அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில் (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில்  (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

மோசூர் ரெயில்நிலைத்துக்கு அருகில் உள்ள கோவில்

மோசூர் ரெயில்நிலைத்துக்கு அருகில் உள்ள கோவில்

மோசூர் மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளத்தை ஒட்டிய படியே அமைந்துள்ளது.

மோசூர் ரெயில்நிலைத்துக்கு அருகில் உள்ள கோவில் மற்றும் குளம்

மோசூர் ரெயில்நிலைத்துக்கு அருகில் உள்ள கோவில் மற்றும் குளம்

மோசூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காது, ஆகையால், அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார வண்டியில் மோசூரில் வந்திறங்கலாம்.

மோசூர் ரெயில்வே ஷ்டேசன்

மோசூர் ரெயில்வே ஷ்டேசன்

இங்கிருந்து கோவில் நடந்து சென்றடையும் தொலைவில் தான் உள்ளது. ஷேர் ஆட்டோவும் இருக்கிறது.

கோவில் சுவர்

கோவில் குளம்

ரெயிலிலிருந்து காணப்படும் குளம்.

ரெயிலிலிருந்து கோவில் காணப்படும் காட்சி.

ரெயிலிலிருந்து கோவில் காணப்படும் காட்சி.

கோவில் காணப்படும் காட்சி.

ஒரு ஹயக்ரீவர் கோவில் தெருவின் நடுவில் உள்ளது.

ஒரு ஹயக்ரீவர் கோவில் தெருவின் நடுவில் உள்ளது.

போகும் வழியில் ஒரு ஹயக்ரீவர் கோவில் தெருவின் நடுவில் உள்ளது.  கோவிலுக்குச் செல்லும் வீதியில் இன்னும் பல பழைய வீடுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஒரு வீடு காட்டப் படுகிறது.

இரண்டடுக்கு வீடு, பெரிய சுவர், படிக்கட்டு

இரண்டடுக்கு வீடு, பெரிய சுவர், படிக்கட்டு

இடது பக்கத்தில் ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

இது சுத்தமாக உள்ளது.

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

வெளிப்புறம் சுத்தமாக உள்ளது.

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

ஶ்ரீ ஞானாம்பிகா சமேத ஶ்ரீ காளஸ்தீஸ்வரர் கோவில்

உள்புறமும் சுத்தமாக உள்ளது. புதியதாகக் கட்டப் பட்டுள்ள ஊராட்சி அலுவலகம் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

ஊராட்சி அலுவலகம்

ஊராட்சி அலுவலகம்

அதற்கு அப்பால் கால்நடை கிளை நிலையம் உள்ளது.

கால்நடை கிளை நிலையம்

கால்நடை கிளை நிலையம்

பக்கத்தில் குளக்கரை மேடு உள்ளது, குளமும் உள்ளது.

குளம்

குளம்

இதைத் தாண்டி சென்றால், அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

கோவில் முன்பகுதி

கோவில் முன்பகுதி

கோபுரம் இல்லாத கோவிலின் முற்பகுதி.

முன்பக்கத்தில் பணி ஆரம்பித்து விட்டது

முன்பக்கத்தில் பணி ஆரம்பித்து விட்டது

முன்பக்கத்தில் பணி ஆரம்பித்து விட்டது. வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிலின் இடது பக்கம்

கோவிலின் இடது பக்கம்

கோவிலின் இடதுபக்கம் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.

பக்கத்தில் வெள்ளையடிக்க வேண்டியுள்ளது

பக்கத்தில் வெள்ளையடிக்க வேண்டியுள்ளது

உழவாரப்பணியாளர்கள் பார்வையிடுகின்றனர். 1999ல் மோசூர் திரு. எம்.

பக்கத்தில் வெள்ளையடிக்க வேண்டியுள்ளது

பக்கத்தில் வெள்ளையடிக்க வேண்டியுள்ளது

ஆரம்பிக்கின்றனர்.

குளக்கரைப் பக்கத்திலிருந்து கோவில் தோற்றம்

குளக்கரைப் பக்கத்திலிருந்து கோவில் தோற்றம்

கோவில் உள்ளே பணி செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

மூலையில் பெண்கள்  பணியைத் துவக்கி விட்டனர்.

மூலையில் பெண்கள் பணியைத் துவக்கி விட்டனர்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் உழவாரப்பணி செய்யும் காட்சி.

கோவிலுக்கு பின்புறம் முட்புதர்கள்  மண்டி கிடக்கின்றன

கோவிலுக்கு பின்புறம் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன

கோவிலுக்கு பின்புறம் முட்புதர்கள்  மண்டி கிடக்கின்றன. செல்வதற்கே பாதையில்லை.

தொலைவிலிருந்து ஒரு காட்சி

தொலைவிலிருந்து ஒரு காட்சி

தண்டவாளங்களினின்று காணும் காட்சி.

தொலைவிலிருந்து ஒரு காட்சி

தொலைவிலிருந்து ஒரு காட்சி

தொலைவிலிருந்து ஒரு காட்சி.

இன்னுமொரு காட்சி

இன்னுமொரு காட்சி

தண்டவாளங்களினின்று இறங்கி, மெதுவாக பக்கவாட்டில் நடந்து சென்றால் காணப்படும் தோற்றம்.

கோவில் மறைந்து விட்டது

கோவில் மறைந்து விட்டது

கோவில் மறைந்து விட்டது. சுவர்களைக் கூடப் பார்க்க முடியாமல், புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

கோவில் மறைந்து விட்டது

கோவில் மறைந்து விட்டது

சுவர் தெரிய ஆரம்பிக்கிறது.

சுவர் தெரிய ஆரம்பிக்கிறது.

நெருங்கமுடியாத முட்புதர்களை சுற்றிவந்தால், தெரியும் தோற்றம்.

கோவிலின் வலதுபக்கமூலை

கோவிலின் வலதுபக்கமூலை

கோவிலின் வலதுபக்கமூலையின் தோற்றம்.

வலது பக்கத்தில் இருக்கும் தோற்றம்

வலது பக்கத்தில் இருக்கும் அம்மன் தோற்றம்

வலது பக்கத்தில் இருக்கும் அம்மன் தோற்றம்.

அம்மன் கோவில்

அம்மன் கோவில்

அம்மன் கோவில் தோற்றம்.

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை

மயான கொள்ளை நடக்கும் இடம் சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ளது.

கோவிலின் வலதுபக்க தோற்ற

கோவிலின் வலதுபக்க தோற்றம்

கோவிலின் வலது பக்க தோற்றம். கோவில் சுவர் சிறிது காணப்படுகிறது! துரைசாமி முதலியாரின் மகன் எம். டி. கோவிந்தராஜ முதலியார் மற்றும் அவரது மகன் ஜி. நடராஜன் முதலியோர்களால் ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர் மற்றும் மேல்புற கோபுர அமைப்பு கட்டப்பட்டன. சிவன் கோவிலைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் முதலியவை முதலியார்களுக்கு சொந்தமாக இருப்பதை காணமுடிகிறது. அவர்கள் கோவிலுக்கு ஆவணவற்றை செய்து வருகிறார்கள். சைவத்தை வளர்த்த முதலியார்கள், திராவிட சித்தாந்தத்தினால், மாறிவிட்டனர் போலும். கோவிலின் வலது பக்கத்தில் வெளியில், சிறியதாக ஒரு அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு இடது பக்கம் – குளம் உள்ள பகுதி நடந்து செல்லும் முறையில் உள்ளது. ஆனால், கோவிலுக்கு பின்புறம், செடி-கொடிகள், முள்மரங்கள் என்று மண்டி கிடக்கின்றன. தண்டவாளங்களை ஒட்டியுள்ள இப்பகுதி மதிற்சுவர்களையே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளன.

எங்கள் வண்டி சூளைமேட்டிலிருந்து புறப்பட்டு, வழிதவறி சுற்றிக் கொண்டு வந்ததால், சிறிது தாமதமாக வந்து சேர சேர்ந்தது. அதற்குள் மற்றப் பகுதி உழவாரப்பணியாளர்கள் வந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். நுழைவாயிலில் கோபுரம் இல்லை. ஏதோ சிறிய மண்டபம் போன்ற அமைப்புள்ளது. உள்ளேயிருந்து பார்க்கும்போதும், கோபுரம் கட்டப்படவில்லை என்பது தெரிகிறது. இடது பக்கம் உள்ளே நுழையும் போது, ஶ்ரீ வரசித்தி வினாயகர் சன்னிதி உள்ளது. உள்ளே அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் தாயார் சன்னதி நேராக சிறியதாக உள்ளது. பக்கத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர், அருல்மிகு ராமலிங்க சுவாமி, அருல்மிகு அகஸ்தீஸ்வரர் சன்னிதிகள் இருக்கின்றன. இவை இடது பக்கம் உள்ளன. கோவிலின் இடது பக்கத்தில் சில தூண்பகுதிகள் முழுவதும் பூர்த்தியடையாத நிலையில் கிடக்கின்றன. கிழக்குப் பக்கம் நந்தி, கொடிக்கம்பம் உள்ளன.  15-06-2011 அன்று ஶ்ரீ தட்சிணாமூர்த்தி உழவாரப்பணிக் குழுனினரால் பணி நடந்ததாக, இடது பக்க சுவற்றில் எழுதப் பட்டிருப்பதிலிருந்து அறியலாம்.

 

மோசூர்கந்தசாமிஎன்றதமிழ்பேராசியரும், அண்ணாதுரையும்: முன்னரே குறிப்பிட்டபடி, மோசூரில் பல செல்வந்தர்கள், படித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது அங்குள்ள இரண்டுமாடி பழைய வீடுகளே எடுத்துக் காட்டுகின்றன. மோசூர் கந்தசாமி என்ற தமிழாசிரியர் / புலவர் புகழ்பெற்றவர் என்று தெரிகிறது. 1924இல் புதுக்கோட்டை தி.நா. முத்தையா செட்டியார் என்பவர் 1924இல் வள்ளலாரின் மாணவர்களில் ஒருவரான ச.மு. கந்தசாமிப் பிள்ளையைக் கொண்டு ஆறு திருமுறைகளும் அடங்கிய ஓர் இலவசப் பதிப்பை வெளியிட்டார். வள்ளலாரோடு பழகிய அன்பர்கள் பலரை நேரில் சந்தித்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இப்பதிப்பில் சேர்த்தார் ச.மு.க. (இதுவே இன்றளவும் உண்மையான வரலாறாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது). சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியார் இப்பதிப்புக்கு ஒரு முன்னுரை வரைந்துள்ளார்[1]. இவரிடத்தில் அண்ணாதுரை பாடம் கற்றார். அண்ணாதுரைக்கு பொடி, வெற்றிலைப் பாக்கு புகையிலை முதலியவற்றை உபயோகிக்கும் பழக்கம் இருந்தது.. வெற்றிலைப் பாக்கு மீது அவர் கொண்டிருந்த மோகம், கல்லூரி வகுப்பறையில்இருக்கும்போது கூட அவரை விடவில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது கூட வெற்றிலைப் புகையிலையை உபயோகிக்க ஆரம்பித்தார். வெற்றிலைப் போடுவதை ஆசிரியர் பார்த்துபிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வீதிப் பக்கமாக இருக்கும் சன்னல் ஒரமாக உள்ள பெஞ்சில் அண்ணா உட்கார்ந்துகொள்வார்.  எப்படி எப்படியோ முயன்றும் நீண்ட நாட்களுக்கு பேராசிரியர்களை அண்ணாவால் ஏமாற்ற முடியவில்லை. ஒரு தடவை மோசூர் கந்தசாமி என்ற தமிழ்ப் பேராசிரியர், அண்ணா வெற்றிலைப் பாக்கு புகையிலையுடன் வகுப்பில் இருப்பதைக் கண்டு கடிந்து கொண்டாராம்[2].

அடாஎன்றுஅழைத்த மோசூர் கந்தச்சமி புலவர்!: பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்த காலத்தில் மோசூர் கந்தசாமி  புலவர் என்பவரும் மணி திருநாவுக்கரசு என்பவரும் தமிழாசிரியர்கள் நிமிர்ந்த நடையோடு நேரிய பர்வையோடு நடந்து கொள்வார்கள். அந்த துணிவு மிக்க ஆசிரியர்களிடம் பாடம் கேட்ட காரணத்தால், மாணவர்களும் அவ்வாறே  இருந்தார்கள். மோசூர் கந்த சாமிப் புலவர் முதல்முதலாக வகுப்புக்கு
வந்தததும் அண்ணா போன்ற மாணவர்களைப் பார்த்து, உங்களை நான்
கூப்பிடும்போது அவன் இவன் என்றோ, அது இது என்றோ கூறமாட்டேன்.
அவன் இவன் என்று கூறுவது அவ்வளவு சரியாக எனக்குப் படவில்லை;
அது, இது என்று கூறுவதோ அஃறினையைக் குறிக்கும், அடா! என்று அழைப்பதுதான்
பொருத்தமாக இருக்கும், எனென்றால், அதுதான் அன்புச் சொல், அன்பின் சின்னம்தான்
அது என்று கூறினாராம். இப்படி மோசூர் தமிழாசியர்களுக்கும் பெயர் பெற்றதாக இருந்து வந்துள்ளது. ஆனால், இக்காலத்தவர்கள் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் நாடகப் பயிற்றுநராகவே விளங்கி மறைந்த ‘தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை’ என்று போற்றப் பெறும் மோசூர் கந்தசாமி முதலியார் சந்திரமோகனா, பக்த துளசிதாஸ், மாயாமச்சேந்திரா, சதிலீலாசாவதி போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் மகனே திரைப்பட நடிகர் எம்.கேர்.ராதா (1910-1985)[3]. இவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது[4].

சைவத்திற்காக பாடுபடும் சமூகமாக முதலியார்கள் இருந்து வந்துள்ளர்கள். ஆனால், திராவிட சித்தாந்தம் முதலியார்களை நாத்திகர்களாக மாற்றியது. நாத்திகர்கள் ஆன அவர்கள் பிராமணர்களையும் எதிர்க்க ஆரம்பித்தார்கள். இங்கு புலவர் கந்தசாமி முதலியார் தமிழ்பற்றுகொண்டவராகவும், ஆத்திகராகவும் இருந்திருக்கிறார். அண்ணாவுக்கு ஆசிரியர், எம்ஜிஆர் நடித்த முதல் படத்தின் வசனகர்த்தா என்ற நிலையுடன், எம்.ஆர். ராதாவின் தந்தையாகவும் இருக்கிறார்[5]. அதாவது, இரண்டு முதலமைச்சர்களுடன் சம்மந்தப் பட்டிருக்கிறார்.

 

அரக்கோணம் பகுதியில் திருடு போகும் கோயில் சூலங்கள்

அரக்கோணம் பகுதியில் திருடு போகும் கோயில் சூலங்கள்

 

அங்காளபரமேஸ்வரிகோவிலில் நடக்கும் மயானகொள்ளை விழா[6]: அரக்கோணம், பழனிப்பேட்டையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா நடக்கும்போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறர்கல். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வசந்த உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடக்கின்றன. அரக்கோணம், காஞ்சிபுரம், வேலூர், மோசூர், தக்கோலம், புளியமங்கலம், கும்பினிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து அம்பேத்கர் நகர் பகுதி வரையிலும் பல இடங்களில் வியாபாரிகள், கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர். சில இடங்களில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மோசூர் சாலையில் நடக்கும் மயானகொள்ளை விழாவில் பலர் பல்வேறு வேடங்களை தாங்கி வருகிறார்கள். சிலர் பாம்புகளை கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு ஊர்வலத்தில் வந்த காட்சி சிலிர்க்க வைக்கும். அம்மன் ஊர்வலத்தின் போது நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் ஊஞ்சல் காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியவாறு நாக்கில் அலகு குத்தியபடி வந்து அம்மனை வழிபடுகின்றனர். உற்சவம் மற்றும் பூஜையின் போது பல பெண்களுக்கு அருள் வந்து சாமி ஆடுவது வழக்கம். அவர்களிடம் பலர் தங்களது எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்றுச்செல்வர். சிவன் கோவிலின் வலது பக்கத்தில் உள்ள அம்மன் கோவில் அதற்காக உள்ளது என்று தெரிகிறது.

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீஸ்வரர் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, கடப்பாரை, காலம், குளம், கொடி கம்பம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, திருக்குளம், திருக்கோவில் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s