திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது

திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது

ஆகஸ்ட் மாத உழவாரப்பணி திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது. இக்கோவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் சிறுகனூர் என்ற ஊருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.


வரைப்படத்தின் விவரங்கள்

 1. நான்கு கால் மண்டபம்
 2. ராஜகோபுரம் ஐந்து கண்கள்
 3. கொடி மரம்
 4. நந்தியம்பெருமாள்
 5. உள்மண்டப வாயில்
 6. மகா மண்டப வாயில்
 7. துவாரபாலகர்கள்
 8. அர்த்த மண்டபம்
 9. கருவறை (பிரம்மபுரீஸ்வரர்)
 10. ஶ்ரீ பிரம்மா
 11. சண்டீஸ்வரர்
 12. பதஞ்சலி
 13. சப்த கன்னியர்
 14. கற்பக விநாயகர்
 15. பழமைநாதர்
 16. கந்தபுரீஸ்வரர்
 17. சண்முகநாதர்
 18. கஜலட்சுமி
 19. கஜலட்சுமி

20. பள்ளியறைபாதனேஸ்வரர்

22. காலபைரவர்

23. சூரியன்

24. பக்தநந்தி

 1. 25. மடப்பள்ளி

26. முன்மண்டபம்

27. அம்மன் கோவில்28. தாயுமானவர்

29. மகா மண்டபம்

30. கருவறை (பிரம்ம நாயகி)

31. திருச்சுற்று மாளிகை

32. பிரம்ம தீர்த்தம்

33. மண்டுகபுரீஸ்வரர்

34. சப்தரீஸ்வரர்

35. ஏகாம்பரேஸ்வரர்

36. கைலாசநாதர்

37. 18 கால் மண்டபம்

38. பெரிய நந்தி

39. யாகசாலை

40. ஜம்புகேஸ்வரர்

41. காளத்திநாதர்

42. அருணாசலேஸ்வரர்

43. ஸ்தல விருக்சம் – மகிழமரம்

44. ஜேஸ்டாதேவி, மாந்தி, மாந்தன்

45. திருமண மண்டபம்

46. அலுவலகம்

47. வசந்த மண்டபம்

48. கிணறு

49. நந்தவனம்

50. சுத்தரத்தினேஸ்வரர்

51. நவகிரகங்கள்

52. தானியகிடங்கு

மண்டுகபுரீஸ்வரர், சப்தரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் சன்னிதிகள் வடமேற்கு மூலையில் உள்ளன. உழவாரப் பணி நடைபெறுகிறது.பிரம்மதீர்த்ததிற்கு அருகில் பணி நடைபெறுகிறது. தெற்குதிசையில் உள்ளது.பணி நடந்த விவரங்கள்

பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகம் வரைப்படத்தில் காட்டியுள்ளபடி மிகப்பெரிய ஸ்தலமாகும். அதில் வடக்கு-வடமேற்கு பகுதிகளில் தான் உழவாரப்பணி நடந்துள்ளது. அப்பகுதிகளில் உள்ள சன்னிதிகள், குளம், விருட்சம் முதலியன பின்வருமாறு. புகைப்படங்களில் அடையாளம் காண உதவ இவ்விடங்கள் சுமாராகச் சொல்லப்பட்டுள்ளன:

கிழக்கு ஜம்புகேஸ்வரர் வடகிழக்கு யாகசாலை
மேற்கு அருணாசலேஸ்வரர் வடமேற்கு கைலாசநாதர்
வடக்கு பெரிய நந்தி தென்கிழக்கு தண்ணீர் தொட்டி
தெற்கு பிரும்ம தீர்த்தம் தென்மேற்கு மண்டுகநாதர்

பிரம்மா வழிப்பட்ட 12 லிங்கங்களும் இங்கு இருப்பதாக, அதன் சன்னிதிகள் அடையாளம் காணப்பட்டு, வழிபாடு நடந்து வருகிறது.

1 ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் மூலஸ்தானம் 7 அருணாசலேஸ்வரர் மேற்படி
2 ஸ்ரீ பழமலைநாதர் பதஞ்சலி சன்னிதி எதிரில் 8 ஸ்ரீ கைலாசநாதர் வடமேற்கு மூலை
3 பாதாள ஈஸ்வரர் சண்டிகேஸ்வரர் அருகில் 9 ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் மேற்படி
4 தாயுமானவர் அம்மன் சன்னிதி நுழைவு 10 ஸ்ரீ காளஸ்திநாதர் மேற்படி
5 மண்டுகநாதர் அம்மன்-வடக்கு (படத்தில் தென்மேற்கு) 11 ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் இரண்டிற்கும் நடுவில்
6 ஏகாம்பரேஸ்வரர் மேற்படி 12 ஸ்ரீ சுத்த ரத்தினேஸ்வரர் நவக்கிரகம் அருகில்

பிரம்மதீர்த்தம் என்ற குளம், குறிப்பிட்ட சதுரங்களின் சேர்ப்பினால் உருவான, ஒரு ஜியோமிதி உருவத்தில் (geometrical pattern) உள்ளது.

 

3-8, 11-12, 18-23, 14-15 படிகட்டுகள் மேலிருந்து குளத்தின் மையப்பகுதிற்கு (13) இறங்குகின்றன. 1-2-6, 16-21-12, 24-25-20 மற்றும் 10-5-4 பகுதிகளில் கட்டுமானம் இல்லை, ஆனால் அளவிற்கு அந்த சதுரங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 8-12-18-14 படிகட்டுகள், ஒரு எந்திரத்தின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. எண்கள் குறிப்பிட்ட வரிசையில், கிரமத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அதாவது, ஒவ்வொரு வரிசை அல்லது கிரமத்திற்கு இரு எண்-தொடர்ச்சிகள் (number series) இருக்கக்கூடும். உண்மையில், இக்குளம் இந்த கோவில் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ளதை காணலாம். பண்டைகாலத்தில், தீர்தத்திற்கு, ஸ்தவிருட்சத்திற்கு, இடத்திற்குத்தான் மகிமை இருந்ததைக் கண்டறியப்பட்டு, அது மக்களுக்கு உபயோகப்படவேண்டி, அத்தகைய கட்டுமான அமைப்புகளை அமைத்தனர். முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளது போல, கோவிலுக்கு பலவிதமான மக்கள் வருவர் என்பதால், அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் இத்தகைய அமைப்புடன் கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இதைப் பார்க்கும் அவர்கள் அதில் உள்ள விஞ்ஞான-தொழிற்நுட்பங்களை அறிந்து கொள்ள ஏதுவாகிறது.

வடமேற்கு மூலையில் உள்ள கைலாசநாதர் கோவில், பழமையானது போலத் தோன்றுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலுள்ள சிற்பங்களைப் போலவே, அரித்துள்ள நிலையில் உள்ளன. ஆனால், அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நந்தீஸ்வரரின் சிலையுள்ளது. எதிர்மூலையில் வடகிழக்கில் யாகசாலையுள்ளது.

கைலாசநாதர் கோவிலின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் உள்ளன.

இச்சிற்பங்களின் அமைப்பு, நளினம், கலைநயம், சிற்பங்களின் வடிவமைப்பு, உருவங்களின் உடலமைப்பு முதலியவற்றைப் பார்க்கும் போது, இவை பழங்காலத்தைச் சேர்ந்தவை போலத் தோன்றுகின்றன.

இப்பகுதிக்கு செல்லும் வழி, பன்னிரெண்டு லிங்கங்கள் உள்ள அறிவிப்பு

முன்னமே குறிப்பிட்டப்படி, பிரதான கோவிலின் வடக்குப் பக்கம் உழவாரப்பணி நடைபெறுகிறது.

பெரியர்களுக்கு இணையாக சிறுவர்-சிறுமியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளது, அணில் ராமர் பாலம் கட்ட்ம் போது உதவியது போல.

உழவாரப்பணியில் திருப்தியடையும் பக்தர்கள் – வயதானவர்களும் சளைக்காமல் தங்களால் முடிந்த வேலையை செய்வதைக் காணலாம். இப்படி பலரும் பணியை செய்வதால், பெரிய இடமானாலும் சுத்தமாவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தெற்கு, தென்மேற்கு பகுதிகளில் பணி நடைபெறுகிறது.

பணிக்கு முன்பாக எடுத்த புகைப்படங்களில் செடி-கொடிகள் மண்டி கிடப்பதை காணலாம். ஜேஸ்டாதேவியின் சிற்பம் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. பொதுவாக ஜேஸ்டாதாவி விக்கிரத்தை மக்கள் விரும்புவதில்லை.

பிரம்மனுக்கு கோவில் இல்லை என்பதை விட, பிரம்மனது சிலைகள், சிற்பங்கள், கோவில்கள் சுலபமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக பிரம்மாவின் கோவில்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப் பட்டிருக்கலாம். அப்பொழுது, பிரம்மாவின் ஒரு தலைத் துண்டிக்கப்பட்டது, கர்வம் அடக்கப்பட்டது, அடி-முடி தேடி சென்றார் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், தென்கிழக்காசிய நாடுகளில் பிரம்மனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்திருப்பதை காணலாம். பிரம்மதேசம் என்றே ஒரு பகுதி அழைக்கப்பட்டதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

காலம் கடக்கும் போது, கருத்துகள் மாறுகின்றன. உண்மைகளும் மறக்க/மறைக்க/மறுக்கப்படுகின்றன. சித்தாந்தங்களுக்குட்படும் மனிதர்கள், தங்களது பிழைப்பிற்காக. அத்தகைய மாற்று, திரிபு, பொய்யான விளக்கங்களை அளிக்கலாம். அவர்களே ஆதிக்கத்தில் அல்லது பலத்துடன் தமது கருத்துகளை, மற்றவர்கள் மீது திணிக்கலாம் என்றிருக்கும் போது, அவ்வாறே செய்யலாம்.

கோவிலின் வெளிப்பகுதியிலிருந்து, நாற்புறங்களிலும் காணப்படும் தோற்றம்.

கீழ்காணும் புகைப்படங்கள் எல்லாம், உழவாரப் பணி முடிந்த பிறகு எடுக்கப் பட்டவை. அவற்றிலிருந்து, பணி நடந்த தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நேரத்தை மக்கள் எப்படியெல்லாமோ செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவி, ச்னிமா, கிரிக்கெட் என்று பார்த்து மணிக்கணக்கில் நேரத்தை விரயமாக்குகிறார்கள். இதனால், கண் சம்பந்தபட்ட நோய்களில் சிக்கிக் கொள்கிறார்கள், கண் பார்வை மங்குதல், கண்களில் நீர் வடிதல், என்றெல்லாம் அவதி படுகிறார்கள். அந்நிலையில், இவ்வாறு உழவாரப் பணி செய்தால், உடல் ஒரு பணியில் ஈடுபடுவதால் சுறுசுறுப்பாக இருக்கும், ஆரோக்கியமக இருக்கும்…..

பணி தொடரும்

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in 13 இலை, 7 இலை, அகத்தீஸ்வரர் கோவில், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, சிறுகனூர், ஜாதகம், தலையெழுத்து, திருப்பட்டூர், நட்சத்திரம், நான்முகன், பஞாங்கம், பஞ்சலி, பிரம்மன், பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, லிங்கம் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது

 1. S. R. Vikram சொல்கிறார்:

  Excellent and informative.

  The photographs show the workdone.

 2. S. R. Vikram சொல்கிறார்:

  The arrangement and geometrical construction of the tank must have some significance which has to be brought out clearly.

 3. Pingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s