அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010)

அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010)

அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி, 28-11-2010 அன்று நடைபெற்றது. இவையிரண்டுமே சிறிய கோவில்கள். சுமார் 200 – 300 வருடங்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் காணப்படும் செங்கல்சுதை சிற்பங்கள், உபயோகிக்கப்பட்டுள்ள செங்கற்கள், முதலியவை அத்தன்மையினைக் காட்டுகிறது. காஞ்சிபுர நகரம் மட்டுமல்ல, இருந்த, இருக்கின்ற கோவில்கள் எல்லாம் பற்பல தாக்குதல்களுக்கு, மாற்றங்களுக்கு, இடமாற்றங்களுக்கு கடந்த 2000 வருடங்களில் உட்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள மாறுதல்கள், தாக்குதல்கள், இடப்பெயர்ச்சிகள் முதலியன: காஞ்சிபுரமே ஸ்ரீசக்கரவடிவத்தில் இருந்து பற்பல, நூற்றுக்கணக்கான கோவில்கள் அந்தந்த இடத்தில் இருந்து, இப்பொழுது 2000 வருடங்களுக்குப் பிறகு, குறிப்பாக ஜைன-பௌத்த மதங்களின் தாக்குதல்களினால், தாக்கத்தினால், அறவே மாற்றப்பட்டுள்ளது[1]. இப்பொழுது 50-100 ஆண்டுகளில், அவர்களுக்கும் மேலாக, நாத்திகர்களின் ஆட்சியில், இக்கோவில்கள் பல மாறுதல்களுக்குட்பட்டுள்ளது[2]. கோவில்களுக்கு நடுவில் தெருக்கள், சாலைகள், அங்காடிகள், வீடுகள் என நுழைக்கப்பட்டிருப்பதனால், கோவில்களின் அமைப்பே மாறியுள்ளதை, சுலபமாகக் கண்டறியலாம். ஆக, அந்த ஸ்ரீசக்கரம் இப்பொழுது எப்படியுள்ளது, என்பதை ஆகாயத்திலிருந்து தான் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.

நகரேஸு காஞ்சி / நகரேசு காஞ்சி– நகரமென்றால் காஞ்சிதான்: நகரேஸு காஞ்சி[3] – நகரமென்றால் காஞ்சிதான், அதாவது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்றால், காஞ்சிபுரத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்[4]. இப்பொழுது நகர நிர்மாணம், நகர அமைப்பு, நகர அமைப்புத் திட்டம், என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், முன்பே, அந்நகரம் கோவில்களை மையமாக வைத்துக் கொண்டு அமைக்கப் பட்டதால், அது ஸ்ரீசக்கரவடிவத்தில் அமைந்தது. காஞ்சிபுரத்தில் 2500-2000 வருடங்களுக்கு முன்பு, உலக பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் இருந்துள்ளது. அப்பொழுது, உலகத்தின் பல பகுதிகளிலிருந்து, இங்கு வந்து படித்து வந்தார்கள். மணிமேகலையில், எப்படி பற்பல சித்தாந்தவாதிகள், காஞ்சிபுரத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தனர் என்பதனை சீத்தலைசாத்தனார் விளக்கியுள்ளார். அப்படியென்றால், அவர்கள் அங்கு வந்து வாதிட்டு வென்றால் தான், அவர்களது அறிவுத்தன்மை மற்றவர்களால் அறிந்து பாராட்டப்படும், ஏற்றுக்கொள்ளப்படும், என்ற நிலை இருந்தது தெரிகிறது.

காஞ்சிபுரம் சக்திபீடமாக, சக்தி வழிபாட்டுஸ்தலமாக இருந்துள்ளது: அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் முக்கியமானதாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வாயாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. காஞ்சிபுரம் சக்திபீடமாக, சக்தி வழிபாட்டுஸ்தலமாக இருந்துள்ளது:

அறம் வளர்த்தீஸ்வரர் கோவில்: அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் என்பது இப்பொழுது “வளர்த்தீஸ்வரன் கோவில்” கோவில் ஆகிவிட்டது, அதுபோலவே, அத்தெருவும் “வளர்த்தீஸ்வரன் கோவில் தெரு” என்றுதான் உள்ளது. நாட்டில் அறம் போய்விட்டது, பிறகு, கடவுளுக்கு மரியாதையும் போய்விட்டது போலும்.

 • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
 • அறம் வளர்த்தீஸ்வரர் என்பது மருவி மக்களிடையே வளத்தீஸ்வரர் என்று வழங்குகிறது.
 • மூலவர் – அழகான சிவலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார்[5].

இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.

கனி கண்டீஸ்வரர் கோவில்: இது கணி கண்டீஸ்வரர் கோவில் என இருந்திருக்க வேண்டும். இது கருக்கினில் அமர்ந்தவள் கோவிலுக்கு அருகில் உள்ளது. இங்கு லிங்கம் 16-பட்டைக்களுடன் இருக்கிறது. மேலே மணி / கணி இருந்திருக்க வேண்டும், ஆனால், இப்பொழுது இல்லை. கணி என்றால் எண்ணு, கூட்டு, எண்களுடன் வேலை செய், மதிப்பீடு செய், உத்தேசி, என்று பொருள்வரும். கணிதம் என்றால் கணக்கு, சோதிடம், வானியல், என்று வியும். கணிகன் என்றால், சோதிடன், கணிகம் என்றால் நூறுகோடி, ஆக  கணிகண்டவர் என்றால் சகலத்தையும் கண்டவர், அறிந்தவர், முக்காலத்தையும் உணர்ந்தவர் என்றெல்லாம் பொருள்வரும். கணிகம் என்றால் மதிப்பற்றது என்றும் பொருள்வரும். அதாவது, மடிப்பற்ற மணி, நாகமணி லிங்கத்தின் மீது இருந்திருக்கிறது, இப்பொழுது இல்லை. அது இருந்ததால், கணிகண்டீஸ்வரர் ஆனார்.

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி (உழவாரப்பணிக்கு முன்பு)

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் வலதுபகுதி (உழவாரப்பணிக்கு முன்பு)

கர்ப்பக்கிருகத்தின் மேலுள்ள கோபுரத்தின் வலதுபகுதி

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் பின்பக்கம்

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி (செடிகளுடன்)

சுவர்களில் வெள்ளையடுக்கும் வாண்டுகள்

வளர்ந்துள்ள செடிகளை கழிக்கின்றனர்

விக்கிரங்களைப் பெண்கள் சுத்தப்படுத்த ஆரம்பிக்கின்றனர். பின்னால் வெள்ளையடிப்பதையும் காணலாம்.

துணிகளை துவைத்துக் காயப்போட்டுள்ளனர்

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி – வெள்ளையடிக்க சுண்ணாம்பைக் கலக்கின்றனர்.

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி (செடிகள் அப்புறப்படுத்தியப் பிறகு)

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி (செடிகள் அப்புறப்படுத்தியப் பிறகு – இன்னொரு கோணத்தில்)

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி (செடிகள் அப்புறப்படுத்தியப் பிறகு – இன்னொரு கோணத்தில்)

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் பின்பக்கம் – நந்திகளுக்கு வெள்ளையடிக்கும் உழவாரப்பணியாளர்.

விக்கிரங்களை சுத்தப்படுத்தும் பெண்கள்

விக்கிரங்களை சுத்தப்படுத்தும் பெண்கள்

விக்கிரங்களை சுத்தப்படுத்தும் பெண்கள்

வளர்ந்துள்ள செடிகளை கழித்தப்பின்னர் வெள்ளையடிக்கப்பட்டுள்ள நிலை

கோவிலின் உட்பகுதி சுவர்கள் வெள்ளையடிக்கப்படுகின்றன.

வேலைக்குப் பிறகு இளைப்பாறும் சிறுமிகள்

வெள்ளையடித்தப் பிறகு, சுவர்களில் “சிவசிவ” என்றெழுதும் உழவாரப்பணி சித்திரக்காரர்.

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி – வெள்ளியடித்து பெயர் எழுதப்பட்டுள்ளது.

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி முழுப்பகுதி (செடிகள் அப்புறப்படுத்தியப் பிறகு) – வள்ளையடுத்து, செம்மண் கோடுகள் வரைப்படுகின்றன.

இளைப்பாறும் நேரத்தில், பக்தியுடன் பாடும் ஒரு சிறுமி

இளைப்பாறும் நேரத்தில், பக்தியுடன் பாடும் ஒரு சிறுமி

கோவில் மதிற்சுவர் வெளிப்பக்கம் இடதுபகுதி நுழைவு வாசலுடன் (உழவாரப்பணிக்கு முன்பு)

இக்கோவிலில் சென்ற வருடம் நகை கொள்ளை போயுள்ளது: விசாரித்ததில், சென்ற வருடம், ஜூன் 20-ம் தேதி 2009 கருக்கினில் அமர்ந்தவள்கோயில் தெருவில் கணிகண்டீஸ்வரர் கோயிலில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். ஆகையால், பல வருடங்களுக்கு முன்பு, அம்மணியை யாரோ திருடிச்சென்றதில், ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இக்கோவிலில் சென்ற வருடம் நகை கொள்ளை போயுள்ளது: விசாரித்ததில், சென்ற வருடம், ஜூன் 20-ம் தேதி 2009 கருக்கினில் அமர்ந்தவள்கோயில் தெருவில் கணிகண்டீஸ்வரர் கோயிலில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். ஆகையால், பல வருடங்களுக்கு முன்பு, அம்மணியை யாரோ திருடிச்சென்றதில், ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பல கோவில்கள், கோவில் மாண்பங்கள், நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன: ஏப்ரல் மாதம் 2008ல். 500 வருடங்கள் பழமையான விஜயநகர சிற்பங்கள் கொண்ட கோவில் மண்டபம் இடிக்கப்பட்டது[6]. கோவில் நடுவில் உள்ளது, ஆனால், சுற்றிலும் வீடுகள், கடைகள் சூழ்ந்துள்ளன. பக்கத்தில் உள்ள மண்டபத்தில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. இப்படி பல கோவில்கள், கோவில் மண்டபங்கள், நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன ஆக்கிரமிப்பில் உள்ளன. பல கோவில்களின் பக்கத்தில், மாமிசம் விற்கப்படுகின்றது. ஞாயிற்றுக் கிழமை என்றால் சொல்லவே வேண்டாம், தாவர உணவு உண்போர் கதி அதோகதிதான். கோவிலுக்கு செல்லும் வழிகளில், முகத்தைத் திருப்பிக் கொண்டு, மூக்கை மூடிக்கொண்டுதான் செல்லவேண்டும்.

வேதபிரகாஷ்

© 30-11-2010


[1] சில கோவில்களில், ஜைன-பௌத்த சிலைகள் இருப்பதை வைத்துக் கொண்டு, அவை ஜைன-பௌத்த கோவில்கள், இந்துக்கள் அவற்றை இடித்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். ஆனால், அவற்றின் இருப்பிடம், அமைப்பு முதலியவற்றை உன்னிப்பாகப் பார்த்தால், அவை, பிற்பாடு செதுக்கப்பட்டது அல்லது நுழைக்கப்பட்டது / கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியலாம். உதாரணத்திற்கு கருக்கினில் அமர்ந்தவள் கோவிலில் ஜைன-பௌத்த சிலைகள் சக்தி சிலைகளுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்தவித காரணமும் இல்லை. கிதைத்துள்ள சிலைகளை, மக்கள் விருப்பம்போல வைத்துள்ளார்கள்.

[2]மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://atheismtemples.wordpress.com

[3] இப்பொழுதுகூட ஸ்ரீ நகரேசு காஞ்சி ஆத்தூர் கிராமத்தில் உள்ளது.

[4] அண்ணாவோடு நெருங்கிப் பழகியவர்களுள் ஒருவரான இசையியல் வல்லுநர் டாக்டர் பி.எம்.சுந்தரம் சொன்னதாவது, “ஒரு முறை நான் அண்ணாவிடம் உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்டதற்கு அண்ணா ‘நாரீசு ரம்பா, நகரேசு காஞ்சி, புஷ்பேசு சாதி, புருஷேசு விஷ்ணு’ என்று சமஸ்கிருதத்தில் வரும் வரிகளை சொன்னார். உங்களுக்கு சமஸ்கிருதம் கூட தெரியுமா என்று கேட்டதற்கு. அதெல்லாம் படிக்கவேண்டும் எனக்கு ஆசை என்று சொன்னார்” என்ற செய்தியை வழங்கினார். இந்த வரிகள் காளிதாசரின் இலக்கியத்தில் வருகிறது.

http://arignaranna.info/centenary_news/centenary_news_tanjore.htm

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அறம் வளர்த்தீஸ்வரர், கணி கண்டீஸ்வரர், கனி கண்டீஸ்வரர், கருக்கினில் அமர்ந்தவள், காஞ்சிப் புராணம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சீத்தலைசாத்தனார், செங்கல்சுதை, நகர அமைப்பு, நகர அமைப்புத் திட்டம், நகர நிர்மாணம், நகரேசு காஞ்சி, நகரேஸு காஞ்சி, மணிமேகலை, ஸ்ரீசக்கரம் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010)

 1. S. M. Somasundaram சொல்கிறார்:

  உழவாரப்பணி பற்றி தங்களது இடுகைகளைப் படித்தேன்.

  நன்றாக இருக்கிறது.

  சில புகைப்படங்களைப் பற்றி விவரங்கள் மாறியிருக்கின்றன. சில புகைப்படங்கள் சேர்க்கவில்லை என்பதும் தெரிகிறது, ஏனெனில், விவரம் உள்ளது படம் இல்லை.

 2. Vasuki Manivacakam சொல்கிறார்:

  Long live the work of Uzhavarappani people.

  Besides cleaning, whitewashing etc., they should advise others to do some repairs of the temple, so that the structures could withsand more time.

  It is said that the Gopura structures of more than 100 feet would stad for about 500 years and they have to be reconstructed for contituity.

  The recent collapse of Sri Kalahast temple perove the fact

 3. Pingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s