செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி

செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி

134வது உழவாரப்ப பணி செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தது: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் உழவாரப்பணி செய்து வருவது தெரிந்த விஷயமே. பற்பல குழுக்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை தோறும் அவ்வாறான பணியை சுமார் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் தொண்டாக செய்து வருகிறார்கள். செப்டம்பர் 2010லிருந்து ஜூலை 2011 வரை நான் உழவாரப்பணியில் கலந்து கொண்டு வந்தேன். பிறகு குறிப்பிட்ட காரணங்களினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, 24-03-2013 அன்று மறுபடியும் உழவாரப்பணியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனால், மறுபடியும், அப்பணியைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதன்படி, 24-03-2013 அன்று செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 134வது உழவாரப்ப பணி நடந்த விவரங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

உழவாரப்பணியைப் பற்றிய முந்தைய பதிவுகள்: செப்டம்பர் 2010லிருந்து ஜூலை 2011 வரை நடந்த உழவாரப்பணி விவரங்கள் கீழ்கண்ட தளங்களில் காணலாம்:

பொன்னூர் சிவன் கோவிலில் 104வது உழவாரப்பணி (26-09-2010)

https://sivatemple.wordpress.com/2010/10/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8/

வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)

https://sivatemple.wordpress.com/2010/10/30/32vadamadurai-temple-cleaning/

அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010)

https://sivatemple.wordpress.com/2010/11/30/aramvalartheswarar-kanikandeswarar-temple-kanchipuram/

நேத்ரபுரீஸ்வரர் (கிணார் கிராமம்) மற்றும் திருவாலீஸ்வரர் (கீழவலம்) திருக்கோயில்களில் 26-12-2010 அன்று நடந்த உழவாரப்பணி

https://sivatemple.wordpress.com/2010/12/27/kinar-kizahavalam-temples-maduranthakam/

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011)

https://sivatemple.wordpress.com/2011/01/24/tiruvaleswarar-temple-meyyur-uthiramerur/

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011) – II

https://sivatemple.wordpress.com/2011/01/25/248-temple-looks-new-after-work/

சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் (பழவேற்காடு) 06-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி

https://sivatemple.wordpress.com/2011/02/07/samaya-ishwarar-temple-pazhaverkadu-pulicat/

சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் (பழவேற்காடு) 06-02-2011 அன்று  நடந்த உழவாரப்பணி (2)

https://sivatemple.wordpress.com/2011/02/22/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/

திருவட்டீஸ்வரர் கோவில் (சென்னை) 27-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி

https://sivatemple.wordpress.com/2011/03/01/thiruvatteeswarar-temple-cleaning-work-done/

அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோவில் 27-03-2011 அன்று உழவாரப்பணி!

https://sivatemple.wordpress.com/2011/03/28/temple-cleaning-at-mutheswar-temple-kanchipuram/

24-04-2011 அன்று பள்ளியகரம் சிவன் கோவிலில் நடந்த உழவாரப் பணி

https://sivatemple.wordpress.com/2011/04/26/work-done-at-palliyagaram-madhuranthakam/

அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில்22-05-2011 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

https://sivatemple.wordpress.com/2011/05/27/540-uzhavarappani-at-vadathavur-temple/

26-06-2011 அன்று “எருமை வெட்டிப் பாளையம்” என்ற ஊரில் உழவாரப்பணி நடந்தது!

https://sivatemple.wordpress.com/2011/06/27/uzhavarappani-carried-on-at-erumaivettippalayam/

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது

https://sivatemple.wordpress.com/2011/09/23/temple-cleaning-work-at-agatteeswaram-temple/

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2)

https://sivatemple.wordpress.com/2011/09/25/agattesawaram-temple-uzhavarappani-panchesti/

திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது

https://sivatemple.wordpress.com/2011/10/05/sri-brahmapureswarar-temple-uzhavarappani/

Photo0912

செய்யூர் ஶ்ரீ வல்மீகிநாதர் கோவிலின் இருப்பிடம்: செய்யூர் மதுராந்தகத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது, ஆனால் கடற்கரையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில்தான் உள்ளது. கடற்கரைக்கும் இதற்கும் இடையில் ஒடியூர் ஏரியுள்ளது. ஆனால், மதுராந்தகத்திலிருந்து கி.மீ தூரத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டு, சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் செய்யூரில் உள்ளன. ராஜேந்திர சோழன் காலத்திலிருந்து, கடற்கரைக்கு அருகில் கோவில் கட்டும் போக்கு நோக்கத்தக்கது.  சோழர்கள் இவ்விடத்தை வேட்டையாடுவதற்காக உபயோகப்படுத்தி வந்தனர். அதாவது அக்காலத்தில் அடர்ந்த காடாக இருந்துள்ளது. “படைவீடு” போல “காடுவீடு” என்று பாதுகாப்பிற்காக இவ்விடத்தினை வைத்திருந்தனர் போலும்.

Photo0911

கோவிலின் முன்புறம்: இப்பொழுது கோவிலின் மூன்று பக்கங்களும் வயல் மற்றும் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளன. தெற்குபுறத்தில் மட்டும் சாலையுள்ளது. இப்பொழுது அது கான்கிரிட் ரோடாகவுள்ளது. கோவிலுக்கு இப்பொழுது தெற்கு நோக்கி ஒரே வாசல் தான் உள்ளது. முன்பக்கத்தில் ஆறு தூண்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளன. இவை மட்டும்தானா, அல்லது, மேலும் இருந்தனவா, அப்புறப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. முன்பு மண்ணில் புதைந்து கிடந்தது, இப்பொழுது கான்கிரிட் சாலையில் புதைந்துள்ளது. கோபுரத்திற்கான கட்டிடம் பெரிதாக இருப்பினும், கோபுரம் சிறியதாக, இக்காலத்தில் தான் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது.

Cheyyur temple cardinal directionsகோவிலின் உள்புறம்: கோவிலின் வடமேற்கு மூலை தவிர மற்ற மூலைகளில் தென்மேற்கில் சன்னிதி உள்ளது; தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் பொருட்கள் அறைகள் உள்ளன.  வடகிழக்கிலும் ஒரு அறையுள்ளது. இவைகளெல்லாம் பூட்டப்பட்டுள்ளன. நந்தி, பலிபீடம், கொடிக்கம்பம் முறையே கிழக்கில் மூலவருக்கு எதிராக உள்ளன. சண்டிகேஷ்வரர் சிலை தனியாக நந்திக்குப் பக்கத்தில் உள்ளது. இது பிறகு யாரோ வைத்ததைப் போல, தனியாக எந்த மண்டபமோ, கூரையோ இல்லாமல் உள்ளது.

Vanmika nathar koil - Seyyur - sketchஅழகிய சிற்பங்களைக் கொண்ட மண்டபம்: பிரதான வாயில் தெற்கு நோக்கி உள்ளது, சாலையும் அவ்வாறாகவே உள்ளது. நுழைந்ததும் சிற்பத்தூண்கள் அடங்கிய மண்டபம் லிங்கம் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்குப் பொதுவாக உள்ளது. அதில் நான்கு வரிசையில் மூன்று தூண்கள் வீதம் 12 தூண்கள் உள்ளன. அத்தூண்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. ஒருபகுதி சாதாரணமான, சிற்பங்கள் அடங்கிய தூண், அடுத்துள்ள பகுதி – மேலே கூரையைத்தாங்கும் பூதம், இடையில் குதிரைகளை பெண்கள் சவாரி செய்வது போல வடிக்கப்பட்டுள்ளன. மண்டப சுவரின் கிழக்குப் பக்கத்தில் கீழே ஒரு நீள்வாட்டில் செவ்வகமான திறப்பு உள்ளது. அதன் வழியாக நந்தியைப் பார்க்கலாம். இவ்வமைப்பே, சுவர் பிறகு கட்டப்பட்டது என்பதனைக் காட்டுகிறத. இங்கிருக்கும் திரு சந்திரசேகர குருக்கள் பூஜைகளை செய்து வருகிறார் (o4427 531200).

கோவிலின் குளம், அதன் தன்மை (தென்மேற்கு): கோவிலின் குளம் கோவிலிக்கு தெமேற்குத்திசையில் உள்ளது. கோவிலின் முன்னே இடது புறத்தில் பெரிய குளமும் இருக்கிறது. ஆனால், அது பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. இடதுபுறமாக கோவிலின் வெளிப்புறத்தில் செல்லமுடியாத அளவிற்கு, உடைந்த கண்ணடி பாட்டில்கள், துண்டுகள் கிடக்கின்றன. அதுதவிர குப்பை போடப்பட்டு எரிந்த நிலையில் காணப்படுகிறது. பக்கவாட்டில் குளத்தின் படிகள் உள்ளன, ஆனால், அவையும் குப்பை, கற்கள் முதலியன இருப்பதால், நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.  உண்மையில் ஏதோ கோபுர / மண்டபத்தின் தூண்கள் தாம், படிகட்டுகளாகப் போடப்பட்டுள்ளன.

கோவிலின் இடது புறம் (மேற்கு): கோவிலைச் சுற்றி உயரமான மதிற்சுவர் உள்ளது, ஆனால், மேற்குப்பக்கத்தில் செல்வது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. இடது பக்கத்தில் நிறைய கண்ணாடி பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. கஷ்டப்பட்டு, அவற்றைத் தாண்டி போனால், இடது புறத்தில் (தென்மேற்கு மூலையில் குளத்திற்கு மேலாக), ஒரு ஆள் சென்றுவர சிறிய சந்து தான் உள்ளது. வடமேற்கு மூலை வழியாகக் கஷ்டப்பட்டு நடந்து செல்லலாம். வழிநெடுக வெட்டிய மரங்களின் அடிபாகங்கள் கால்களை குத்திவிடும் நிலையில் கூர்மையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு, கோவிலின் பின்பக்கத்தில் நடுவரைச் செல்லலாம், பிறகு ஒரே முட்புதர் தான் உள்ளது. கோவிலின் இடது புறத்திலும், தென்கிழக்கு மூலைவரைத்தான் செல்லமுடியும். அதற்கு மேல் அடர்ந்த முட்புதர்தான் உள்ளது.

கோவிலின் வலது புறம் (கிழக்கு): வலது பக்கத்தில் சுமார் 40-50 அடிவரை முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், அவற்றின் நுழைந்து உள்ளே செல்லமுடியாத நிலையுள்ளது. அதையும் தாண்டி வயல் உள்ளதால், அதன் வழியாக வடகிழக்கு திசையில் செல்லலாம். ஆனால்,. கோவிலின் வடகிழக்கு மூலையை நெருங்க / அடைய முடியாது. ஏனெனில் அடர்ந்த முட்புதர்கள் கை-கால்களை பதம் பார்த்து விடும். இவ்விவரங்களை மேலே காட்டப்பட்டுள்ள கூகுள் படத்திலிருந்தே பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோவிலின் பின்பக்கம் அதாவது வடக்குதிசையிலும் செல்ல முடியாது.

கோவிலின் பின்புறம் (வடக்கு): பின்புறத்திலும் அதேபோல வேலிக்காத்தான் முட்செடிகள், அடர்ந்த முட்புதர்கள் முதலிய உள்ளன. போதாக்குறைக்கு, இப்பொழுது, வெட்டிய மரம்-செடிகொடிகளும் அங்கு போடப்பட்டுள்ளன. ஆக முன்பக்கம் தவிர மூன்று பக்கங்களிலும் அடர்ந்த முட்புதர்கள் தாம் இருக்கின்றன.

கிழக்கிலிருந்து, தெற்குப் புறமாக மாற்ற2ப்பட்ட நுழைவாயல்: இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 11ம்-12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது எனும் போது, அதற்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஏராளமாக இருந்திருக்கும். ஏதோ காரணங்களுக்காக, கிழக்கு வாசல் மூடப்பட்டு, தெற்குப்புறமாக நுழைவு வாசலை வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இப்பொழுது, கட்டப்பட்டுள்ள வாயில் கோபுரம் சிறியதாக, நவீனமுறையில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகையால் கிழக்கு கோபுரம் இல்லாமலிருப்பது, தூண்கள் குளத்தின் படிகட்டுகளாக உபயோகப்படுத்தப் பட்டிருப்பது, கடவுளர்களின் சிலைகள் பல இடங்களில் தனித்தனியாகக் கிடப்பது, மண்ணில் புதைந்திருப்பது, கோவிலுக்கு வெளியே நிற்கவைத்திருப்பது முதலியன பழைய முறைப்படி கட்டப்பட்ட கோவில் மாறியுள்ளது, மாற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இடிந்திருந்தால், இடிக்கப்பட்டிருந்தால்11ம்-12ம் நூற்றாண்டுகளில், அவ்வாறு ஏன் நிகழ்ந்தது என்பதனை ஆராய வேண்டியுள்ளது.

மண்டபத்தில் இருக்கும் தூண்கள், அவற்றில் இருக்கும் சிற்பங்கள்: மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆறு தூண்கள் உள்ளன. ஒருபகுதி சாதாரணமான, சிற்பங்கள் அடங்கிய தூண், அடுத்துள்ள பகுதி – மேலே கூரையைத்தாங்கும் பூதம், இடையில் குதிரைகளை பெண்கள் சவாரி செய்வது போல வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும், குறிப்பிட்ட நிகழ்சி, பொருள் பற்றியதாக உள்ளது. வான்மீகி நாதர் சன்னிதிக்கு வலப்புறத்தில் உள்ள தூணில் கீழ்பக்கத்தில் உள்ள சிற்பங்கள் காமரசத்தைக் கொண்டவையாக உள்ளன. உண்மையில் ஆண்-பெண் சல்லாபிக்கும் போன்ற சிற்பங்களாக உள்ளன. இன்னொரு தூணின் நான்கு பக்கங்களிலும், மனுநீதி சோழன் நிகழ்வை சித்தரிக்கிறது. ஒரு சிற்பத்தில், பசு மணியை அடிக்கிறது, அரசனும், அரசியும் காதுகளைப் பொத்திக் கொண்டது போல உள்ளது; இன்னொரு பக்கத்தில் அரசன் தேரை எடுத்து வருகிறான்; அடுத்த பக்கத்தில், தேர் சக்கரத்தின் கீழ் அவனது மகன் இருக்கிறான்.

Photo0757 Photo0759
Photo0760 Photo0761

கோயில் நுழைவு வாயில், முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள தூண்கள், கான்கிரீட் ரோடு காணலாம்.

வலது பக்கத்தில் உள்ள கொடிக்கம்பம், பலிபீடம் முதலியன.

வலது பக்கத்தில் உள்ள கொடிக்கம்பம், பலிபீடம், நந்தி முதலியன.

தென்கிழக்கு மூலை – உள்பக்கம் – வேலையில் ஈடுபட்டுள்ளவர்களைக் காணலாம்.

Photo0762 Photo0763
Photo0764 Photo0765

கோவில் முன்பக்கம் – சிற்பங்கள் கொண்ட மண்டபம் மற்றும் முன்னர் உள்ள கான்கிரீட் கூரை.

இடது பக்கம் – மேற்கு – மூலையில் உள்ள வினாயகர் கோயிலைக் காணலாம். பெண்கள் பணியை ஆரம்பித்துள்ளனர்.

பெண்கள் பணியைச் செய்கின்றனர்.

வடமேற்கு மூலையில் உள்ள வினாயகர் கோயில்.

Photo0766 Photo0767
Photo0769 Photo0768

வடமேற்கு மூலையில் உள்ள சிறுகோயில்.

பெண்கள், ஆண்கள் எல்லோரும் செய்யும் உழவாரப்பணி – மேற்கு புறத்தில்.

செடிகள் வளர்ந்துள்ள நிலை.

தேவையில்லாத செடிகள், புற்கள் முதலிவயை அகற்றப்படுதல்.

Photo0770 Photo0771
Photo0772 Photo0773

வடமேற்கு மூலையில் பணி நடக்கிறது.

வடக்கு – நடுபக்கம் – பணி ஆரம்பித்துள்ளது – செடிகளுக்குள் பணியாளர்கள் இருக்கிறார்கள்.

மேற்படி – வேலை ஆரம்பித்துள்ளனர்.

வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு அறை.

Photo0774 Photo0775
Photo0776 Photo0778

அம்மன் சன்னதி பின்புறம்.

அம்மன் சன்னதி பின்புறம் – பக்கவாட்டுத் தோற்றம்.

ஒரு சிற்பம் தனியாகக் கிடக்கிறது. இது இருந்த கோயில் மாறுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

அழகிய சிற்பத்தூண்கள் கொண்ட மண்டபத்தில் வேலை செய்கிறார்கள்.

Photo0779 Photo0780
Photo0781 Photo0783

அம்பாள் சன்னதி.

சிவன் சன்னிதி – பபார்த்திப வருடம், ஆனிமாதம், 7ம் தேதி, 20-06-1945 அன்று சோமவாரம் கும்பாபிஷேகம் செய்தது – வி.கே. இராமசாமி முதலியார் என்று மேலேயுள்ளது.

மண்டபத்திலிருந்து, நுழைவாயில் தோற்றம்.

ஒரு சிறுவன் கர்ப்பகிருகத்தின் சுவர்களை சுத்தப்படுத்துகிறான்.

Photo0784 Photo0785
Photo0786 Photo0787

மூலவரின் – கர்ப்பகிரகத்தின் நுழைவாயில்.

துவாரபாலகர்களின் சிற்பங்கள்.

அதையும் தாண்டே உள்ளே.

கர்ப்பகிருகத்தின் முன்பாக – உள்ளே லிங்கத்தைக் காணலாம்.

Photo0788 Photo0792
Photo0793 Photo0794

கர்ப்பகிருகத்தில் மூலவரின் தோற்றம்.

வெளிப்பிராகரத்தில், சுவற்றில் உள்ள சிற்பங்கள் – வினாயகர்.

லிங்கோத்பவர் – சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி.

பிராகரத்தில், ஒரு சிலை / விக்ரகத்தின் மீது சூரிய ஒளி விழுவது.

Photo0758 Photo0777
Photo0803 Photo0811

பெண்கள் விளக்கு முதலிய பூஜைக்குண்டான உலோகப் பொருட்களை சுத்தப்படுத்துகிறார்கள்.

பெண்கள் அம்மனின் துணிகளை சுத்தப்படுத்துகிறார்கள்.

பூஜைப் பாத்திரங்கள், சுத்தப்படுத்தினப்பிறகு.

பெண்கள் அம்மனின் துணிகளை சுத்தப்படுத்துகிறார்கள்.

Photo0804 Photo0805
Photo0806 Photo0807

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சுற்ரும் முறையை விளக்கம் படம் வைக்கப் பட்டுள்ளது.

சிறுவர்-சிறுமியர்களும் சளைக்காமல் தங்களது பங்கிற்கான சேவையை செய்கின்றனர்.

கோயிலுக்கு இடது பக்கத்தில் உள்ள பாசி படர்ந்த குளம், இது கோயிலை விட பெரிதாக இருக்கிறது.

கோயிலுக்கு முன்பாக, இடது பக்கத்தில், சில விக்கிரங்கள் / சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று – பிள்ளையார்.

Photo0808 Photo0809
Photo0810 Photo0812

விஷ்ணு சிலை தனியாக இருக்கிறது.

பிள்ளையார், நாகம், விஷ்ணு மூன்று சிலைகளையும் பார்க்கலாம். ஆட்சி மாறிவிட்டது என்பதைக் காட்ட வாகனத்தில் வந்த ஒரு பிரமுகரின் வாகனம்.

மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது.

கோயிலின் வலது பக்கம்.

Photo0813 Photo0814
Photo0816 Photo0817

கோயிலின் வெளிப்பக்கம் – தென்கிழக்கு மூலை – இதைத்தாண்டி செல்வது மிகவும் கடினமாக உள்ளது. இப்பக்கம் முழுவதும் முள்-வேலிக்காத்தான் முட்செடிகள், கொடிகள் அடர்ந்து புதராக மண்டிக் கிடக்கிறது.

தென்கிழக்கு மூலையிலுள்ள மடப்பள்ளியின் புகைப் போக்கியை காணலாம்.

கிழக்குப் பக்கம் – கொடிக்கம்பம் காணப்படுகிறது. அதாவது, கோயில் வாசல் இப்பக்கம் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.

கற்தூண்கள் கிடக்கின்றன.

Photo0818 Photo0820
Photo0825 Photo0826

கோபுரத்தின் உச்சியைக் காண முடிகிறது (வெளியிலிருந்து, கிழக்குப் பக்கம்).

வடகிழக்கு மூலையில் உள்ள அறையின் மேல் பகுதி காணப்படுகிறது. இதைத் தாண்டி வடக்குப் பக்கத்தில் செல்லமுடியவில்லை.

கோயிலின் வலது பக்கத்தில் வெளிப்பக்கத்தில் உள்ள அறையின் பின்பக்கம்.

கோயிலின் வலது பக்கம் – தென்கிழக்கு மூலையிலிருந்து காணப்படும் தோற்றம்.

Photo0827 Photo0830
Photo0831 Photo0832

கோயிலின் இடது பக்கம் – வெளிபுறத்தில்

கோயிலின் இடது பக்கம் – வெளிபுறத்தில், இன்னும் தொலைவிலிருந்து – உள்ளே வெட்டிய செடி-கொடிகளை அங்கு குவித்துக் கிடப்பதை காணலாம்.

பாசி படர்ந்த, அழுக்கு நிறைந்த குளம். குளத்தின் படிகட்டுகளில் எல்லாவிதமான குப்பைகளும் கிடக்கின்றன. மது பாட்டில்கள், சானிடெரி நாப்கின்கள் என்று …………….

கோயிலின் இடது பக்கம் – வெளிபுறத்தில் – தென்மேற்கு மூலை.

Photo0833 Photo0834
Photo0835 Photo0836

வெளிப்பக்கத்தில், தென்மேற்கு மூலையில், ஒரு நந்தி கிடக்கிறது.

தென்மேற்கு மூலையிலுள்ள கோயிலின் மதிற்சுவர். தடுத்து, ஒரு சிறிய சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த இடைவெளி மூலம் தான் மேற்குப் புற சந்தில் போகமுடிகிறது.

மேற்குப் புறத்தில் உள்ள சிறிய சந்து – ஒற்றையடி பாதை. சமீபத்தில் மரங்களை வெட்டி அப்பாதையை உண்டாக்கியிருக்கிறார்கள்.

அப்பாதையிலும் கிடக்கும் குப்பை, கண்ணடி துகள்கள் முதலியவற்றைக் காணலாம்.

Photo0839 Photo0840
Photo0837 Photo0838

தென்மேற்கு மூலையிலிருந்து மேற்குப் பக்கத்தின் தோற்றம்.

வடமேற்கு மூலை – கோயிலின் வெளிப்பக்கம்.

வடமேற்கு மூலையிலிருந்து வடக்குப்புறத் தோற்றம் (அதாவது கோயிலின் பின்புறம் – இங்குச் செல்லமுடியாது)

வடமேற்கு மூலையிலிருந்து, மேற்குப் பக்கத்தோற்றம்.

Photo0842 Photo0843
Photo0844 Photo0845

குளக்கரையில், குளக்கரைப் படிகட்டுகளாக இப்படி தூண்கள்  பல கிடக்கின்றன.

இவையெல்லாம், சிற்பவேலைப்பாட்டுடன் இருப்பதால், அவை நிச்சயமாக ஏதொ ஒரு மண்டபம், பிரகாரம், கோயில் என்ற கட்டிடத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

இப்படி அதிக அளவில் தூண்கள் கிடப்பதாலும், அருகில் விஷ்ணு, பிள்ளையார் முதலிய சிலைகள் கிடப்பதாலும், முன்பு அங்கு ஒரு கோயில் அல்லது இருக்கும் கோயிலுக்குள்ளேயே ஒரு பிரகாரம் இருந்திருக்கக் கூடும். பிறகு அது இடிக்கப்பட்டிருக்க  வேண்டும்.

இது இப்படியன்றால், குடிகாரன்களின் சேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் விதவிதமான மது பாட்டில்களை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

 

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அத்துமீறல், ஆக்கிரமிப்பு, ஆவுடையார், இறக்குமதி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, ஏற்றுமதி, கடப்பாரை, கப்பல், கலை நயம், காலக்கணக்கீடு, காலம், கிழக்கு, குல நாசம், கொடி கம்பம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுண்ணாம்பு, சுவர், செய்யூர், சோழர், சோழர் காலம், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நட்சத்திரம், நந்தி, நாக பூஜை, பலிபீடம், பிரகாரங்கள், பீடம், மண்வெட்டி, மதுராந்தகம், மேற்கு, ராசி, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு, வன்மீகநாதர், வானியல், ஸ்ரீசக்கரம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s