ஆதிகேசவப்பெருமாள் / ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்[6]: ஶ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோவில் 1340 ஆண்டு இரண்டாம் ராஜநாராயணன் என்ற மன்னனால், “லக்ஷ்மி நாராயணன்” கோவிலாகக் கட்டப்பட்டது[7]. 1852ம் ஆண்டு ஆங்கிலேயர் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஆதிகேசவர் விக்கிரங்களை ஒரே இடத்தில் வைத்து விட்டார்களாம். பிறகு அவை தனித்தனியாக வைக்கப்பட்டனவாம். அப்பொழுது கோவில் சன்னதிகள் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1945, சுவாமி நிவேதனத்திற்கு அரிசி கிடைக்காததால், வரக அர்சியால் நிவேதனம் செய்து படைக்கப்பட்டதாம். இது ஆட்சியாளர்களுக்கு புகாராக அளித்தபோது, சமைத்த கலத்துடன் வந்து ஆஜராக கட்டளை இடப்பட்டது. கோவில் பட்டர், அவ்வாறே சென்று கலயத்தைக் காண்பித்தபோது, நல்ல அரிசியில் சமைக்கப் பட்ட அன்னம் கலயத்தில் இருந்தததாம். இது ஒரு அதிசயமாக அப்பொழுது கருதப்பட்டது. 1994ல் ஆதிகேவப் பெருமாளுக்கு, லக்ஷ்மி நாராயணர் சுவாமி சன்னதிக்கு பக்கத்தில் தனியாக புது சன்னதி கட்டப்பட்டது. 10-02-2012 அன்று தமிழக இந்து அறநிலையத் துறையினரால், கும்பாபிஷேகம் செய்து வைக்கப் பட்டது[8]. கோவில் புனருத்தாரணத்திற்கு “சுந்தரம் கிளேட்டன்” அதிகாரி ஒருவர் உதவியுள்ளார். வைகானச ஆகமத்தின் படி இங்கு பூஜை முதலியவை நடத்தப் பட்டு வருகின்றன. இரண்டு பெருமாள்கள் இருப்பதால், “இரட்டை பெருமாள்” என்றும் அழைக்கப்படுகிறது. திருவாய்மொழி 10வது பாசுரத்தில் இரட்டை பெருமாள் பற்றிய குறிப்புள்ளது.

6. view from eastern side

6. view from eastern side

7. south-east corner view from outside

7. south-east corner view from outside

8. Sannadhi inside

8. Sannadhi inside

9. Kakabujandar Dhyana mantapam

9. Kakabujandar Dhyana mantapam

10. Kakapujandar Dhyanamantap-closer view

10. Kakapujandar Dhyanamantap-closer view

11. Typical pallava style -rectangular with circular end

11. Typical pallava style -rectangular with circular end

12. extended view of the Sanctum sanctorum

12. extended view of the Sanctum sanctorum

13. view from Nandi side-east

13. view from Nandi side-east

14.Nalvar inside

14.Nalvar inside

15. Facing Sanctum sanctorum

15. Facing Sanctum sanctorum

16. Linga can be seen

16. Linga can be seen

17. Vallu, Murugan, Deivayanai

17. Vallu, Murugan, Deivayanai

 Valli, Murugan, Deivayanai

18. Valli, Murugan, Deivayanai

19. Women volunteers engaged in work

19. Women volunteers engaged in work

20. south-west corner of the tank-Adikesavaperumal temple can be seen

20. south-west corner of the tank-Adikesavaperumal temple can be seen

21. view from south-west corner of the tank

21. view from south-west corner of the tank

22. view from north-west of corner of the tank

22. view from north-west of corner of the tank

23. view from south-east corner of the tank

23. view from south-east corner of the tank

24. Adikesavaperumal temple opposite to Sivan temple

24. Adikesavaperumal temple opposite to Sivan temple

25. View of the temple from outside s-w

25. View of the temple from outside s-w

26. view from N-W of Perumal temple

26. view from N-W of Perumal temple

27. view from outside S-E corner

27. view from outside S-E corner

28.Lakhsminarasimhar Sannadhi

28.Lakhsminarasimhar Sannadhi

29. Adikesava and Lakhsminarayana Gopuras

29. Adikesava and Lakhsminarayana Gopuras

30. view of both from S-E corner

30. view of both from S-E corner

31. mixing of lime.colour started for whitewashing

31. mixing of lime.colour started for whitewashing

32. work started - white washing

32. work started – white washing

33. White washing going on

33. White washing going on

34. Tirumarai procession

34. Tirumarai procession

35. Tirumarai procession-another view

35. Tirumarai procession-another view

36.Tirumarai procession-yet another view

36.Tirumarai procession-yet another view

37. Dues to the Jambukeswarar - defaulters list

37. Dues to the Jambukeswarar – defaulters list

38. Varasakti Vinayakar temple nearby

38. Varasakti Vinayakar temple nearby

39.Amman temple nearby to Perumal temple

39.Amman temple nearby to Perumal temple

40. Nam Tamizhar flag hoisted touching the compound wall of Perumal temple

40. Nam Tamizhar flag hoisted touching the compound wall of Perumal temple

[1] http://temple.dinamalar.com/news_detail.php?id=38043

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆல<யங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.

[2] அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6732511.ece

[3] சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து‌க் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோக்களையும், ஆட்டோக்களையும் நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படாததால், வெளியூர் செல்லும் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-193075.html

[4] கோவில் ஸ்தல வரலாறு என்று பிரசுரிக்கப் பட்டுள்ள நான்கு பக்க நோட்டிசில், “சில நூற்றாண்டுகளுக்கு மு எழுந்த அதியத்புதமான சிவாலயம்….” என்றுள்ளது.

[5] http://www.vivekabharathi.in/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C/

[6] இவ்விவரங்கள், கைங்கர்ய சபா 12ம் ஆண்டு விழா மலரில் உள்ள விவரங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

[7] மேற்படி, பக்கம்.7.

[8] மேற்படி, பக்கம்.3.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகிலாண்டேஸ்வரி, அறக்கட்டளை, ஆக்கிரமிப்பு, ஆதிகேசப்பெருமாள், ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காகஜபுண்டர், காலம், குளம், குளம் அமைப்பு, கொரட்டூர், சன்னிதி, சித்தர், ஜம்புகேஸ்வரர், பாடி, லக்ஷ்மிநாராயணர் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

 1. Pingback: 183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகூப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெருமா

 2. Pingback: 183வது உழவாரப்பணி கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள –அருள்மிகு ஆதிகேசவ பெரு

 3. Pingback: ஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1] | உழவ

 4. Pingback: ஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1] | உழவ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s