அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் 22-05-2011 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் 22-05-2011 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம்[1] என்ற அமைப்பின் 112வது உழவாரப்பணி, அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் நடைப்பெற்றது. இக்கோவில் வாடாதவூர் கிராமத்தில் (உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ளது. செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியில், மல்லியங்கரணையிலிருந்து வலதுபுற சாலையில், சுமார் 5 கி.மீ வலது பக்கமாகவே உள்ளே திரும்பி செல்லும் சாலையில் சென்றால், இக்கோவிலை அடையலாம்.

கோவிலின் தோற்றம், அமைப்பு: இது ஒரு சிறிய அழகான கோவில் ஆகும். கோவிலைச் சுற்றி சதுர வடிவத்தில் அக்ரஹார வீடுகள் போன்று ஓடுவேய்ந்த வீடுகள் வரிசையாக, அமைந்திருப்பது தெரிகிறது. ஆனால், இப்பொழுது, கோவிலின் வலது பக்கம் சாலை இருப்பதால், எதிர்பக்க வீடுகள் தனியாக இருப்பது போன்றுள்ளது. கோவிலுக்கு இடது பக்கம் உள்ள சில வீடுகளில், மூன்று குடும்பங்களே வசிக்கின்றன. அதில் ஒரு வீட்டில், திரு செந்தாமரை முதலியார் (நடராஜ முதலியாரின் மகன்) என்பவரை சந்திக்க நேரிட்டது. இவருக்கு வயது 76 ஆகிறது. மிகவும் சிறிய வீடாக இருந்தாலும், அப்பொழுது உச்சிவெயிலில் மிகவும் வெப்பம் தகித்துக் மொண்டிருந்த போது, அவர் வீட்டிற்குள் வெப்பம் தணிந்து காணப்பட்டது. கூரை உயர்ந்து, காற்றுப் போக்குவரத்துடன் இருந்ததால், அவ்வாறு குளிர்ந்துள்ளது. அத்தகைய அமைப்புள்ள விடுகளை அழித்து, இன்று நாம் சிமென்ட்-கான்கிரீட் வீடுகளில் வாழ்ந்ந்து, வெப்பத்தைப் பெருக்கி, மற்றவர்களுக்கும் வெப்பத்தைக் கொடுத்துவரும் நிலை காலத்தின் அநாகரிகம் என்றே சொல்லலாம்.

இவர் கோவிலின் தர்மகர்த்தா என்று சொல்லிக்கொள்கிறார். இவரிடத்தில் பேசியதிலிருந்து அறியப்பட்ட விவரங்களிலிருந்து, இக்கோவில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக பெண்கள் ஆசைப்பட்டு, இக்கோவிலைக் கட்டினார்கள். இதற்கான லிங்கம், எங்கிருந்தோ கொண்டுவ வரப்பட்டதாம். ஆனால், அது தெருக்கோடியில் எடுத்துவரப்பட்டபோது, அங்கங்கு தீப்பற்றிக் கொண்டதால், பயந்து அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்து விட்டார்களாம். இப்பொழுதுள்ள லிங்கம், தாமரைப்பூ பீடத்தில் மேல் இருப்பது போல இருக்கிறாதாம். தனியார் கோவிலாகத்தான் இருந்து வந்துள்ளது. சைவ வேளாள முதலியார் சமூகம், கோவிலுக்கு நிலங்களை ஒதுக்கியுள்ளது[2]. ஆனால், இக்கோவிலுக்கு நிலங்கள் உள்ளன என்றறிந்ததும், இந்து அறநிலையத் துறை வழக்குப் போட்டு எடுத்துக் கொண்டதாம். கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் வாவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சமுகத்திற்கும் ஆச்சாரிமான்யம், வண்ணான்மான்யம், வெட்டியான் மான்யம், என்று மான்யம் உள்ளது. சமூகத்தார் அனைவரும் கோவிலை ஆதாரமாக வைத்துத்தான் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அதாவது, நிலத்தில் விளையும் நெல்லை ஒரு பங்காகக் கொடுக்கப்படும். இப்பொழுது, பெருமளவில், இவர்கள் இங்கு இல்லை. எல்லோருமே நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். வழக்கம்போல, நிலத்தை உழுவதற்கு-பயிரிட எடுத்துக் கொண்டவர்கள், கொடுக்கவேண்டிய நெல்லை குறைத்து-குறைத்துக் கொடுத்து, இப்பொழுது ஒன்றுமே இல்லை என்கின்றனராம்!

08-07-2001 அன்று குடமுழுக்கு நடைப்பெற்றது: கோவிலின் கோபுரவாயில் சுவரில் இடது பக்கம் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டின்படி, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, இக்கோவிலுக்கு குடமுழுக்கு / கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது. இந்து அறநிலையத் துறை தடங்கல்களை மீறி குடமுழக்கை கிராமத்து மக்கள் நடத்தியிருக்கிறார்கள், என்று அந்த பெரியவர் கூறுகிறார். அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் சுவாமிக்கு காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம் மெய்கண்டார் பீடம் 232வது பட்டம் குருமகாசந்நிதானம் சீலத்திரு சீவளர்சீர் திருவம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா 08-07-2001 அன்று நடைபெற்றது.

619 – முன்பிருந்த கோவில் சிறியதாக இருந்திருக்கலாம். அல்லது பக்கத்தில் கிடந்த தூண்கள் முதலியவற்றைக் கொண்டுவந்தும் இதைக் கட்டியிருக்கலாம். கர்ப்பக்கிருகத்தின் முன்னேயிருக்கும், கூரையில் மீன் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. ஆனால், மற்ற தூண்கள் சிற்பங்கள் எதுவும் இன்றி, சாதாரணமாகக் காணப்படுகின்றன.

620 – உள்ளே நடராஜர், முருகன்–வள்ளி-தெய்வானை, நால்வர் முதலியோர்களின் உலோக விக்கிரங்கள் காணப்படுகின்றன. மற்ற உலோக பாத்திரங்கள், பூஜைப் பொருட்களும் உள்ளன.

621 – உலோக பாத்திரங்கள், பூஜைப் பொருட்களை பெண்-அடியார்கள் சுத்தம் செய்கின்றனர்.

622 – கோவிலின் முகப்பு, நுழைவாயில். இடதுபக்கம் இருப்பது, குருக்களின் வீடு. ஆனால், இப்பொழுது யாரும் இல்லை.  ஒருவேளை, அவருக்கும் சம்பளம் எதுவும் கொடுக்காததால், சென்றுவிட்டாரா அல்லது வேறு யாதாவது காரணமா என்று தெரியவில்லை.

623 – உழவாரப்பணிக்கு முன்பு – கோவிலின் வலது பக்கமூலையிலிருந்து காணப்படும் தோற்றம் (வடகிழக்கு). சிறிய கோவில் என்பதால், வளர்ந்திருந்த செடி-கொடிகள் அப்புறப்படுத்தப் பட்டன.

624 – கோவிலின் இடது பக்கமூலையிலிருந்து காணப்படும் தோற்றம். குருக்களின் வீட்டின் பின்புறத்தைக் காணலாம் (தென்கிழக்கு).

625 – கோவிலின் இடது பக்கத்தோற்றம். வைக்கோல் முதலிவயற்றை மக்கள் குமித்து வைத்துள்ளார்கள்.

626 – கோவிலின் பின்பக்க இடது பக்கமூலை (தென்மேற்கு).

627 – கோவிலின் பின்பக்கம்.

628 – கோவிலின் பின்பக்க வலது பக்கமூலை (வடமேற்கு).

629 – கோவிலிற்குள் தென்கிழக்கு மூலை.

630 – கோவிலிற்குள் தென்மேற்கு மூலை.

631 – கோவிலிற்குள் வடமேற்கு மூலை. நவக்கிரகம் உள்ளது.

632 – கோவிலிற்குள் வடகிழக்கு மூலை. இந்த அறையில் கோவில் பொருட்களை போட்டு வைத்துள்ளனர்.

633 – கோவில் வாசலிலிருந்து, இடது பக்கத் தோற்றம்.

634 – கோவில் வாசலிலிருந்து, வலது பக்கத் தோற்றம். நவக்கிரகம் இருப்பதைப் பார்க்கலாம்.

635 – உலோக பாத்திரங்கள், பூஜைப் பொருட்களை பெண்-அடியார்கள் சுத்தம் செய்கின்றனர்.

636 – உலோக பாத்திரங்கள், பூஜைப் பொருட்களை பெண்-அடியார்கள் சுத்தம் செய்கின்றனர்.

637 – தென்கிழக்கிலிருந்து தொலைவிலிருந்து கோவிலின் தோற்றம். கிழக்குப் பக்கத்தில், நெடுந்தூரம் செடி-கொடிகள் தாராளமாகவே வளர்ந்துள்ளது. யாரோ நடந்து சென்று வருவதால், உள்ளே நெளிந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதை காணப்படுகிறது.

638 – கோவிலின் இடது பக்கத்தில் உள்ள அக்ரஹாரத்து வீடுகள் இடிந்து கிடக்கின்றன. பிராமணர்கள் இங்கு இருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.

639 – இடிந்து கிடக்கும் வீட்டின் உட்பகுதி.

640 – இடிந்து கிடக்கும் வீட்டின் உட்பகுதி தோற்றம். கூரை இடிந்து விழுந்துள்ளது. ஓடுகள் கீழே கிடக்கின்றன. கதவுகள்-ஜன்னல்கள் முதலியவைற்றை யாரோ பெயர்த்தெடுத்துச் சென்றுள்ளனர்.

641 – இந்த இரண்டு இடிந்த வீடுகளுக்கு முன்புள்ள ஒரு 140 வருட கால வீட்டில், மேலே சொல்லப்பட்ட திரு செந்தாமரை முதலியார் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு வலது கை, வலது கால் இயங்காமல் இருக்கின்றனர். அவரது மனைவி உதவி வருகிறார்.

642 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலின் வலது பக்கமூலையிலிருந்து காணப்படும் தோற்றம் (வடகிழக்கு) – “ஸ்ரீ கைலாசநாதர் தி” என்று திரு கணேசன் எழுதி முடித்துள்ளார்.

643 – உழவாரப்பணிக்குப் பின் – – கோவிலின் இடது பக்கமூலையிலிருந்து காணப்படும் தோற்றம். குருக்களின் வீட்டின் பின்புறத்தைக் காணலாம் (தென்கிழக்கு).

644 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலின் பின்பக்க இடது பக்கமூலை (தென்மேற்கு).

645 – உழவாரப்பணிக்குப் பின்- கோவிலின் பின்பக்க இடது பக்கமூலை (தென்மேற்கு).

646 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலின் வலது பக்கமூலையிலிருந்து காணப்படும் தோற்றம் (வடகிழக்கு) – “ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில். வா” என்று திரு கணேசன் எழுதி முடித்துள்ளார்.

647 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலிற்குள் தென்கிழக்கு மூலை.

648 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலிற்குள் தென்மேற்கு மூலை.

649 – உழவாரப்பணிக்குப் பின் கோவிலிற்குள் வடமேற்கு மூலை. நவக்கிரகம் உள்ளது.

650 – உழவாரப்பணிக்குப் பின் – கோவிலிற்குள் வடகிழக்கு மூலை. இந்த அறையில் கோவில் பொருட்களை போட்டு வைத்துள்ளனர்.

651 – உழவாரப்பணிக்குப் பின் – உட்புற பிரகாரத்தின் முகப்புத் தோற்றம்.   652 – உழவாரப்பணிக்குப் பின் – “அருள்மிகு கமலாம்பிகை உடனமர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவியில், வாடாதவூர். காஞ்சி மாவட்டம்” என்று எழுதியப்பிறகு.

653 – குடமுழுக்கு விழா நடந்ததைப் பற்றிய கல்வெட்டு, நுழைவுவாயில் கோபுரத்தின் இடது பக்கத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

குடமுழுக்கு விழா

நிகழும் விஷீ ஆண்டு ஆனிமாதம் 24ம் தேதி

08-07-2001ஞாயிற்றுக் கிழமை திருதியை திதி, திருவோண நட்சத்திரம்[3] காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சிம்மலக்னத்தில்

அருள்மிகு கமலாம்பிகை உடனுறை

கைலாசநாதர் சுவாமிக்கு

காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம்

மெய்கண்டார் பீடம் 232வது பட்டம்

குருமகாசந்நிதானம் சீலத்திரு சீவளர்சீர்

திருவம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சார்ய

சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

ஆலய நிர்மாணம்

திரு ஏ. எம். வரதராஜ ஸ்தபதி

ஆதவப்பாக்கம்

அருள்மிகு கைலாசநாதர்நற்பணி மன்ற மற்றும்வாடாத ஊர் கிராமத்தார்

654 – கூட்டுப்பிரார்த்தனை நடக்கிறது. அக்கிராமத்தின் முக்கிய பிரமுகர், “கும்பாபிஷேகத்தின் போது, கோவில் எப்படி இருந்ததோ, அதுபோல, கோவிலை உழவாரப்பணி மூலம், சுத்தம் செய்யப்பட்டுள்ளது”, என்று பாராட்டியது, உழவாரப்பணியாளர்களின் தொண்டை சிறப்பித்துக் காட்டுகிறது.

655 – அடியார்கள் குடும்பம். அவர்கள் ஆசைப் பட்டு கேட்டதால், இப்புகைப்படம் எடுக்கப்பட்டது, இங்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

மெய்கண்டார் காலம்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டில், “அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் சுவாமிக்கு காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம் மெய்கண்டார் பீடம் 232வது பட்டம் குருமகாசந்நிதானம் சீலத்திரு சீவளர்சீர் திருவம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது”, என்றுள்ளது. இங்கு “232வது பட்டம்” என்றால், அந்த கிரம எண் பீடாதிபதியா அல்லது பட்டமா என்று தெரியவில்லை.

மெய்கண்டார் வரலாறு: நடுநாட்டில் வெள்ளாற்றின் வடகரையில் பாடல்பெற்ற சிவஸ்தலமாகிய பெண்ணாகடத்தில் வேளாளர் குலத்தில் களப்பாளர் என்ற குடியை சேர்ந்த அச்சுத களப்பாளரின் மைந்தனாக, ஸ்வேதனப் பெருமாள் 13ம் நூற்றாண்டில் சுமார் 1240ல் பிறந்து, வாழ்ந்திருந்தார்[4]. 1221 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்[5]. “ஊருடைய பெருமாளான எடுத்தாடு வலிய வேளார்”, என்று இவர் அழைக்கப்பட்டதாக, திருவண்ணாமலையிலுள்ள கல்வெட்டு கூறுகிறது[6]. இவர்தாம், மெய்கண்டதேவர் என்ற மெய்கண்டார்.

ஆகவே, 232வது பட்டம் எனக் குறிப்பிட்டுள்ளது எப்படியன்று தெரியவில்லை. ஏனெனில், 13ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான், “மெய்கண்டார் பீடம்” தோற்றுவிக்கப்பட்டிருக்க முடியும். ஆக, இந்த 700 வருட காலத்தில், 232 மடாதிபதிகள் இருந்திருந்தார்கள் என்றால் ஒவ்வொருவரும் சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கவேண்டும். இது, மிகவும் குறுகிய காலமாகும்[7]. ஆகவே, மடங்கள் காலத்தைக் குறிப்பிடும்போது, தெளிவாக குறிப்பிடவேண்டும்[8].

ஔவையாரும் “வாடாதவூரும்”: ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள், பல்வேறு காலத்தில் – திருவள்ளுவர் காலத்திலிருந்து இடைக்காலம் வரை – இருந்திருக்க வேண்டும்[9]. இல்லை, பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள், தாங்கள் இயற்றிய பாடல்களை, ஔவையார் பெயரில் புழக்கத்தில் விட்டிருக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பாலல்கள் “தனிப்பாடல் திரட்டு”களில் கூட காணப்படுகின்றன. எனவே, இவ்வூரை ஔவையார் “வாடாதவூர்” என்று குறிப்பிட்டார் என்பதற்கு எந்த சான்றுள்ளது என்று தெரியவில்லை.

அரச வம்சாவளி, குரு பரம்பரை, புலவர் பாரம்பரியம்: இந்திய சரித்திரத்தில் அரச வம்சாவளி, குரு பரம்பரை, புலவர் பாரம்பரியம் முதலியவை காலக்கணக்கீட்டியலில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் “பெயரன்” என்ற சம்பிரதாயத்தில், பேரன் தாத்தாவின் பெயரைக் கொண்டுள்ளதும் வழக்கம். இல்லை, ஒரு அரசன் புகழ் பெற்றுவிட்டால், அவனுக்குப் பிறகும், அப்புகழ் தொடரும் போது, தொடர்ந்து வரும் சந்ததியரும் அதே பெயரைக் கொண்டு அரசாட்சி செய்வர்[10]. அதே போலவே, ஒரு குரு, சன்னியாசி, ஆச்சாரியர் புகழ் பெற்றுவிட்டால், மடம் தோற்றுவிக்கப் பட்டு, அவருக்குப் பிறகு வருபவர்கள் அப்பெயரைப் பட்டம் போன்று உபயோகித்து வருவர். இது “ஆசிரமம்” என்ற சம்பிரதாயத்திலும் தொடரும்[11]. அதேபோலத்தான் புலவர்களும். அம்முறையில் தான் “ஔவையார்” பல நூற்றாண்டுகளில் காணப்படுகிறார்.

வேதபிரகாஷ்

27-05-2011


[1] சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் இந்த மன்றம், இதுவரை ஏன் பதிவு செய்யாமல் இருந்து வந்துள்ளது என்று தெரியவில்லை. முதல் பணி 20-01-2002ல் நடந்ததாக கூறுகிறது. பக்கம்.XV.

[2] சென்ற உழவாரப்பணி விவரத்தில், செட்டியார் சமூகத்தின் இறைப்பணி பற்றி சொல்லப்பட்டது. அதுபோலவே, முதலியார்களின் சமூகத்தவரின் இறைப்பணியில் சிறப்பானதாகும். சைவம் தழைக்க, தழைத்தோங்க, இன்று வரையிலும் தொடர அவர்கள் ஆற்றியத் தொண்டு அளவிட முயலாதது ஒன்றாகும்.

[3]  இப்படி“நிகழும் விஷீ ஆண்டு ஆனிமாதம் 24ம் தேதி 08-07-2001 ஞாயிற்றுக் கிழமை திருதியை திதி, திருவோண நட்சத்திரம் காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சிம்மலக்னத்தில்”, எல்லா “பஞ்சாங்கன்களையும்” கொடுத்து, ஆங்கில வருடத்தைக் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. கலிசகாப்தம் 5102 மற்றும் சாலிவாகன வருடம் 2079 என்று, நமது நாட்டு வழக்கப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும். சேர-சோழ-பாண்டியர்-பல்லவர் போன்ற அரசர்களே அவ்வாறு குறிப்பிட்டிருக்கும் போது, இக்கால மக்கள் மாறுபட வேண்டிய அவசியம் இல்லை.

[4] சுப்பிரமணிய தேசிகர், சிவஞானபோதம் சிற்றுரை, சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940, ப.vi.

[5] V. Ponnaiah, Theory ofd Knowledge of Saiva Siddhanta, AnnamalaiUniversity, Chidambaram, 1962, pp.27-28.

[6] South Indian Inscriptions, Vol. VIII, No.74; Epigraphica Indica, Vol. VIII, p.218.

இந்த கல்வெட்டுல்களின்படி, இவர் 1232ம் ஆண்டுகளில் வாழ்ந்திருந்ததாத் தெரிகிறது. ஆகவே, இவர் பிறந்தது, 13ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் எனலாம்.

T. B. Siddalingaiah, Origin and Development of Saiva Siddhanta upto 14th Century,MaduraiKamarajUniversity, 1979, pp.87-88.

[7] பொதுவாக, சரித்திர ஆசிரியர்கள், ஒரு ராஜா ஆண்டது, ஒரு மடாதிபதி பதவியில் இருந்தது போன்றவற்றை பத்து ஆண்டுகள் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், 2320 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கிபி 320ல், இம்மடம் இருந்திருந்து, முதல் பீடாதிபதி அக்காலத்தில் இருந்திருக்கவேண்டும். இது பொருத்தமற்றாதாகி விடுகிறது.

[8] நம்மிடத்தில் விவரங்கள் இருக்கும் போது, அவற்றை குறிப்பாக, தெளிவாக அறிவிக்கப் படவேண்டும். அப்பொழுதுதான், வரும் சந்ததியினருக்கு, சரித்திர ரீதியில் விவரங்கள் கிடைக்கும். ஏதோ பொதுவாக “232வது பட்டம்” என்று குறிப்பிட்டதை விட, இந்த காலத்திலிருந்து இருந்துவரும் மடத்தின் இத்தனையாவது மடாதிபதி என்று குறிப்பிட்டால், அதில் சரித்திரமே பதிவு செய்யப்பட்டது போன்றிருக்கும்.

[9] ம.பொ.சிவஞானம், ஔவை யார்?, என்ற நூலில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஔவையார்கள் இருந்திருக்கக் கூடும் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

[10] குலோத்துங்கன் – 1, 2, 3 என்று இருந்ததைப் போல – ஏனெனில், எல்லோருக்கும், மூன்று மன்னர்கள் அவ்வாறு ஆண்டார்கள் என்ற உண்மை தெரியும்.

[11] எல்லா இடத்திலும், அகத்திய ஆசிரமம் இருக்கலாம், அங்கு அகத்தியரும் இருக்கலாம். ஆனால், ஒரே அகத்தியர் இருந்தார் என்பதாகாது. அதாவது, ஒரே அகத்தியர் 5000, 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றாகாது. வருக்குப் பிறகு, அவரது வழிவருபவர்கள், அவ்வாறு நியமிக்கப் பட்டவர்கள், அதே பெயரில் / பட்டத்தில் இருந்து வருவர்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உத்திரமேரூர் வட்டம், ஔவையார், மல்லியங்கரணை, மெய்கண்டார், வாடாதவூர், வாடாதவூர் கிராமம் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to அருள்மிகு கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் 22-05-2011 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

 1. S. R. Gnanasambandan சொல்கிறார்:

  The presence of Avvaiyar could be found in and around Dharmapuri, Krishnagiri, Tirukkovalur, and other areas.

  At the same time, her presence could be felt in other areas, particularly, in the earlier Chola Kingdom.

  Of course, local myths would be created to suit the local people.

 2. vedaprakash சொல்கிறார்:

  செவிகளை குளிர வைத்த பன்னிறு திருமுறைகள்
  திங்கள்கிழமை, மே 30, 2011, 12:07 [IST]
  http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/tirumurai-isai-tamil-vizha-aid0090.html

  மதுரை: மதுரையில் 100 ஓதுவார்கள் பங்கேற்று பாடிய திருமுறைத் தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கான இசை ரசிகர்கள் கேட்டு ரசித்தனர்.

  தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம், தமிமிழிசைப் பாடல்களுக்குத் தரப்படுவதில்லை என்பது நீண்ட நாட்களாகவே ஒரு மனக்குறையாக உள்ளது. இதனைப் போக்கும் வகையிலும் தமிழிசைப் பாடல்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1999ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தமிழிசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் அறுபத்து மூவரில் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெருமையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விழா ஓதுவா மூர்த்தி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகள் சீர்காழியில் விழா நடத்தப்பட்ட பிறகு மதுரையில் 7-வது ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9-வது ஆண்டு விழா மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள நால்வர் சன்னதியில் இந்த விழா நடை பெற்றது.

  63 நாயன்மார்களுக்கு சிறப்பு

  பன்னிரு திருமுறை பாடல்கள் பாடிய நாயன்மார்களை வணங்கி தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடுவது இந்த விழாவின் சிறப்பம்சம். சனிக்கிழமை காலை விழா தொடக்கமாக திருக்கோயிலில் உள்ள 63 நாயன்மார் திருவுருவங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் நால்வர் சன்னதியில் ஓதுவார்கள் தமிழிசை பாடத் தொடங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று கேட்பவர்களின் செவிகள் குளிர தேவரம், திருவாசம் பாடி மகிழ்வித்தனர்.

  ஞாயிற்றுக்கிழமை காலையில் நால்வர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நாயன்மார் திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் பொருத்தி தமிழிசைப் பாடல்களால் அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்தர், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்தர், திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கினர்.

  தங்கச் சப்பர வீதி உலா

  மாலையில் நால்வர் திருவுருவங்கள் மற்றும் 12 திருமுறைப்பாடல்கள் அடங்கிய பெட்டகம் வைக்கபப்பட்ட தங்கச் சப்பர வீதி உலா நடைபெற்றது. விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரி கோ.ஜெயராமன் முன்னிலை வகித்தார். திருமுறை இசைப் பாடல் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

  பாடசாலை அமைக்கத் திட்டம்

  பழைமை வாய்ந்த தமிழிசை தொடர்பான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதுமான அளவில் இல்லை. கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழிசைக்கு தரப்படுவதில்லை. எனவே, தமிழிசை பாடசாலை அமைக்க ஓதுவா மூர்த்திகள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. தமிழிசைப் பாடல்கள் அனைத்தையும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் விதமாக 5 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஓதுவார் கூட்டமைப்புச் செயலர் பொன் முத்துக்குமரன் தெரிவித்தார்..

 3. sathi62 சொல்கிறார்:

  பத்திமையாலானந்த பரவசமெய்த கோயில் கட்டி தன்னுடைமையெல்லாம் கொடுத்து கோவணாண்டியாய் இரத்தக் கண்ணீர் சிந்தி சமுதாயத்திலொன்றுக்குமுதவாத குடும்பங்களுண்டு. பத்திமையென்று தான் வாழ பிறரைக் கெடுக்கும் வஞ்சகர்களுண்டு. அப்படிபட்ட கொடுமதியாளர்களிடமிருந்து காத்துக்கொள்ள ‘போதமுடைமை” வேண்டும். “கல்லார் நெஞ்சில் நில்லாரீசன்” ஞானமும் கல்வியும் இல்லாவிட்டால் – கோயில் கட்டி, மூட நம்பிக்கையால் காலத்திற்கும் கல்லாமையிலுழல இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம். ஆகையால், உழவோரே, ” மெய்மையாமுழவைச் செய்து பொய்மையாம் களையை வாங்க…” மக்களுக்கு ஞானப் பயிற்சியுமொழுக்கப்பயிற்சியும் தருவீர்களாக. கல்லுக்கு சொத்தெழுதி காலமெல்லாம் அப்ஷேகம் செய்து காதறுந்து நொந்து வெந்து சாகும் மனிதரில் புவிக்கு பாரமானோர் கூறும் வார்த்தைகளிது.

 4. m balakrishnan சொல்கிறார்:

  very good thodarattum ungaladhu pani vashka valamudan

 5. Pingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி

 6. Pingback: ஔவையாரைப் பற்றி திடீரென்று “டமால்” தகவல், “குபுக்” சர்ச்சை, ‘திடுக்’ தகவல், “குபீர்”ஆராய்ச

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s