ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவிலில் (திருக்கச்சூர், செங்கல்பட்டு) 25-11-2013 அன்று உழவாரப்பணி நடந்தது!

ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவிலில் (திருக்கச்சூர், செங்கல்பட்டு) 25-11-2013 அன்று உழவாரப்பணி நடந்தது!

நுழைவு வாயில் இடது பக்கம்

நுழைவு வாயில் இடது பக்கம்

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பாக 142வது உழவாரப்பணி ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்தது. வழக்கம்போல, ஏராளமான உழவாரப்பணியாள பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிலுக்கு உட்புறம், வெளிப்புறம் மற்றும் கிரிவலப் பாதைகளில் உழவாரப்பணியை செய்தனர். காலை-மாலை இருமுறை சுமார் முறையே ஒரு மணி வீதம் விடாமல் மழை பெய்தாலும் உழவாரப்பணி நடந்தேறியது.

நுழைவு வாயில் இடது பக்கம்

நுழைவு வாயில் இடது பக்கம்

கோவில் இருக்கும் இடம், செல்ல வேண்டிய முறை / வாகன வசதி: ஔஸதீஸ்வரர் எனப்படுகின்ற மருந்தீஸ்வரர் கோவில் ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தில், சிங்கப்பெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் உள்ளது[1]. சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே ஸ்டேஷன் கேட்டிலிருந்து சுமார் ஒரு கி,மீ சென்றதும், இடது பக்கத்தில் உள்ள குறுகிய சாலையில் உள்ளே இரண்டு கி.மீ செல்லவேண்டும். அங்குள்ள ஒரு சிறிய மலையடிவாரத்தில் இக்கோவில் உள்ளது[2]. இக்கோவிலுக்குச் செல்வதற்கு வாகனவசதி எதுவும் கிடையாது. ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து நடந்து செல்லவேண்டும் அல்லது ஒரகடம் செல்லும் பேருந்துகளில் ஏறி  சிங்கப்பெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில்  குறிப்பிட்ட இடத்தில் இறன்கி உள்ளே நடந்து செல்ல வேண்டும். இரண்டு-மூன்று-நான்கு சக்கர வண்டிகளில் வந்தால் கோவிலின் முன்பு வரை தாராளாமகச் சென்று இறங்கி, கோவிலுக்குப் போகலாம்.

ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவில், திருக்கச்சூர், செங்கல்பட்டு, வானின்று காணும் தோற்றம் – நன்றி கூகுள்

ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவில், திருக்கச்சூர், செங்கல்பட்டு, வானின்று காணும் தோற்றம் – நன்றி கூகுள்

கோவிலின் நுழைவுவாயில் தெற்கு பார்த்துள்ளது. அதாவது “மொட்டை கோபுரம்” போல அறைகுறையாகக் கட்டப்பட்டுள்ள கோபுரத்தையும், அதற்கு முன்னால் இருக்கும் ஒரு நாற்கால் மண்டபத்தையும் வைத்துப் பார்த்தால் அவ்வாறுள்ளது. ஆனால், மேற்குப் பக்கத்தில் தான் கோவிலின் பிரதான வாயில் உள்ளது. இப்பொழுது இரும்பினால் பெரிய கேட் போட்டிருக்கிறார்கள். மலையடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல படிகட்டுகள் உள்ளன. அப்படிகளின் மீதேறி கோவிலுக்குள் சென்றால், பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி முதலியன உள்ளன. முதலில் இருந்த கொடிக்கம்பம் சேதமடைந்து விட்டதால், வேறு கொடிக்கம்பம் வைத்திருக்கிறார்கள். பழையது, சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரில் உள்ள பாதையைத்தான் இப்பொழுது கிரிவலப்பாதை என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் அதுதான் முதலில் கோவிலுக்கு வரும் வழியாக இருந்தது எனலாம். உள்ளூர் மக்கள் இதனை “மலைக்கோவில்” என்றழைக்கிறார்கள்.

பழையது, சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது.

பழையது, சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது.

நாயனார் பாடல் பெற்ற ஸ்தலம்: சுந்தரமூர்த்தி நாயனார் வழிபட்ட ஸ்தலம். ஶ்ரீ கச்சபேஸ்வரரைத் துதித்துப் பாடிய பாடல்களில், ஶ்ரீ ஔஸதீஸ்வரரை இரண்டு பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்[3]. திருக்கச்சூர் ஆலக்கோவில் பதிகங்களை இங்கே படிக்கலாம்[4]. கச்சூர் ஆலக்கோவில் அம்மானே என்று பதிகங்கள் முடிகின்றன.

ð  அச்சமில்லா கச்சூர் வடபால் ஆலக்கோவில் அம்மானே (2)

ð  குளிர்பூங்கச்சூர் வடபாலை ஆலக்கோயில் (3)

ð  கழனிப் பழனைக் கச்சூர் ஆலக்கோயில் (4)

ð  கழனிப் பழனைக் கச்சூர் ஆலக்கோயில் (5)

ð  வயல்சூழ் கச்சூர் ஆலக்கோயில் (10)

கச்சூரில் அச்சமில்லை – இங்கு சிவன் வீற்றிருக்கும் ஸ்தலமாதனால், மக்கள் எதர்ௐஉம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றாகிறது. அழகிய பூஞ்சோலைகள் சூழ்ந்திருந்ததால், குளிர்ச்சியுடன் இருந்த கச்சுர் திருக்கோயில். வயல்கள் மற்றும் பாக்குமரங்களும் சூழ்ந்திருந்தன என்றுள்ளது. பொதுவாக இவ்வூர் செழிப்பாபிருந்தது என்று தெரிகிறது.

இந்நுழைவு வாயிலின் இடது பக்கம் அதாவது வடமேற்கில் ஒரு ஆறுமுகன் சிலை ஒரு தகரசீட்டின் கீழே வைக்கப்பட்டுள்ளது. முன்னர் திறந்தவெளியில் இருந்தது என்பதை மற்றவர்கள் இணைதளத்தில் வெளியிட்டுள்ளப் புகைப்படங்களினின்று தெரியப்படுகிறது. வடகிழக்கில் “ஔஸத தீர்த்தம்” என்கின்ற கிணறுள்ளது. இதற்குள் நீர்மட்டம் வரைச்சென்றுவர படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. தென்கிழக்கில் நவக்கிரகம் உள்ளது. இந்நுழைவு வாயிலின் வலது பக்கம் அதாவது தென்மேற்கில் ஒரு மேடையுள்ளது. அருகே சண்டிகேஸ்வரர் சிலையுள்ளது. எதிரில் சுவர் ஓரமாக சர்ப்ப-நாகதோஷச் சிலைகள் உள்ளன.

பிரபலமாகிவரும்கிரிவலம்: அருகிலுள்ள அந்த சிறிய மலை ஔஸதகிரி, “மருந்து மலை” என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது மக்கள் அதனைச் சுற்றி வருகிறார்கள். இதனால் “கிரிவலம்” இங்கும் பிரபலமாகி வருகின்றது. பௌர்ணமி தவிர, சோமவாரம் / திங்கட்கிழமை கிரிவலம் சென்றுவந்தால் “உடல்தேக ஆரோக்யத்தைப் பெறலாம்” என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. “ஐந்து சோமவாரம் கிரிவல நாட்கள்” என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.

குலோத்துங்கச்சோழன்காலத்தில்கட்டப்பட்டக்கோவில் (c.1000 CE): குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதால் சுமார் 1000 வருடங்களுக்கு முந்தைய கோவிலாகும்[5]. ஆனால், வழக்கப்படி, தொடர்ந்து பணிகள் நடந்திருப்பதால் அமைப்பு மாறுபட்டிருக்கிறது. அருகிலுள்ள அந்த சிறிய மலை ஔஸதகிரி, “மருந்து மலை” என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் லிங்கரூபத்தில் இருக்கும் சிவன் ஔஸதீஸ்வரர் அல்லது மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். அதேபோல இதுவும் அருகில் உள்ள மலை மற்றும் சுற்றிருந்த காடு, இவைக் கொண்ட மூலிகைகள் முதலியவற்றால், மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் போலும்[6]. அருகிலுள்ள குளத்திற்கும் “ஔஸத தீர்த்தம்” என்றே பெயரிடப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே இருக்கும் கிணறும்  “ஔஸத தீர்த்தம்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியர் இங்கு வந்து மூலிகைகளை வைத்து மருந்துகளைத் தயாரித்தார், அவற்றை வைத்து நோய்களைத் தீர்த்து வைத்தார் என்பது போன்ற கதைகளும் சொல்லப்படுகின்றன, என்று இக்காலத்தைய இணைதளங்களில் விவரங்களைக் கொடுக்கிறார்கள். குறிப்பாக அகஸ்தியர் சிவனிடமிருந்து நேரிடையாக அத்தகைய மருந்துகளை உருவாக்க வேண்டிய கலவைமுறைகளை அறிந்து கொண்டு தயாரித்தார் என்றும் கூறப்படுகிறது[7]. ஆனால், இவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் எவற்றையும் குறிப்பிடுவதில்லை. இங்குள்ள தாயாருக்கு “அந்தகார நிவாரிணி” என்ற பெயர்[8], அதாவது “முடிவே இல்லாத நிலையில் இருக்கின்ற கும்மிரட்டையும் போக்கி ஒளிதரும் தேவி” என்பதால், இதனை “இருள்நீக்கி தாயார்” என்று தமிழில் குறிப்பிடுகின்றனர். அதாவது, எல்லா கருப்பான, இருட்டான, மனிதனுடைய தீமைகளை, நோய்களைத் தீர்க்கும் சக்தியுடைய தேவி என்றும் பொருள் புரிந்து கொள்ளலாம். கடவுளை “ஆண்-பெண்” வடிவங்களில் பிரித்துப் பார்த்து, பக்தி பரவசத்துடன் வழிபடுவது இந்துக்களின் பிரபலமான வழிபாடு முறைகளில் ஒன்று.


[1] Oushadeeswarar temple, Thirukachur – 2 kms west of GST road on SP Kovil – Oragadam state highway – More than 1000 years old. This temple is built by Kulothunga Chozhan, the First. This temple is considered very sacred and is perched atop a small hill called Oushadagiri. Oushada is medicine in English, marundu in Tamil. Giri is called hill in English and malai in Tamil. So this temple is called Marundeeswarar also.

[2] There is no cart or Dwajasthambam or Gopuram in this temple which is an interesting part. This is a remote temple and you would need a bike or car to reach this temple, though this is 2-3 Kms from GST. Cross the railway track at SP Kovil towards Oragadam. Drive for 5 -7 mins you will see a board on the right hand side of the road. Take a right turn to reach Thirukkachur.

[6] The main deity here is Lord Shiva and He has the same power as Lord Marundeeswarar in Thiruvanmiyur.

[7] . It is believed that the great Sage, Agasthiyar, touted as the father of native medicine, got all the medicinal prescriptions from the great Lord directly and wrote everything. It is believed that if you worship the Lord here you will be relieved of all illness. The well water here is called “Oushada theertam” – See more at: http://www.educationalservice.net/2013/october/20131055_temples.php#sthash.t2GKdEdq.dpuf

[8] The Goddess here is called “Andakara Nivarani” which translates in English as “The destroyer of black evils”.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in கிரிவலப் பாதை, செங்கல்பட்டு, திருகச்சூர், மருந்தீஸ்வரர் கோவில் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to ஶ்ரீ இருள்நீக்கி தாயார் சமேத ஶ்ரீ மருந்தீஸ்வரர் கோவிலில் (திருக்கச்சூர், செங்கல்பட்டு) 25-11-2013 அன்று உழவாரப்பணி நடந்தது!

 1. sathivel சொல்கிறார்:

  நம் பண்பாட்டையும். கல்வி கலாச்சாரத்தையும் காப்பாற்ற இதைவிட மேலான வழி இருக்கமுடியாது. வாழ்க வளர்க தங்கள் உழவாரப்பணி. தங்கள் பணி கோயிலை மட்டும் சுத்திகரிக்கவில்லை அன்பர்களின் மனம், வாய், செயல் அழுக்குகளையும் போக்குகிறது.,

  • vedaprakash சொல்கிறார்:

   நன்றி அன்பரே.

   ஆண்டவன் இப்பொழுதிருக்கும் நிலையில் அனைவருக்கும் சாந்தம், ஆரோக்யம், நல்ல மனது முதலியவை தொடர்ந்திருக்க அறுள் பாலிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s