அருள்மிகு ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் , காஞ்சிபுரம் 23-11-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

அருள்மிகு ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் , காஞ்சிபுரம் 23-11-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

உழவாரப்பணி 154

159வது உழவாரப்பணி: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் (டிரஸ்ட் பதிவு எண்.59/.2004) சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 159வது உழவாரப்பணி 23-11-2014 அன்று நடந்தது. சுமார் 300 பேர் சென்னை மற்ரும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து பக்தர்கள்-உழவாரப் பணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முதலில் திருப்பதிகம் தலையில் ஏந்தி, ஊர்வலமாக புரப்பட்டுச் சென்று, வீதிவலம் வந்து, சாமி தரிசனம் செய்தனர். பிறகு கோவிலில் உழவாரப் பணி ஆரம்பிக்கப் பட்டது. கோவிலுள்ள நாற்புறங்களிலும் வளர்ந்துள்ள செடி-கொடிகள் அப்புறப்படுத்தப் பட்டன. விக்கிரங்கள்-துணிகள் நன்றாக சுத்தம் செய்யப் பட்டன. அதிகம் பேர் வந்திருந்ததால் பணி விரைவாக முடிக்கப் பட்டு விட்டது.

Tirumarai procession

Tirumarai procession

கோவில் இருப்பிடம்: காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 80 Km தொலைவில் இருக்கும் இவ்விடத்திற்கு ரெயில் மற்றும் பேருந்து மூலம் சென்றடையலாம். இக்காலத்தில் வாகங்கள் மூலமும் செல்லலாம். ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் கோபுரம் 59 மீட்டர் /  190 அடி, இந்தியாவில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாக விளங்குகிறது மற்றும் 9 நிலைகளை உடையதாகவும் அமைந்துள்ளது ன் இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சமீபகாலம் வரை, மெட்ராஸ்-பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது, இதன் கோபுரம் வயல்களில் நடுவே கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும். இப்பொழுது, கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டதால், அது பார்வையிலிருந்து மறைந்து வருகிறது. கோவில் கோபுரத்தின் உயரத்திர்கு மேலாக எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என்ற நிலை மறக்கப்பட்டு விட்டது.

Cleaning work going on

Cleaning work going on

Work going on on the backside of the Sanctum sanctorum

Work going on on the backside of the Sanctum sanctorum

Work carried on in another part

Work carried on in another part

Relaxing volunteers after doing work

Relaxing volunteers after doing work

ஏகாம்பரம்பெயர் வந்த விதம்[1]: மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. சொல் எம்மொழியில் இருந்தாலும், ஸ்தலபுராணங்கள் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் கதை மூலமாக விளக்குகின்றன.

3000 years old mango tree Kanchipuram

3000 years old mango tree Kanchipuram

மண்ணைபூமியைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று: சிவனுடைய பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மண்ணை பூமியைக் குறிக்கும் ஸ்தலமாக இருக்கிறது. அதாவது ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து மண் அல்லது பூமி உருவாகியபோது, பல ஆண்டுகள் கழித்து உயிரினங்கள் வாழத் தகுதியாக மாறியது.

எண் பஞ்சபூதம் இடம் லிங்கம் / பெயர்
1 ஆகாயம் / ஆகாசம் சிதம்பரம் ஏகாம்பரேஸ்வரர்
2 காற்று / வாயு காளஸ்தி
3 நெருப்பு / அக்னி திருவண்ணாமலை ரருணாசலஸ்வரர்
4 நீர் / அப்பு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
5 மண் / பிருத்வி காஞ்சிபுரம்

சூரியனிலிருந்து பூமி தோன்றியது, நெருப்புக் கொழம்பு ஆறி, மலைகளாக, நதிகளாக மாறின எனும் போது, பூமி எப்பொழுதும் அதிர்வுகளினால், பூகம்ப வட்டங்களில் இருப்பது தெரிய வருகிறது[2]. ஆதிகாலத்திலிருந்தே மனிதனுக்கு அத்தகைய உண்மைகள் தெரிந்திருந்து அவற்றை தனது மதநம்பிக்கைகளுடன் இணைத்து வைத்திருந்தான். இங்கு இருக்கும் லிங்கம் கூட மண்ணால் செய்யப்பட்டதாகும், அதனால், அதற்கு அபிசேகம் முதலியன இல்லை. மாறாக நந்திகேஸ்வருக்குத்தான் நடந்து வருகிறது.

IEkambareswar temple entrance Gopuram

IEkambareswar temple entrance Gopuram

சில நாயன்மார்களின் பிறப்பிடம் முதலியன: திருக்கச்சியேகம்பம் என்றழைக்கப் படுகின்ற இத்தலத்தலம் திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலமாக இருக்கின்றது. மாணிக்கவாசகர் இத்திருக்கோயிலைக் ‘கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் ‘திருவேகம்பமுடையார் திருவந்தாதியும்’ கந்த புராணமும் இத்தலத்தின் சிறப்பையும், மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப் பரணி, மத்தவிலாசப்பிரகசனம், தண்டியலங்காரம் முதலிய நூல்களிலும், பன்னிரு திருமூறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு பேசப்படுகின்றது.

Another view at the entrance

Another view at the entrance

ஏகாம்பரேஸ்வரர் கோவிலைப் பற்றிய இலக்கியங்கள்: பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது. இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சி ஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர்  அருளியதும், அதனுடைய இரண்டாம் காண்டம் என்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்[3].

The Vishneswarar temple on the LHS of the main temple with Dwarapalaks sculptures just placed outside

The Vishneswarar temple on the LHS of the main temple with Dwarapalaks sculptures just placed outside

சுமார் 1,500 BCE லிருந்து 600 BCE CE வரைக்கும் இருக்கின்ற கோவிலின் வரலாறு: பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது. அதனால் 5ம்-6ம் நூற்றாண்டுகளிலேயே, இக்கோவில் இருந்தது தெரிய வருகிறது. சங்க-இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற “காமக்கோட்டம்” இதுதான் என்று கொண்டால், இதன் காலம் 300-100 BCE காலத்திற்கும் செல்கிறது. ஸ்தல விருக்ஷம் மாமரமாக உள்ளது. இப்பொழுதுள்ள பகுதி சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. பல்லவர்காலத்தில் கட்டப் பட்டு, பிறகு சோழர்கள், விஜயநகர மன்னர்கள் என்று கோவிலை பெரிதாக்கிக் கட்டியுள்ளனர். நான்காம் பிரகாரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம் பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது. 12ம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார், இக்கோவிலுக்கு பூஜாரியாக இருந்துள்ளார். பச்சையப்ப முதலியார், நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் முதலியோர்களும் இக்கோவில் புனர்நிர்மாணம் மற்ற கட்டிட பணிகளுக்கு அதிகமாகவே செய்துள்ளார்கள். இவ்வாறு இக்கோவிலின் வரலாறு சுமார் 1,500 BCE லிருந்து 600 BCE CE வரைக்கும் இருக்கின்றதில் வியப்பில்லை, ஏனெனில், இயற்கையில் ஏற்படுகின்ற உருவம்- லிங்கம், பிறகு அதற்கு கர்ப்பகிரகம், பிரகாரம், என வளர்ந்து வரும் கட்டிட அமைப்புகளில் தான் அவையுள்ளனவேயன்றி, கடவுள் தத்துவம், வழிபாடு சம்பிரதாயங்களில் மாற்றங்கள் பொதுவாகவே உள்ளன. காலம்-காலமாக பக்தர்களான அல்லது கோவிலுக்கு வரும் மற்றவர்களுக்கும் சரித்திரம், பூமியியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டுன் வகையில் தான், இவ்வாறு கோவில்களில் பல விசயங்களை சேர்த்து வளர்த்துள்ளார்கள்.

A view of volunteers gathered there to start the cleaning work

A view of volunteers gathered there to start the cleaning work

தல வரலாறு[4]: ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர். இவ்வாறு அம்பிகை இறைவனைக் கட்டி தழுவிக் கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் (71வது பதிகம் – 10வது பாடல்)அழகாக குறிப்பிடுகிறார்.

    எள்கலின்றி இமையவர் கோனை

    ஈச னைவழி பாடுசெய் வாள்போல்

    உள்ளத் துள்கி உகந்துமை நங்கை

    வழிபடச் சென்று நின்றவா கண்டு

    வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி

    வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட

    *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்

    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

View from the western side corner of the temple

View from the western side corner of the temple

பார்வதி-மண் லிங்கம் கதையும், உலகம்-உயிரினம் தோன்றி விஞ்ஞானமும்: இக்கதையில் உருவகமாக உலகம் உருவான விவரங்கள் கொடுக்கப் பட்டிருப்பதை கவனிக்கலாம். ஆதியில் இருட்டு, எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. ஒளியில் பிறகு வழி தோன்றியது. காற்று வீசியது, பிரளய காலத்தில் எல்லாமே நீரில் மூழ்கியது. அந்நிலயில் மண்–பூமி தோன்றியது நீரிலிருந்து தோன்றியது. மண்ணிற்கு உருவம் கொடுத்தபோது, படைப்பு, உயிர் தோற்றம் ஆரம்பித்தது. உலகம் கொஞ்சம்-கொஞ்சமாக உயிர்கள் வாழத் தகுந்ததாக மாறியது. பஞ்சபூதங்கள் கட்டுக்குள் வந்தன. இப்படி உலகம், உயிரினங்கள் தோன்றிய விவரங்களை பார்வதி-மண் லிங்கம் என்று கதையாக உருவகமாகக் கூறி உணர்த்தப் பட்டுள்ளது[5]. கட்டுக்கதையை நீக்கி வரலாற்றை அறிய வேண்டும் என்ற முறை தமிழகத்து ஆராய்ச்சியாளர்களிடம் உருவாகவில்லை. விதண்டாவாதம் செய்து கொண்டே காலத்தைட்ய்ஹ் தள்லிக் கொண்டிருக்கின்றனர்.

The Gopura entrance on the Western side, closed and locked

The Gopura entrance on the Western side, closed and locked

மாமரத்தின் மகிமை[6]: சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இந்த மரத்தின் நாலாபுறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது. இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலதுபுறம் படிகளேறிச் சென்றால் ஏலவார் குழலி என்றழைக்கப்படும் அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. இதனருகில் “மாவடிவைகும் செவ்வேள்” சந்நிதி உள்ளது. குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் உள்ளது. இருந்தாலும் கந்தபுராணத்தில் வரும் “மூவிரு முகங்கள் போற்றி” எனும் பாடலில் வரும் “காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி” என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார். இச்சந்தியில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.

The repair work going on the North-west corner of the temple

The repair work going on the North-west corner of the temple

கோவிலில் உள்ளமைப்பு விவரங்கள்[7]: உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது வாகன மண்டபம். இதற்குச் சரபேச மண்டபம் என்று பெயர். திருவிழாக் காலங்களில் சுவாமி இங்கெழுந்தருளி, உபாசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணிந்து திருவீதியுலாவுக்குப் புறப்படுவார். விசாலமான உள் இடம். இடப்பால் நந்தவனம். அடுத்து குளமாகத் தேங்கியுள்ள நிலையில் கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது ஆயிரக்கால் மண்டபம். சற்றுப் பழுதடைந்துள்ளது. இக்கோபுரம் பல்லவகோபுரம் எனப்படும். இக்கோபுர வாயிலில்தான், தல விநாயகராகிய ‘விகடசக்கர விநாயகர்’ உள்ளார். ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன. மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. அழகிய பெரிய குளம். நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன, உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில் இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில் உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையன்றுள்ளது. உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால் அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது, அதன் எதிர்த் தூணில் இறைவி, இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது, இடப்பால் திரும்பிப் பிரகார வலம் வருகிறோம்.

On the backside of the Ekambareswarar temple, there is a comples with mantaps, but they are in a dilapidated condition

On the backside of the Ekambareswarar temple, there is a comples with mantaps, but they are in a dilapidated condition

உள்பிரகார விவரங்கள்[8]: வலப்பால் ‘பிரளயகால சக்தி’யின் சந்நிதி உள்ளது, ‘ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்தூக காஞ்சியை மாறிலாது இருத்திடுகின்ற’ அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம். பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும் உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை, செல்லும்போதே வலப்பால் இருப்பது “சபாநாயகர்” மண்டபம். இது நாளடைவில் ‘நாயகர்’ மண்டபம் என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று வழங்குகிறது. இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது. சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும் இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத் தரிசிப்பதே தனியழகு, பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

The way the repair work is going on

The way the repair work is going on

நவீனச் கால சேர்ப்புகள்: பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது) . அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் “மருமலத்தனிமா” என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில் பிரகாரமுள்ளது. துவார கணபதியையும், ஆறுமுகரையும் வணங்கி, மேலேறிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசிக்கலாம். பீடத்தின் அடியில் பஞ்சாக்கினி தவம், இலிங்கோற்பவ வரலாறு. அம்பிகை தழுவும் கோலம் முதலிய சிற்பங்கள் உள்ளன.

Heap of broken pillars, sculpture found at the corner

Heap of broken pillars, sculpture found at the corner

கோவிலில் உள்ள கல்வெட்டுகள்: இக்கொவிலில் உள்ள முக்கியமான கல்வெட்டுகளின் விவரங்கள்:

  1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.
  2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.
  3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.
  4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.
  5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.
  6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.
  7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.
இடிந்த சந்நிதி-பிரகாரம் முதலியன

இடிந்த சந்நிதி-பிரகாரம் முதலியன

The pillared pragara on the bakside of the temple under renovation

The pillared pragara on the bakside of the temple under renovation

The pillared pragara in dilapidated condition

The pillared pragara in dilapidated condition

Another view of the above

Another view of the above

The broken parts of a mantap or Sannadhi at the centre of the pillared mantap

The broken parts of a mantap or Sannadhi at the centre of the pillared mantap

Basement of the above structure

Basement of the above structure

கோவில் நிர்வாகம் முதலியன: இந்தியாவிற்லு சுதந்திரம் கிடைக்கும் வரை கோவில்கள் எல்லாமே, வழிபடும் பக்தர்களாலேயே நிர்வகிக்கப் பட்டு வந்தது. அந்தந்த துறையில் வல்லுனர்களாக இருக்கும் குழுமங்கள் ஒன்றாக சேர்ந்து நிர்வகித்து வந்தன. அரசர்கள், வியாபாரிகள் மற்றவர்கள் கொடையாக, தானமாக பொருள், பொன் முதலியவற்றைக் கொடுத்து நிர்வாகம், திருப்பணி, மராமத்து போன்றவை நடந்து வந்தன. இக்கோவில் வீரசைவ குலத்தவர்களினால் ஒரு காலத்தில் நிர்வகிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 1991ம் ஆண்டிலேயே, இக்கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது, இவர்கள் எதிர்த்துள்ளார்கள்[9]. ஶ்ரீ ஏகாம்பரேஸ்வர கோவிலின் ஶ்ரீ நாகசாமி குருக்கள் கூறுவதாவது, “மொத்தம் 108 லிங்கங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன அவற்றில் ஒன்று சங்கரமடத்திற்கு அருகில் உள்ள மசூதியிலும், மற்றொன்று, கோனேரிக்குப்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலும் உள்ளது”, என்கிறார். இவ்விசயம் பெரியவருக்கு நன்றாக தெரியும் ஆனால், அவற்றை அங்கிருந்து நகற்ற அவர் விருப்பப் படவில்லை[10].

[1]http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[2] Mirko Corigliano • Carlo G. Lai • Arun Menon • Teraphan Ornthammarath, Seismic input at the archaeological site of Kancheepuram in Southern India, Nat Hazards, DOI 10.1007/s11069-012-0195-4;

The site of Kancheepuram is characterized by a seismicity controlled by weak-to-moderate earthquakes with sources at short distances from the site, the PGA expected for 475- and 2,475-year return period are, respectively..

[3]http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[4] http://www.shivatemples.com/tnaadut/tnt01.php

[5] பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில் நாத்திகர்கள் கடந்த 60 ஆண்டுகளாக புராணங்கள் கட்டுக்கதைகள் என்று கூறி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இதனால், அவற்றை யாரும் முறையாகப் படிப்பதும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய ஆராய்ச்சிமுறையே இல்லாமல் போய்விட்டது.

[6] http://www.shivatemples.com/tnaadut/tnt01.php

[7] http://www.kamakoti.org/tamil/tirumurai4.htm

[8] http://www.kamakoti.org/tamil/tirumurai4.htm

[9] Tension prevailed at Maravar Chavadi in South gate in this city as the Hindu Religious and Charitable Endowments (HR and CE) officials tried to takeover “Sri Kamakshi Ekambareswarar temple”, belonging to the Viswakarma Community on wednesday. According to officials, the temple was to be brought under the control of the Koodal Alagar temple devasthanam. Police said tension mounted as people belonging to the community squatted inside the temple and refused to allow the HR and CE Officials inside. The officials said they had ordered for the takeover of the temple in 1991 itself. However, the temple officials had obtained a stay against it. Now the High court had vacated the stay, and hence they were taking control of the temple, they added.

[10] P. V. L. Narasimha Rao Kanchipuram: Land of Legends, Saints and Temples, Readworthy Publications (P) Limited, New Delhi,2011,pp.29-30

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆகாயம், ஏகாம்பரம், ஏகாம்பரேஸ்வரர், கச்சி, கச்சியப்பர், சிவாச்சாரி, சேரர், சோழர், தண்ணீர், நாயக்கர், நீர், பஞ்சபூதம், பல்லவர், பாண்டியர், பார்வதி, பூதங்கள், பூமி, மண், மா, மாமரம், விஜயநகரம் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s