ஹரித்வவார், ரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகைகளுக்குச் சென்ற புனித தீர்த்த யாத்திரை (1)

ஹரித்வவார், ரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகைகளுக்குச் சென்ற புனித தீர்த்த யாத்திரை (1)

Before proceeding, there was a pooja conducted at the Valluvar Gurukulam

Before proceeding, there was a pooja conducted at the Valluvar Gurukulam

சென்னையிலிருந்து 14-08-2014 (வியாழக்கிழமை) அன்று வடவிந்திய தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டோம். சென்ட்ரல் ஸ்டேஷனில் எல்லோரும் வந்து சேர்ந்தவுடன், சாது யோக குமார் முதலில் பிரார்த்தனை செய்த பிறகுதான் வண்டியில் ஏறினோம்.

Sadhu Yoga Kumar and others doing Bajans at the Central

Sadhu Yoga Kumar and others doing Bajans at the Central

இந்த யாத்திரையில் ஹரித்வவார், ரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை அடக்கம். மொத்தம் எங்கள் குழுவில் 33 நபர்கள் இருந்தனர். ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே புதியவர்கள். அந்த ஒரு சிலர் உழவாரப் பணிக்கு வருபவர்கள் என்பதால் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள். உடனே எல்லோரிடமும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டேன். எங்கள் குழுவில் மிகவும் வயதானவர் 80 எட்டிய ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், சிறியவர் ஒரு கல்லூரி மாணவி. மற்றவர்கள் பல துறைகளில், வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்றிருந்தனர். எல்லோருக்குமே தீர்த்தயாத்திரைக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல், உந்துதல் இருந்ததினால் தான் அங்கு சேர்ந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. சாது யோக குமார் என்பவரின் தலைமையில் இந்த தீர்த்தயாத்திரை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முன்பு ஒரு இணைத்தளத்தில் குறிப்பிடப் பட்டபடி அவர் யோகா, சேவை போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்.

Inside the train

Inside the train

எண் பெயர் குறிப்பு
1 சாது யோக குமார் யோகா, சமூகசேவை
2 சுந்தர மூர்த்தி (சாது யோக குமாரின் தந்தை) ஓய்வு
3 “சக்தி” தெய்வசிகாமணி சக்தி வழிபாடு
4 (சாது யோக குமாரின் மனைவி) இல்லத்தரசி
5 காசி கன்செல்டென்ட்
6 ஆர். ரவிச்சந்திரன் இன்சூரன்ஸ் ஏஜென்ட்
7 செங்கமலம் சவிச்சந்திரன் (47) இல்லத்தரசி
8 சிவராமன் “தி ஹிந்து” – ஊய்வு
9 காந்திதாசன் தமிழ் பேராசியர்
10 கல்யாணராமன் (80, காந்திதாசனின் தந்தை) ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்
11 வி. ஜி. ரமணன் நீதிமன்ற அலுவலகர்
12 வி. பிரேம் கண்ணன் மென்பொருள் பொறியாளர்
13 கே. ஶ்ரீனிவாசன் எலக்ட்ரிகல் கான்ட்ராக்டர்
14 சுரேஷ் பிரியன் (26) பொறியாளர்
15 எம். உஷா இல்லத்தரசி
16 ஜே. உஷா ஜானகிராமன் இல்லத்தரசி
17
18 உழவாரப்பணி
19 எஸ். இந்திரா உழவாரப்பணி
20 செல்வசேகரன் அரசு அதிகாரி, தில்லி
21 பூம்பாவை செல்வசேகரன் இல்லத்தரசி
22 (பூம்பாவை தாயார்) இல்லத்தரசி
23
24 கே. வி. ராமகிருஷ்ண ராவ் அரசு அதிகாரி
25 கே. சண்முகம் அரசு அதிகாரி
26 வி. விஜயா இல்லத்தரசி
27 கலைவாணி இல்லத்தரசி
28 கலைச்செல்வி குடும்பத்தலைவி
29 நாகராஜன் தனியார் கம்பெனி
30 ஆர். ஆர். யோகேஸ் ராஜ் பொறியியல் மாணவர்
31 டி. ஜெயேந்திரன் பொறியியல் மாணவர்
32 டி. பிரியங்கா பொறியியல் மாணவர்
33 சந்துரு பொறியியல் மாணவர்
சாது யோகா குமார் பாடுகிறார்

சாது யோகா குமார் பாடுகிறார்

பிரயாண நிகழ்வுகள்: ரெயில் பிரயாணத்தில் பொழுதைப் போக்குவது என்பது பலமுறைகளில், பலவழிகளில் பின்பற்றப்படுகிறது. இந்த குழுமத்தைப் பொறுத்த வரையில் பெண்களில் பெரும்பாலோர் பக்தியில் திளைத்திருந்தனர், அதனால் சுவாமி படம் வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தனர்; சாது யோக குமாரும் பாடினார்; ஆண்கள் தங்களது ஆன்மீக, தெய்வ மற்றும் தத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்; இளைஞர்களோ வழக்கம் போல கலாட்டா செய்து கொண்டிருந்தனர்; ஆனால் சாது யோக குமார் அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தார், விசாரித்துக் கொண்டிருந்தார், அக்கரையாக கவனித்துக் கொண்டிருந்தார். எளிமையான, துடிப்பான, இயங்கிக் கொண்டே இருக்கும் அவரைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது. இருப்பினும் உடல்கள் வேறு, வளர்ந்த விதங்கள் வேறு; அவை பண்பட்ட விதங்கள் வேறு, அதற்கேற்றப்படித்தான் அவை இயங்கிக் கொண்டிருக்கும். மனோதத்துவரீதியில் “தனிப்பட்ட மனிதர்களின் / மனிதர்களுக்கான வித்தியாசங்கள்” இருக்கத்தான் செய்யும் என்பதுபோல, ஆன்மீகரீதியிலும் அவ்வாறே வேறுபாடுகள் இருக்கும் எனலாம்.

Nicolas Notovitich- myth maker-Myth developed

Nicolas Notovitich- myth maker-Myth developed

பிரயாணத்தில் அறிமுகங்கள், பரஸ்பர உரையாடல்கள்: 15-08-2014 (வெள்ளிக்கிழமை) அன்று பிரயாணம் ரெயிலில் இருந்தது. நேற்றைய தினம் போலவே பொழுது சென்றது. எல்லோருடனான அறிமுகங்கள்; சில பரஸ்பர உரையாடல்கள்; ஆன்மீக வாதங்கள்; ஒப்பீட்டு சர்ச்சைகள்; என நேரம் கழிந்தது. பொதுவாக எல்லோரும் இந்துக்கள் என்றாலும், நிறைய விசயங்களில் அடிப்படை விவரங்கள் தெரியாமல் இருப்பது விந்தையாக இருந்தது. இந்து மதம் என்பது “நடத்தப் படும் ஒருவித வாழ்க்கை முறை” என்று சொல்லிவிட்டதாலோ, என்னமோ, எது வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம், அவற்றை சொல்லலாம், சொன்னது மாறுபாடாக, முரண்பாடாக, தவறாக இருந்தால் கூட – அவர் சொன்னார் – இவர் சொன்னார் – என்று வாதிக்கலாம் – போன்ற முறை வலுப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது. முதலில் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதனை தெரிந்து கொள்ளாமல், மற்றவர் சொன்னது, முதலியவற்றை ஆதார் அமாக கொண்டு அதனையே உண்மை என்று உறுதியாகக் கொண்டு வாதிடுவதும் கஷ்டமாக இருந்தது. ஒன்று தவறு என்றால் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லை அவ்வாறாக உள்ளதா இல்லையா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும். ஆனால், இந்துக்களைப் பொறுத்த மட்டில் அத்தகைய பயிற்சி அளிக்கப் படுவதில்லை. “விண்ணப் படிவ இந்துக்கள்” என்றே இருந்து வருவதாலும், “எம்மதமும் சம்மதம்” போன்ற சமரச மனப்பாங்கு உள்ளதாலும், தம்மைத் தவராக விமர்சித்தாலும், அமைதியாக இருப்பதால், அத்தகைய மனோபாவம் உருவாகி உள்ளது. அவர்கள் மற்ற சக-இந்துக்களுடன் தீவிரமாக வாதிப்பது போல, இந்துமத விமர்சகர்கள் மற்றும்  விரோதிகள் கூட அவ்வாறு வாதிப்பதில்லை, மாறாக அவர்களுடன் நண்பர்களாகவே இருந்து, அனுசரித்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை!

Nicolas Notovitich- Myth refuted by Swami Vivekananda

Nicolas Notovitich- Myth refuted by Swami Vivekananda

பாபாஜியைப் பற்றிய வாதங்கள், விவாதங்கள்: பிற மதங்கள் என்று வரும் போது, அவர்களில் பெரும்பாலோர் மிகவும் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது; அவர்களுக்கு அம்மதங்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளே தெரியாமல் இருந்தது; இருப்பினும் தெரிந்தது போல அடித்து பேசிக் கொண்டிருந்தார்கள்; தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் வாதித்து / சாதித்துக் கொண்டிருந்தார்கள்; குறிப்பாக ஏசு இந்தியாவிற்கு வந்தார் போன்ற கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருந்தது[1] விசித்திரமாக இருந்தது. கிருத்துவர்களும், முகமதியர்களும் இந்துக்களை புனைந்த மாயைகளால் பெருமளவில் பாதித்திருந்தாலும், பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்துக்கள் இவ்விசயத்தில் அப்பாவிகளாக, ஏமாளிகளாக, சாதுக்களாக இருப்பதுதான் நிதர்சனமாக உள்ளது. பாபாஜி விசயத்தில் ஏசுவை இணத்து கட்டிவிட்ட கதைகள் உள்ளன[2] என்றும், அவைத்தான் இவர்களின் வாதங்களுக்கு காரணம் என்றும் பிறகு புரிந்தது. அதை எடுத்துக் காட்டினாலும், அவர்கள் ஒப்புக்கொள்வதாக்ல இல்லை. யோகானந்தரே சொல்லியிருக்கிறார் என்று அடித்து பேசுகிறார்கள். விவேகானந்தர் தவறு என்றதை படிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தெரிந்தும், தெரியாதது போல நடிக்கிஒறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  இதைப் பற்றிய விவரங்களை தனி கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

ஐயப்ப சமாஜம் - தங்கிய இடம்

ஐயப்ப சமாஜம் – தங்கிய இடம்

ரிஷிகேசத்தில் கங்கை தரிசனம், குளியல்: 16-08-2014 (சனிக்கிழமை) காலை ஹரித்வார் ஸ்டேஷனில் வந்து இறங்கினோம். நன்றாக மழை பெய்திருந்தது தெரிந்தது. ஹரித்வார் ஸ்டேஷன் அருகில் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது. அதனை சார்ந்து அருகில் தங்கும் இடமும் உள்ளது. இடது பக்கம் ஐயப்பன் கோவில், அதன் பின்பக்கம் சமையல் அறை மட்டும் சாப்பிடும் இடம்; வலது பக்கம் மூன்றடுக்கு கட்டிடம், அதில் தங்க அறைகள் உள்ளன. அதில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐயப்ப சமாஜம் கோவிலை ஒட்டியுள்ள  தங்குமிடம்

ஐயப்ப சமாஜம் கோவிலை ஒட்டியுள்ள தங்குமிடம்

அங்கு செல்லும் போது லேசாக மழைப் பெய்து கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. காலையில் சிறிது நேரம் இளைப்பாரி விட்டு, கங்கையில் குளிக்கச் சென்றோம். அதற்கு முன்னர் சாது யோக குமார் சில குறிப்புகளை யாத்திரிகர்களுக்குக் கொடுத்தார்.

யாத்திரிகர்களுக்கு குறிப்புகளைக் கொடுக்கும் சாது

யாத்திரிகர்களுக்கு குறிப்புகளைக் கொடுக்கும் சாது

கங்கைக்கரைக்கு செல்லும் போது, குறிப்பிட்ட தூரம் வரை பாட்டுப் பாடிக் கொண்டே சென்றனர்.

கங்கைக் கரைக்குப் பாடிக் கொண்டே ச்சென்ற பக்தர்கள்

கங்கைக் கரைக்குப் பாடிக் கொண்டே ச்சென்ற பக்தர்கள்

கங்கையில் நீர் வேகமாகப் போய் கொண்டிருந்தது. உத்தரக்காண்ட வடப்பகுதிகளில் அதிகமாக மழைப் பெய்து கொண்டிருந்ததால், நீரின் வேகம் ஆளைத் தள்ளும் அளவிற்கு இருந்தது.

வேகமாக ஓடிக் கொண்டிருந்த கங்கை

வேகமாக ஓடிக் கொண்டிருந்த கங்கை

நீரில் மண் கலந்திருந்ததால், மண்ணிறமாகக் காணப்பட்டது. இருப்பினும் காட்டுகளில் (படித்துறைகள்) இரும்பு பைப்புகளினால் பாதுகாப்பாக தடுப்பு அமைக்கப் பட்டிருந்ததால், எல்லோரும் குளிக்க முடிந்தது.

நீரின் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சக-யாத்திரிகர்

நீரின் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சக-யாத்திரிகர்

கரையில் சில பண்டாக்கள் / புரோகிதர்கள் கிரியைகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ரிஷிகேசத்தில் உள்ளூர் கோவில்கள் தரிசனம்: பிறகு உள்ளூர் கோவில்களுக்கு சென்றோம். இதற்கு ஆட்டோ ஏற்பாடு செய்யப் பட்டது. ஶ்ரீ கீதா மந்திர், ஶ்ரீ மஹா மிருத்தியஞ்ச மந்திர், பாவன் தாம் மந்திர் முதலிய இடங்களுக்குச் சென்றோம்.

கீதா மந்திர் - ஶ்ரீமத் பகவத் கீதைக்கு இங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது, ஆனால், நாத்திக தமிழகத்தில் கீதைக் கொளுத்தப் படுகிறது!

கீதா மந்திர் – ஶ்ரீமத் பகவத் கீதைக்கு இங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது, ஆனால், நாத்திக தமிழகத்தில் கீதைக் கொளுத்தப் படுகிறது!

இங்கெல்லாம் விக்கிரங்கள் / சிலைகள் சலவைக் கற்களால் செய்யப் பட்டுள்ளன. ஶ்ரீ கீதா மந்திர் என்பது ஶ்ரீமத் பகவத் கீதைக்கான கோவில். வடக்கில் பகவத் கீதை தாயாக, தேவதையாக மற்றும் கடவுளாகவே பாவிக்கப் பட்டு வருகிறது, அதனால், பகவத் கீதைக்கு கோவிலும் உள்ளது, வணங்கப் பட்டு வருகிறது[3].

ருத்ராக்ஷ மரம்

ருத்ராக்ஷ மரம்

ஶ்ரீ மஹா மிருத்தியஞ்ச மந்திர் வளாகத்தில் ருத்ராக்ஷ மரம் இருந்தது. அப்பொழுதுதான் பூவிட்டிருந்ததால் காய்களைப் பார்க்க முடியவில்லை. பாதரசத்தின் கலவையினால் செய்யப் பட்ட லிங்கமும் இருந்தது.

பாதரஸக் கலவையில் செய்யப் பட்டுள்ள லிங்கம்

பாதரஸக் கலவையில் செய்யப் பட்டுள்ள லிங்கம்

“பாவன் தாம் மந்திர்” (காஞ்ச் கா மந்திர்) என்பது கண்ணாடிகளால் அலங்கரிக்கப் பட்ட கோவில்.

பாவன் தாம் - கண்ணாடி வேலைப்பாடுள்ள அலங்காரக் கோவில்

பாவன் தாம் – கண்ணாடி வேலைப்பாடுள்ள அலங்காரக் கோவில்

அதில் பல கடவுளர்களது சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தன.

கண்ணாடிகள் இருப்பதால் ஒருவர் புகைப்படம் பிடிப்பதை அவரே பார்க்கலாம்

கண்ணாடிகள் இருப்பதால் ஒருவர் புகைப்படம் பிடிப்பதை அவரே பார்க்கலாம்

அங்கு உள்ளேயே கடைகள் இருந்ததால், பொருட்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். அருகில் ஶ்ரீ ராம் தர்பார் (ஷீஷ் மஹல் மந்திர்) என்ற வளாகத்தில் ராமாயணத்தில் வரும் காட்சிகளைச் சித்தரிக்கும் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தன.

பக்கத்தில் உள்ள ஶ்ரீராம் தர்பார்

பக்கத்தில் உள்ள ஶ்ரீராம் தர்பார்

“பாவன் தாம் மந்திர்” போல இங்கு கூட்டம் அதிகமாக இல்லை. பிறகு “பூஜ்ய மாதா லால் தேவி டிரஸ்ட்” சார்பில் அமைக்கப் பட்டிருந்த தேவி / காளி கோவிலுக்கு சென்றோம்.

காளி தேவி மந்திர்

காளி தேவி மந்திர்

இக்காலத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் கட்டப் பட்டுள்ள  கோவிலாகும். பெரிய கொலு போல சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. பிறகு படிகள் ஏறி குகைக்குள் நுழையும் மாதிரி அமைப்பு இருந்தது. அதில் குனிந்து, தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும்.

காளி தேவி மந்திருள் இருக்கும் பொம்மைகள்

காளி தேவி மந்திருள் இருக்கும் பொம்மைகள்

இதெல்லாம் ஏதோ குழந்தைகளுக்கான செய்யப் பட்ட இடம் போன்று தோன்றியது. ஆனால், அங்குள்ள பக்தர்கள் மிக்க சிரத்தையுடன் “ஜெய் மாதா தி” என்று கோஷமிட்டு வணங்கிச் சென்றனர். முதலில் மேலே ஏறி, குகைக்குள் சென்று பிறகு கீழே இறங்கி வர வேண்டும். கீழே ஒரு பெரிய ஹாலில், தேவியின் உருவங்கள் வைக்கப் பட்டிருந்தன. வெளியே வரும் போது, பிரசாதமும் கொடுக்கப் பட்டது.

சாது விபூதி கொடுக்கிறார்

சாது விபூதி கொடுக்கிறார்

ஹரித்வார் கங்கை தரிசனம், குளியல், ஆரத்தி: ஹரித்வார் கங்கைக் கரை அருகில் நிறைய கடைகள் இருந்தன. ருத்ராக்ஷம், ஸ்படிக மாலைகள் முதலியவற்றை வாங்கிக் கொண்டனர். அங்கு பிளாட்பாரத்தில், ஒரு நாக சாது உட்கார்ந்து கொண்டிருந்தார். உடனே சிலர் அவரிடத்தில் சென்று வணங்கினர். அவரும் ஏதோ விபூதியை நெற்றியில் பூசினார்.

கங்கை ஆரத்தியைப் பார்க்கக் கூடியிருக்கும் பக்தர்கள் கூட்டம்

கங்கை ஆரத்தியைப் பார்க்கக் கூடியிருக்கும் பக்தர்கள் கூட்டம்

மாலையில் கங்கைக் கரையில் “கங்கா ஆரத்தி”யின் போது, பிரம்மாண்டமான கூட்டம் இருந்தது. கங்கை நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருப்பதைப் போன்று, மக்கள் வெள்ளமும் கரைகளில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

மக்கள் வெள்ளம்

மக்கள் வெள்ளம்

போலீஸார் கெடுபிடி செய்து கொண்டிருந்தனர். பாலம் மற்றும் அதன் படிகட்டுகளில் யாரும் இருக்கக் கூடாது என்று விரட்டியடித்தனர். எல்லாமே “பாதுகாப்பு” என்ற பெயரில் தான்! ஆனால், அவர்கள் அதற்கு பொறுப்பில்லை, காலம் செய்த கோலம் எனலாம்.

இந்த தடுப்பிற்குப் பின்னர் தான் மக்கள் உட்காரவேண்டும்

இந்த தடுப்பிற்குப் பின்னர் தான் மக்கள் உட்காரவேண்டும்

அதாவது, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

ஆர்வத்துடன் புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்

ஆர்வத்துடன் புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்

இது மக்கள் தடுப்புகளுக்குப் பின்னர் செல்லுமாறு சொல்லப்பட்டதற்கு முன்பு எடுத்த புகைப்படம்.

[1] In his book The Second Coming of Christ, Yogananda states that Jesus Christ went to India and conferred with Mahavatar Babaji.

Yogananda, Paramahansa (2004). The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You,  p. Los Angeles, CA: Self-Realization Fellowship.

[2] Yukteswar Giri, The Holy Science, Yogoda Satsanga Society, 1949.

[3] தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஶ்ரீமத் பகவத் கீதை, கீ. வீரமணி போன்றோரால் பகுத்தறிவு, பெரியாரிஸம், செக்யூலரிஸம் போர்வைகளில் அடிக்கடி எரிக்கப்படும், பெரியார் திடலில் விமர்சிக்கப் படும்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஆரத்தி, ஆஸ்ரமம், இமயமலை, கங்கை, பாபாஜி குகை, பிரயாணம், மடம், யாத்திரை, யோகா, யோகானந்த பரமஹம்ஸ, ரஜினிகாந்த், ரிஷிகேஷ், ரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை, ஹரித்வவார் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஹரித்வவார், ரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகைகளுக்குச் சென்ற புனித தீர்த்த யாத்திரை (1)

  1. Pingback: திரிவேணி சங்கம், சங்கம், பிரயாகை (அலஹாபாத்): தீர்த்த யாத்திரை | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s