வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)

வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)

கோவில்களின் இருப்பிடம்: அக்டோபர் 24ம் தேதி, 2010 அன்று வடமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்வதற்காக குழுக்கள் சென்றன.  தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியபாளையத்திற்கு செல்லும் வழியில் இடது பக்கத்தில் இக்கோவில் உள்ளது. உள்செல்லும் சிறிய தெருவின் இடது பக்கம் ஆதிகேசவ பெருமாள் கோவிலும், வலது பக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. ஆதிகேசவ பெருமாள் கோவிலின் முன் வண்டிகள் நிறுத்தப்பட்டன.

Adikesavaperumal-temple-vadamadurai.2010

Adikesavaperumal-temple-vadamadurai.2010

கோவில்களின் நிலை: இருகோவில்களும் சமீபத்தில் வெள்ளையடிக்கப்பட்டிருந்ததால், ஓரளவிற்கு சுத்தமாகவே இருந்தன. பெருமாள் கோவிலின் சுற்றுப்பிரகாரத்திலும், சிவன் கோவிலின் வாசலிலும்தான் செடிகொடிகள் வளர்ந்து மண்டி கிடந்தன. குறிப்பாக, சிவன் கோவில் வாசலில் இருபுறமும் அதிகமாகவே இருந்தது. ஆகவே, பக்தர்கள், காலையுணவு அருந்திவிட்டு உடனே பணியைத் துவங்கி விட்டார்கள்.

பெருமாள் கோவிலில் மேற்கொண்டப்பணி:  பெருமாள் கோவிலின் உட்பகுதியிலுள்ள செடி-கொடிகள் அகற்றப்பட்டன. தாயாருக்கு சாத்தப்பட்ட துணிமணிகள் துவைத்து, சுத்தப்படுத்தப் பட்டது. பூஜைப் பாத்திரங்கள் பளப்பளவென்று சுத்தப்படுத்தி அலம்பிக் கொடுக்கப்பட்டன. வலதுபக்கம் வளர்ந்திருந்த துளசிச் செடிகளைத் தவிர மற்றவை அகற்றப்பட்டன.

சிவன் கோவிலில் மேற்கொண்ட உழவாரப்பணி: சிவன் கோவிலின் மதிற்சுவர்கள் உள்ளேயும் வெளியேயும் வெள்ளையடிக்கப்பட்டு, வெளிப்புற சுவரில் நுழைவு வாசலின் இடது பக்கம் “சிவ-சிவ”, …….வலது பக்கம் “அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை” என்று எழுதப்பட்டன. இந்த நுழைவு வாயிலுக்கு முன்பாக மண்டி கிடந்த செடி-கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் படங்களில் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

ஆதிகேசவ பெருமாள் கோவிலின் சிறப்பு: வடமதுரை ஆதிகேசவ பெருமாள் கோவில் பெரியபாளையத்திற்கு போகும் வழியில் சென்னை-கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை(எண்.5) யில் சென்னையிலிருந்து 40 கி.மீ / பெரியபாளைத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. கோவில் சமீபத்தில் (2001) கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், சுவர்கள் எல்லாம் வெள்ளையடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உள்ள கல்வெட்டுகள் ராஜராஜ சோழனின் காலத்திற்கு செல்கிறது. Adi Kesava Perumal Koil, Vada Madurai Village Othukottai Taluk, Tiruvallur District 601 102.

Vadamadurai-temple-inscription

Vadamadurai-temple-inscription

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது: ராஜேந்திர சோழன் தான் கோசலதேசத்தை வெற்றிக் கொண்டதன் நினைவாக இந்த கோவிலைக் கட்டியதாக கல்வெட்டு கூறுகின்றது[1]. “வடிவழகிய ராமனை” அதனால் அங்கு நிருவியதாகவும் கல்வெட்டு கூறுகிறது. ராஜேந்திர சோழன் ஐம்பது ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்கு அளித்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது[2]. பாக்கு கொட்டை மற்றும் இலை விவசாயம் செய்து அதை சீதா-ராம கல்யாணம் போது படைப்பதற்காக கொடுத்தாக உள்ளது[3]. அதாவது, அக்குறிப்பிட்ட விவசாயத்தை அவ்வாறு ஊக்குவித்ததாகத் தெரிகிறது.

பல்லவர் காலத்தின் முதல் கோவில் கட்டப்பட்டது: பழைய கல்மண்டபம் (நுழைவுவாயிலின் வலது பக்கத்தில் உள்ளது, இப்பொழுது மடப்பள்ளி என்கிறார்கள், அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்), அதன் தூண்கள், தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், மற்றும் கொடிகம்பத்திற்கு முன்பாக போடப்பட்டுள்ள ஒரு பீடம், அதன் கலை நயம் – அதாவது செதுக்கப்பட்டுள்ள வடிவமைப்புகள் முதலியவற்றைப் பார்க்கும்போது, முன்னர் பல்லவர்கள் கட்டிய கோவில் ஒன்று இருந்திருப்பது தெரிகிறது. தாயார் சன்னிதி மண்டபமும் பல்லவ காலத்தைக் காட்டுகிறது. அதன் சுவர்களில் சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன[4]. மேலும் கோவிலுக்கு வெளியே, வாயிலின் இருபக்கமும் ஐந்து சிங்கச் சிற்பங்களை வைத்துள்ளனர். ஆனால், நன்றாக வெள்ளையடித்துள்ளதால் அதன் விவரங்களை பார்க்கமுடியாத நிலையில் உள்ளன[5].

பல்லவர் காலத்தில் பெரிய கோவில் இருந்திருக்கக்கூடும்: ஆனந்தவல்லி அம்பாள் உடனுரை அகத்தீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது. இந்த இரண்டு கோவில்கள் அருகாமையில் உள்ளது, மேற்குறிப்பிட்ட மண்டம் இருப்பது (பெருமாள் கோவிலின் தென்கிழக்கில்), இடையில் வெற்றிடம் மற்றும் அருகாமையில் சிகப்புநிற பெருங்கற்கள் குவிக்கப்பட்டிருப்பது முதலியவை, முன்பு அங்கு பல பிரகாரங்கள் கொண்ட ஒரு பெரிய கோவில்  (Temple complex) இருப்பதைக் காட்டுகிறது. இப்பொழுது இரண்டு கோவில்களுக்கும் சுவர்கள் செங்கற்களினால் சமீபத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. குறுக்கில் சாலை சென்றாலும், அதுவரை கோவில் நிலம் உள்ளது. அதாவது, இரண்டு கோவில்களின் நடுவே கோவில் நிலம் பிரிக்கப்பட்டு அதன் வழியாக ரோட் போடப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த மண்டபம் நடுவில் உள்ளது. இந்த சிகப்புநிற பெருங்கற்கள் சாதாரணமாக கோவில் மதிற்சுவர்கள் கட்டப் பயன்படுத்துவார்கள்.

பெருமாள் கோவில் இடது பக்கம் செடிகள் வளர்ந்துள்ளவை நீக்கப்பட்டன.

இன்னொரு கோணத்தில்

வேலை ஆரம்பித்துவிட்டது!

மடப்பள்ளியின் கூரை

பல்லவர்காலத்துத் தூண்கள்

இடது பகுதி

துவைக்கவேண்டிய தூணிகள்

வெளியே இருக்கும் சிங்கச் சிற்பங்கள் (பல்லவர் காலம்)

மற்றொரு சிங்கம்

சிவன் கோவில் வாசலில் உழவாரப்பணி

பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள். சுவர் வெள்ளையெடிக்கப்படுகிறது.

பெருமாள் கோவில் தூய்மைப்படுத்திய பிறகு (இடது பகுதி)

பெருமாள் கோவில் தூய்மைப்படுத்திய பிறகு (வலது பகுதி)

பெருமாள் கோவில் தூய்மைப்படுத்திய பிறகு (இடது பகுதி)

பெருமாள் கோவில் தூய்மைப்படுத்திய பிறகு (இடது பகுதி – மேலேயுள்ள படத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்)

பெருமாள் கோவில் தூய்மைப்படுத்திய பிறகு (இடது பகுதி). துளசி செடிகள் விடப்பட்டுள்ளன.

நுட்பத்துடன் கூடிய பீடம் – கொடிக்கம்பத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

இடதுபக்க மேடைமீது (பெருமாள் கோவில் உள்ளே) தனியாக வைக்கப்பட்டுள்ள பிள்ளையார்.

சிவன்கோவில் சுவர் – வெள்ளையெடித்து “சிவசிவ” எழுதிய பிறகு (இடது பக்கம்)

சிவன்கோவில் சுவர் – வெள்ளையெடித்து “அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை” என்று எழுதிய பிறகு (வலது பக்கம்)

சிவன் கோவில் நுழைவு வாயில்

சிவன் கோவில் – உள்புறம் – இடது பக்கம் – வெள்ளையடித்து சுத்தப்படுத்தியப் பிறகு

முழுவதுமாக சுத்தம் செய்யப் பட்ட சிவன் கோவில் வாசல்

பணி முடிந்து விட்டது!

ஆனந்தமாக வேலை செய்யும் திரு.ஆனந்தன் நடுவில்

அஞ்சலி: திரு. ஆனந்தன் என்ற ரெயில்வே ஊழியர் உழவாரப்பணியைச் செய்து கொண்டிருக்கும் போதே எதிர்பாராதவிதத்தில் உயர் ரத்த அழுத்ததினால் மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக பெரியபாளையம் மற்றும் ஆரணி மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், துரதிருஷ்டமாக அவர் இவ்வுலகத்தை நீங்க நேர்ந்தது. இப்படி உழவாரப் பணி செய்து கொண்டிருக்கும் போது, தெய்வப்பணியினால் சிவலோகப் பிராப்தி அடைந்தார் என்று சொல்லலாம். இருப்பினும், அவரது குடும்பம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையை அடையக்கூடும். நிச்சயமாக மனைவி-மக்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் இருப்பர். “கலையில் சென்றபோது நன்றாகத்தானே இருந்தார்” என்று தான் தோன்றும். இந்த இழப்பு எதற்கும் ஈடானதல்ல. ஆண்டவன் அவர்களுக்கு மனசக்தியைக் கொடுத்து அருள்பாலிக்க அனைவரும் சிரத்தையாக வேண்டிக்கொள்வொமாக.

Anand-with-Sundaravadivelu

Anand-with-Sundaravadivelu

ஆனந்தமாக வேலை செய்யும் திரு.ஆனந்தன் இடது பக்கம்

Anand-2010

Anand-2010

திரு.ஆனந்தன்.

Anand-24-10-2010

Anand-24-10-2010

திரு. ஆனந்தன் அவர்கள் அன்று மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். உழவாரப்பணிக்கு வரும்போதே தலையில் கைத்துணியை தலையில் கட்டிக்கொண்டிருந்தார். அன்று ஏதோ மிகவும் ஆர்வமாக, அளவிற்கு அதிகமாக உற்சாகமாக (over-enthusiastic / inspired) வேலைசெய்வது போலத் தொன்றியது. ஏதோ ஒன்று அவரை ஊக்குவித்து ஆர்வம் மேலிட செய்கிறாரா என்றுக் கூட தோன்றியது. ஆனால், இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வேதபிரகாஷ்

© 30-10-2010


[1] சோழர்களின் சரித்திரம் தமிழகத்தில் இன்னும் முழுமையாகப் படிக்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக ராஜேந்திர சோழன், தான் ஒவ்வொரு இடத்தை வென்றதன் நினைவாக ஒரு கோவிலைக் கட்டியுள்ளான். அதில் பல கோவில்கள் அறியப்படாமலேயே உள்ளன.

[2] ராஜேந்திர சோழன் ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு கொடுதான் என்றால், இன்று என்னாவது? அந்நிலத்தை நிச்சயமாக மற்றவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பர். ராஜேந்திரனுக்குப் பிறகே இக்கோவில் கண்டுகொள்ளமல் இருந்தது கோவிலைப் பார்த்தாலே தெரிகின்றது.

[5] சிற்பங்களுக்கு , கல்வெட்டுகளின் மீது இவ்வாறு வெள்ளையடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். இல்லையென்றால் உள்ள பல அத்தாட்சிகளும், உண்மைகளை மறைந்து விடும்.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், கலை நயம், சன்னிதி, சிங்கச் சிற்பங்கள், தேசிய நெடுஞ்சாலை, பல்லவர்கள், பிரகாரங்கள், பீடம், வடிவமைப்பு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)

 1. S. M. Somasundaram சொல்கிறார்:

  ஆனந்தவல்லி அம்பாள் உடனுரை அகத்தீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது. இந்த இரண்டு கோவில்கள் அருகாமையில் உள்ளது, மேற்குறிப்பிட்ட மண்டம் இருப்பது (பெருமாள் கோவிலின் தென்கிழக்கில்), இடையில் வெற்றிடம் மற்றும் அருகாமையில் சிகப்புநிற பெருங்கற்கள் குவிக்கப்பட்டிருப்பது முதலியவை, முன்பு அங்கு பல பிரகாரங்கள் கொண்ட ஒரு பெரிய கோவில் (Temple complex) இருப்பதைக் காட்டுகிறது.
  # இதற்கான புகைப்படங்கள் காணப்படவில்லை. இன்று அத்தகைய விவரங்களைப் பதிவு செய்யப்படவில்லை என்றால், நாளைக்கு இருக்கும் ஆதாரங்களும் காணாமல் போய்விடும்.

  இப்பொழுது இரண்டு கோவில்களுக்கும் சுவர்கள் செங்கற்களினால் சமீபத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. குறுக்கில் சாலை சென்றாலும், அதுவரை கோவில் நிலம் உள்ளது. அதாவது, இரண்டு கோவில்களின் நடுவே கோவில் நிலம் பிரிக்கப்பட்டு அதன் வழியாக ரோட் போடப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த மண்டபம் நடுவில் உள்ளது.
  # இப்படி ரோடு போடும் போது அல்லது கோவில் நிலத்தைப் பிரிக்கும்போது, அரசு / பஞ்சாயத்து போர்ட் / கார்போரேஷன் போன்றவை, தொல்லியதுறை வல்லுனர்களிடம் கருத்தைக் கேட்க வேண்டும். இப்படி மாற்றினால், சரித்திர ஆதாரங்களே மாறிவிடும்.

  இந்த சிகப்புநிற பெருங்கற்கள் சாதாரணமாக கோவில் மதிற்சுவர்கள் கட்டப் பயன்படுத்துவார்கள்.
  # இதன் புகைப்படம் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 2. Vasuki Manivacakam சொல்கிறார்:

  The incidence of one of the Siva-bakta collapsing down during the divine work made me very sad, but, I tink, it could be a great prvilege that he would have gone to Kailash witrh the grace of Shiva!

  OM NAMASIVAYAH!

 3. Pingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s